Tuesday, November 27, 2007

மீண்டும் நவ்யா அலை!

தமிழில் மீண்டும் நவ்யா நாயரின் அலை வீச ஆரம்பித்துள்ளது. கை நிறையப் படங்களில் படு பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நவ்யா.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து லேட் பிக்கப் ஆன அழகு நடிகை நவ்யா நாயர். இடையில் நவ்யாவுக்கு மார்க்கெட் சுணங்கிக் காணப்பட்டது. இப்போது கையில் 3 தமிழ்ப் படங்கள் இருக்கிறதாம். மூன்றுமே மூன்று விதமான கதை என்பதால் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார் நவ்யா.

மலையாள இயக்குநர் ஜெயராஜின் இயக்கத்தில், வின்சென்ட் அசோகனுக்கு ஜோடியாக நடிக்கும் சில நேரங்களில் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படம்.

இதுதவிர ஸ்ரீகாந்த்துடன் எட்டப்பன் என்ற படத்திலும் நவ்யா நடிக்கிறார். இது ஸ்ரீகாந்த்துக்கு கம் பேக் படம். நவ்யாவுக்கும் நம்பிக்கையூட்டும் படம்.

இதைத் தொடர்ந்து இயற்கை, ஈ ஆகிய இரு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த எஸ்.பி. ஜனநாதனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் நவ்யா நாயர்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி போடுகிறார் நவ்யா நாயர். இருவரும் இணைவது இதுவே முதல் முறை. படத்திற்குப் பெயர் பேராண்மை. இப்படத்தில் நவ்யா தவிர மேலும் நான்கு ஹீரோயின்கள் இடம் பெறுகிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதே!

No comments: