சுந்தர்.சி, கோபிகா, பிரகாஷ்ராஜ், சுமித்ரா, தேஜாஸ்ரீ, சந்தானம், ரமேஷ் வைத்யா நடிப்பில் டி. இமான் இசையில் கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவில் பத்ரி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஹோம் மீடியா பி. லிமிடெட்.
பிரகாஷ்ராஜ் கண்டிப்பான ஆசிரியர். கணக்கில் புலி. இந்த உலகத்தில் நடக்கும் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் அடங்கும் என்பது அவரது நம்பிக்கை. மகன் சுந்தர்.சி-யை கணக்கில் பெரிய மேதையாக ஆக்கவேண்டும் என்பது அவர் கனவு. ஆனால் சுந்தர்.சி-க்கோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம். தன் எண்ணத்துக்கு மாறாக மகன் இருக்கிறானே என்று மகனை கடுமையாகத் தண்டிக்கிறார். கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்காததற்கு மகனை விளாச, மகனோ தன்னுடன் ஒப்பிட்டு பேசப்படும் இன்னொரு மாணவனை கையில் குத்திவிடுகிறார். இதை அறிந்த பிரகாஷ்ராஜ் தன் மகனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட வெளியே வரும் சுந்தர்.சி கெட்டவனாக வருகிறார்.
அடிதடி, அடாவடி, குடி, கூத்து கும்மாளம் என்று ஆளே மாறி விடுகிறார். கணக்கு ஆசிரியரான தன் கணக்கு இப்படி தப்பாகிவிட்டதே என்று நொந்து போகும் பிரகாஷ்ராஜ் மகன் சுந்தர்.சி-யை மிகவும் வெறுக்கிறார். இப்படிப்பட்ட சுந்தர்.சி-யை டீச்சராக அந்த ஊருக்கு வரும் கோபிகா காதலிக்கிறார். சுந்தர்.சி ரவுடி என்பதால் அவரது தங்கை சந்தோஷியின் திருமணம் நின்றுபோகிறது. பிரகாஷ்ராஜ் மீது ஒரு கொலைப் பழியும் விழுகிறது. இரண்டு பிரச்சினைகளையும் சமாளித்து அப்பாவின் மதிப்பில் மகன் உயர்வதுதான் `வீராப்பு' கதை.
படம் ஆரம்பித்ததுமே சுந்தர்.சி அடிக்கிறார்; உதைக்கிறார்;
நொறுக்குகிறார்; எலும்புகளை முறிக்கிறார்; சுழற்றி வீசுகிறார்; உருட்டி புரட்டுகிறார், அப்பப்பா... ஆரம்பமே இப்படி அடிதடியாக இருக்கிறதே என்று கவலை வருகிறது. இந்த அடிதடி காட்சியை சுமார் ஒரு ரீலுக்கு உருட்டுவது போல் நீளம். முதல் படம் 'தலை நகர'த்திலும் அடியாள் இதிலும் அடிதடி! சுந்தர்.சி... அதற்குள் போரடிக்க ஆரம்பித்து விட்டாரே. சரியா? கதை, கேரக்டர் தேர்வில் கவனம் செலுத்த வேண்டாமா?
அடக் கொடுமையே... படம் ஆயிரத்தொன்றாவது ஆக்ஷன் படமாக இருக்கிறதே என்று அதிர்ச்சியுடன் உட்கார்ந்தால் கொஞ்ச நேரத்தில் நமக்குள் நிம்மதிப் பெருமூச்சு. படம் அப்பா, மகன் செண்டிமெண்ட் பற்றியும் சொல்லப் போகிறது என்கிற அறிகுறிகள் தென்படுகின்றன. மகனை கடுமையாகத் தண்டித்தால் அவன் எதிர்மறையாக மாறிவிடுவான் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் படம் பார்க்கும்போது 'வெயில்' முதல் அண்மை 'கிரீடம்' வரையில் பல படங்களில் வாசனை வீசுவதை உணர முடிகிறது.
படத்தில் முழு மதிப்பெண்களை அள்ளிக் கொண்டு போகிறவர் பிரகாஷ்ராஜ். அப்பப்பா கண்டிப்பான ஆசிரியர், பொறுப்பான அப்பா, கெளரவமான குடும்பத் தலைவர் என அத்தனை விதங்களிலும் பளிச்சிடுகிறார். சுந்தர்.சி. ஒரு ரவுடி, பொறுக்கி என்பதை ஏற்கவே முடியவில்லை. தோற்றம், பேச்சு எல்லாமே குழந்தை போல இருக்கிறது. பளிச்சென்று ஷேவ் செய்து பவுடர் போட்ட முகம், கூலிங் கிளாஸ்... இப்படி ஹீரோ போல பளிச்சென்று தோன்றுகிறார். வெள்ளை மனசுக்காரராகத் தெரியும் அவருக்கு முரட்டுத்தனம் ஒட்டவே இல்லை. வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கத்தில் ஆவேசமில்லை. சாரி சுந்தர்.சி! வழக்கம் போல முரட்டுத்தன வாலிபனை நாயகனை பிடிவாதமாகச் சுற்றித்திரிந்து காதலிக்கும் கேரக்டர் கோபிகாவுக்கு. ஐயோ பாவம்!
அவிழ்த்து விடுகிற ஆபாசங்கள், இரட்டை அர்த்த வசனங்களை மன்னித்து விட்டுப் பார்த்தால் விவேக்கின் காமடி டிராக்கை ரசிக்கலாம். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாயில்லை. பளிச்சென்று பதிகிறார்.
சுந்தர்.சி அடியாளா, பொறுக்கியா இல்லை தன் தந்தையை வெறுப்பேற்ற மட்டுமே இப்படிச் செய்கிறாரா என்பது புரியவில்லை. இந்தக் குழப்பம் வந்ததால் படம் இடைவேளைக்குப் பிறகு இழுபறியாகிவிடுகிறது. அப்பா, மகன் இருவருக்குள்ளும் 'வீராப்பு' புகுந்து கொண்டு படுத்தி வைப்பதே கதை எனலாம். ஆனால் அதை மனதில் தைக்கும்படி சொல்லவில்லை.
ஒளிப்பதிவு கே.எஸ். செல்வராஜ் அவர் பங்கைச் சரியாகச் செய்துள்ளார். பழைய வாசனை வீசினாலும் பாடல்களை கேட்க வைத்து விடுகிறார் டி. இமான். குறிப்பாக 'போனால் வருவீரோ', 'புலியை கிளி ஜெயிச்சா காதல்' பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன.
புதிய மொந்தையில் பழைய கள் தான் இந்தப் படம்.
Thursday, August 2, 2007
குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கும் கௌதம் மேனன்!
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் நடந்திருக்கிறது. இதற்கிடையில் சூர்யா, ஹரி இயக்கத்தில் வேல் படத்தில் நடிக்கிறார்!
சூர்யா வேல் படத்தை முடித்துக் கொண்டு வருவதற்குள் தான் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்கி விடலாம் என்று களம் இறங்கிவிட்டார் கௌதம் மேனன்.
இதை கேள்விபட்ட சூர்யா நீங்கள் அந்த படத்தை முடிக்க லேட்டாகுமே. நான் வேண்டுமானால் வேறொரு படத்தில் நடித்து விட்டு வரட்டுமா என்று கௌதமிடம் கேட்டிருக்கிறார். நீங்கள் வேல் படத்தை முடித்துக் கொண்டு வரும்போது நான் கண்டிப்பாக இந்த படத்தை முடித்துவிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் கௌதம்.
பிறகு சூர்யா சமாதானமாகி சரியென்றிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கும் படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படத்தை 45 நாளில் முடித்துவிடுவாராம்.

கெட்டவனை முடித்து நல்லவனாக முயற்சி செய்யும் சிம்பு!
சிம்பு கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் காளை மற்றும் கெட்டவன் படங்கள் கிடுகிடுவென்று வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் சிம்புதானாம்.
முன்பெல்லாம் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார். திடீரென்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு போய்விடுவார். அதெல்லாம் பழைய கதை. இப்போது நல்ல பிள்ளையாக மாறி ஒரு நாள் கூட வேஸ்ட் பண்ணாமல் சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட போது கூட ஷூட்டிங்கை கேன்சல் செய்ய முடியாது என்று வரமறுத்துவிட்டாராம். என்னைப்பத்தி எல்லோரும் தவறா பேசுறாங்க. அதை இல்லை என்று நிரூபிக்க இந்த இரண்டு படத்தையும் உடனடியாக முடிக்க வேண்டும் என்று காரணம் சொல்லி இருக்கிறார் சிம்பு.

Wednesday, August 1, 2007
ஸ்கேன் செய்யப்படும் ரஜினியின் உருவம்
ஆங்கர் நிறுவனத்திற்காக சூப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா, சுல்தான் என்ற அனிமேஷன் படத்தை இயக்குவது தெரிந்த செய்தி.
அந்த படத்தில் சுல்தானாக ரஜினி அனிமேஷன் படத்தில் நடிக்கிறார். படம் முழுவதையும் பார்த்த ரஜினி சௌதர்யா படத்தை நன்றாக இயக்கி இருப்பதாக பாராட்டினார்.
அதோடு இப்போது இந்த படத்திற்காக தன் மகளோடு வெளிநாடு செல்கிறார் ரஜினி. அங்கே ரஜினியின் உருவம் முழுதாக ஸ்கேன் செய்யப்பட்டு அந்த காப்பியை எடுத்து அனிமேஷன் படத்தில் பயன்படுத்த போகிறார்கள்.
இப்படத்தின் அனிமேஷன் வேலைகள் ஆஸ்திரேலியா, லண்டனில் நடைபெற இருக்கிறது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய்!
லண்டன் ஐங்கரன் மூவிஸ் கருணாஸ் படம் தயாரிப்பு பணியில் மும்பரமாக இறங்கியுள்ளார். அஜித், விஜய் இருவரிடமும் கால்ஷீட் வாங்கி வைத்துள்ளார்
இதற்கு நடுவே இயக்குனராக பிரபுதேவாவையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.முதலில் அஜித்,பிரபுதேவா கூட்டணியில் படம் பண்ணுவதாக இருந்தது.அஜித் டிசம்பர் மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஆனால் பிரபுதேவா இந்திப் படம் ஒன்றை முடித்துவிட்டு வருவதற்கு 2008 மார்ச் ஆகுமாம்.அதுவரை காத்திருக்க முடியாது என்று அஜித் சொல்லிவிட்டார்.
மார்ச் மாதம் விஜய் கால்ஷீட் இருப்பதால்...விஜய்,பிரபுதேவா கூட்டணியில் மீண்டும் படம் பண்ணுவது என கடைசியாக முடிவெடுத்திருக்கிறார்கள்.
அஜித் கொடுத்த தேதிக்கு படத்தை எடுக்க வேறொரு பிரபல இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நடிப்பதில் விருப்பம் இல்லாத இசையமைப்பாளர்
கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜாவிடம் கீ போர்டு பிளேயராக பல படங்களில் பணியற்றியிருக்கிறார்.
வல்லவன், சென்னை 28 படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் இவருக்கு நடிப்பில் ஆர்வம் கிடையாது. நண்பன் சிம்புக்காகவும் தன் அண்ணனுக்காகவும்தான் படங்களில் நடித்தார். இசைக்குத்தான் முதலிடம்.
சென்னை 28 படத்தின் பின்னணி இசையை இவர்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரேம்ஜிக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய முன் வந்திருக்கிறார்கள். கங்கை அமரனின் வாரிசான பிரேம்ஜி முதலில் ஒப்புக்கொண்டிருக்கும் படம் வில்.
நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா. பிரபாகர் என்பவர் படத்தை இயக்குகிறார். பாண்டிச்சேரியில் இப்படத்திற்கான கம்போஸிங் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் பிரேம்ஜி. அடுத்து தன் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கும் இசையமைப்பாளர் இவரே.

மாறிய கிரீடம் க்ளைமாக்ஸ்
கிரீடம் படத்தின் க்ளைமாக்ஸ் அவ்வளவாக அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். சிறுவயதிலிருந்து போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் அஜித் முடிவில் கொலைகாரனாக சித்தரிக்கப்பட்டு ஜெயிலுக்கு போவது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறதாம்.
படத்தில் வரும் க்ளைமாக்ஸைத் தவிர ஏற்கனவே இன்னொரு க்ளைமாக்ஸை எடுத்து
வைத்திருந்தாராம் இயக்குனர். அந்த க்ளைமாக்ஸ் படி அஜித் தன் அப்பா ராஜ்கிரண் கனவுகண்டதை போல போலீஸ் அதிகாரியாக ஆவது போல் இருக்குமாம்.
பழைய க்ளைமாக்ஸை எடுத்துவிட்டு படத்தில் இந்த காட்சியை சேர்க்கப் போகிறார்களாம்.

Subscribe to:
Posts (Atom)