கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜாவிடம் கீ போர்டு பிளேயராக பல படங்களில் பணியற்றியிருக்கிறார்.
வல்லவன், சென்னை 28 படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் இவருக்கு நடிப்பில் ஆர்வம் கிடையாது. நண்பன் சிம்புக்காகவும் தன் அண்ணனுக்காகவும்தான் படங்களில் நடித்தார். இசைக்குத்தான் முதலிடம்.
சென்னை 28 படத்தின் பின்னணி இசையை இவர்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரேம்ஜிக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய முன் வந்திருக்கிறார்கள். கங்கை அமரனின் வாரிசான பிரேம்ஜி முதலில் ஒப்புக்கொண்டிருக்கும் படம் வில்.
நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா. பிரபாகர் என்பவர் படத்தை இயக்குகிறார். பாண்டிச்சேரியில் இப்படத்திற்கான கம்போஸிங் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் பிரேம்ஜி. அடுத்து தன் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கும் இசையமைப்பாளர் இவரே.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment