Wednesday, August 1, 2007

மாறிய கிரீடம் க்ளைமாக்ஸ்

     கிரீடம் படத்தின் க்ளைமாக்ஸ் அவ்வளவாக அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். சிறுவயதிலிருந்து போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் அஜித் முடிவில் கொலைகாரனாக சித்தரிக்கப்பட்டு ஜெயிலுக்கு போவது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறதாம்.

படத்தில் வரும் க்ளைமாக்ஸைத் தவிர ஏற்கனவே இன்னொரு க்ளைமாக்ஸை எடுத்து
வைத்திருந்தாராம் இயக்குனர். அந்த க்ளைமாக்ஸ் படி அஜித் தன் அப்பா ராஜ்கிரண் கனவுகண்டதை போல போலீஸ் அதிகாரியாக ஆவது போல் இருக்குமாம்.

பழைய க்ளைமாக்ஸை எடுத்துவிட்டு படத்தில் இந்த காட்சியை சேர்க்கப் போகிறார்களாம்.

No comments: