Monday, November 12, 2007

இப்படிக்கு ரோஸ் -அல்டிமேட்டாக ஒரு அரவாணி ஷோ!


பொழுதோட கோழி கூவுற வேளை... என்று சினிமாவில் மட்டுமே பாடிக்கொண்டிருக்கிற திருநங்கைகளின் (அரவாணிகள்) வாழ்வில், விடியலை சொல்ல ஒரு கோழியும் கூவுவதில்லை என்பதுதான் வேதனை!

இந்த வேதனைக்கு மருந்து போடுகிற விதத்தில், பொழுதுபோக்கு மீடியாவிற்கு கம்பீரமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார் ரோஸ்! தான் அரவாணி என்பதே அவரே வாய் திறந்து சொன்னால்தான் அறிய முடிகிறது. நேரில் பார்த்தால் மாடல் மங்கைகளுக்கே மூச்சிரைக்கும்! அப்படி ஒரு அழகு!

சின்னத்திரை உலகில் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் டி.வி, ரோஸ் மூலமாக அரவாணிகளின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ரோஸ்? வாழ்க்கையை ஒட்டிய அத்தனை விஷயங்களையும் அலசப் போகிறார். 'லேட் நைட் ஷோ' என்ற சப் டைட்டிலுடன் உலாவரப்போகும் இந்த நிகழ்ச்சியில் எதை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் ரோஸிடம். குறிப்பாக செக்ஸ்!

அதிரி புதிரியான கேள்விகளுக்கு, அசர வைக்கும் பதில்களை சொல்ல தயாராகிக் கொண்டிருக்கும் ரோசின் பின்னணி என்ன? சென்னை சத்யபாமா என்ஜினியரிங் கல்லூரியில் என்ஜினியரிங் முடித்தவர். பிறகு வெளிநாட்டிற்கு சென்று படிப்பை தொடர்ந்திருக்கிறார். பிறவியில் ஆணாக பிறந்து அடிமனசில் பெண்ணாக சிலிர்த்த ரோஸ், வீட்டிலிருந்து ஒரு கட்டத்தில் விரட்டப்பட்டு தன் உழைப்பே தனக்குதவி என்று போராடி இன்று முன்னணிக்கு வந்திருக்கிறார். யு.எஸ், யு.கே என்று தன் எல்லைகளை விரித்துக் கொண்ட ரோசின் உதடுகளில் ஆங்கிலம் கொஞ்சுகிறது.

வெளிநாடுகளில் போற்றப்படும் அரவாணிகள், இந்தியாவில் மட்டும்தான் இழிவு படுத்தப் படுகிறார்கள். அவர்கள் எல்லா துறைகளிலும் ஈடுபட்டு வெற்றியை ஈட்டவேண்டும். குறிப்பாக அரசியலில் கூட! என்கிறார் ரோஸ்.

சொல்ல முடியாது... இந்த நிகழ்ச்சி கொடுக்கிற வெற்றி, நாளைய அரசியல் வானில் முக்கிய பதவிகளை கூட பெற்றுத்தரலாம் ரோசுக்கு! நாளை நடப்பதை யாரறிவார்?

2 comments:

Unknown said...

இப்பல்லாம்...பொழுதோட கோழி...பாட்ட பாடுறது இல்ல...அதுக்கு பதிலா "பருத்தி வீரன்" ஊரோரம் புளியமரம்... பாட்டு தேன்...

ஆனாலும்... அரவாணி ரோஸ் இந்நிகழ்சிய நல்லபடி செய்ய உளமார்ந்த வாழ்த்துக்கள்....

பின் குறிப்பு : அரவாணியா இருந்தாலும்.. அம்சமா இருக்காங்க....

Anonymous said...

ஒ..இவர் அவரா ??

எனக்கு ஒரு சந்தேகம்..என் அரவாணிஸ் கை கொட்டுதல்..வித்தியாசமாக இருக்கிறது ??