
தித்திக்கும் தீயாக தமிழ் சினிமாவைக் கலக்க ஆரம்பித்து, சரியான முறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம் என்று நினைத்த தியாவுக்கு கல்யாணமும் சதி செய்து விட்டதாம் - அதாவது கல்யாணம் ஆகாமலேயே அவருக்கும், அவருடைய காதலருக்கும் இடையிலான பந்தம் முறிந்து விட்டதாம்.
அழகுப் பெட்டகமாக தமிழ் சினிமாவுக்கு வந்த நாயகியரிடம் தியாவும் ஒருவர். நல்ல அழகு, வாளிப்பான கவர்ச்சி என எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்த தியாவுக்கு வாய்ப்புகள்தான் சரிவர வரவில்லை.
அங்கும் இங்குமாக ஓரிரு படங்களில் தலை காட்டி வந்தார். கோடம்பாக்கம் படத்தில் அமைதியான நடிப்பாலும், ஆபாசம் கலக்காத அழகாலும் கவர்ந்தார்.
அந்த சமயத்தில்தான் காதலிலும் விழுந்தார். கப்பல் கேப்டன் ஒருவருடன் காதல் கொண்ட தியா, பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடத் தீர்மானித்தார்.
இதனால் புதிய வாய்ப்புகளை நிராகரித்த அவர் கையில் இருந்த ஓரிரு படங்களையும் வேகமாக முடித்துக் கொடுத்து விட்டு காதலருடன் கல்யாணத்திற்குத் தயாரானார்.
இந்த நிலையில்தான் காதலர் தரப்பிலிருந்து கல்யாணத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தியாவை மணக்க காதலரின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போதைக்கு அமைதி காப்போம், பிறகு சம்மதம் வாங்கி விட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார் காதலர்.
இருந்தாலும் பிடிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் காதலர் கை நழுவிப் போய் விடுவாரோ என்று பயந்த தியா, காதலருடன் வீடு எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்.
கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். இந்த நிமிடம் வரை காதலர் குடும்பத்திலிருந்து பச்சைக் கொடி வரவே இல்லையாம். இதற்கு மேலும் இருவரும் சேர்ந்து வசிப்பது சரியாக இருக்காது. பிரிந்து விடலாம் என்று காதலர் கூறி விட்டாராம்.
காதல் கல்யாணத்தில் முடியாமலேயே பிரிவு பட்டுப் போனதை எண்ணி பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம் தியா.
வருத்தம் கரைந்து மீண்டும் அவர் நடிக்க வந்தாலும் வரலாம் என்று கோடம்பாக்கத்தினர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment