Friday, November 16, 2007

கமல்ஹாசன் மீது கொலை மிரட்டல் வழக்கு

திரைப்பட உதவி இயக்குநர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் கமல்ஹாசன் மீது தாம்பரம் போலீஸார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். உதவி இயக்குநரான இவர், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் கதை தனக்குச் சொந்தமானது என்று கூறி வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வழக்கு கீழ் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், கமல்ஹாசன் மீது தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் செந்தில்குமார் கடந்த 6ம் தேதி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், கமல்ஹாசன் அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார். அடியாட்கள் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தாம்பரம் நீதிமன்றம், நடிகர் கமலஹாசன், முரளி, கார்த்திக் பிரபு, நிகில் முருகன் மற்றும் அடையாளம் தெரியாத ஏழு பேர் மீது அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தாம்பரம் போலீஸாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி போலீஸார் மேற்கண்டவர்கள் மீது வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டுக்கு போக மாட்டேன் - ஸ்ரீஜா

எனது வீட்டுக்கு இனி போகும் எண்ணம் இல்லை. முதலில் என்னைப் புரிந்து கொண்டு எனது குடும்பத்தினர் எனது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கூறியுள்ளார்.

சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா சில மாதங்களுக்கு முன்பு தனது காதலர் சிரீஷ் பரத்வாஜை ரகசியத் திருமணம் செய்து கொண்டு சிரஞ்சீவி குடும்பத்தினரையும், ரசிகர்களையும், ஒட்டுமொத்த ஆந்திராவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சில வார டெல்லி வாசத்திற்குப் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தனது கணவர் வீட்டில் தற்போது வசித்து வரும் ஸ்ரீஜா, தனது குடும்பத்தினர் திருமணத்தை அங்கீகரிக்கும் வரை வீட்டுக்கே போகப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

கணவர் சகிதம், ஸ்ரீஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றினால் எந்த பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அந்த வகையில் என்னுடைய பெற்றோர் திருமண விஷயத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை.

இப்போது எனது தந்தை என் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக பத்திரிக்கைகள் வாயிலாக அறிவித்திருந்தாலும், இனிமேல் நான் எக்காரணம் கொண்டும் எனது வீட்டுக்கு போகமாட்டேன். எனது கணவரின் வீட்டில் தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

விஷ்ணுவர்த்தனுடன் அர்ஜூன

அஜீத்தை வைத்து பில்லாவை வெற்றிகரமாக இயக்கியுள்ள விஷ்ணுவர்த்தன் அடுத்து அர்ஜூனை வைத்து சர்வம் என்ற படத்தை இயக்கப் போகிறார். இதில் விஷ்ணுவின் விருப்ப நாயகன் ஆர்யாவும் இடம்பெறுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அய்ங்கரண் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் சர்வம் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இப்போது அதில் மாற்றம். சூர்யா படத்தில் இல்லை, மாறாக அர்ஜூன் ஹீரோவாகியுள்ளார். படத்தில் 2வது ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார்.

சூர்யா ஏன் படத்தில் இடம் பெறவில்லை என்று கோலிவுட்டில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று கூறி சூர்யாவே விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது வாரணம் ஆயிரம் பட ஷூட்டிங்குக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

சர்வம் படத்தில் விஷ்ணுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, கேமராமேன் நீரவ் ஷா ஆகியோரும் இருப்பார்கள் எனத் தெரிகிறது. இந்தப் படம் மியூசிக்கல் திரில்லராக இருக்குமாம். படம் முழுவதும் மூணாரில் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. டிசம்பர் மத்தியில் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.

அழகிய தமிழ் மகன் - விஜய் அதிருப்தி

அழகிய தமிழ் மகன் படத்தின் கதையை எனது ரசிகர்கள் விரும்பவில்லை, அதை ஏற்கவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்து, தீபாவளிக்கு ரிலீஸான அழகிய தமிழ் மகன் தீபாவளி ரேஸில் பிந்தியுள்ளது. இப்படத்தின் கதையும், விஜய்யின் கேரக்டரும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

இதை விஜய்யும் ஆமோதித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இயக்குநர் (பரதன்) என்னிடம் கதையைச் சொன்னபோது இது வித்தியாசமான படமாக இருக்கும் என நினைத்தேன். அதனால்தான் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டு நடித்தேன்.

படம் குறித்த அறிவிப்பு வெளியான பிந்னரும் கூட, அனைவரிடமும், இது எனது வழக்கமான படம் அல்ல, வித்தியாசமான படம் என்றுதான் சொல்லி வந்தேன். இதைப் பார்க்க மனதளவில் தயாராகுங்கள் என்றும் கூறி வந்தேன்.

இப்போது படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு இரு விதமான ரிசல்ட் (ஆதரவு, அதிருப்தி) கிடைத்துள்ளதை ஒத்துக் கொள்கிறேன். இருப்பினும் 2, 3 தடவை படத்தைப் பார்த்த பின்னர் எனது நடிப்பை பாராட்டத் தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார் விஜய்.

அதேசமயம், வெளிநாடுகளில் அழகிய தமிழ் மகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சந்தோஷமாக உள்ளனராம்.

வேல் படம் தீபாவளி ரேஸில் முந்தி விட்டதாக கூறப்படுவது குறித்து விஜய் கூறுகையில், உடனடியாக எதையும் கூற முடியாது. இப்போதுதான் படங்கள் ஓட ஆரம்பித்துள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம். 2வது வார இறுதியில்தான் நிலைமை தெளிவாகத் தெரிய வரும் என்றார் விஜய்.

படத்தின் கதை ரசிகர்களுக்குத் திருப்தி இல்லை என்று விஜய் கூறினாலும் கூட, பாடல்களும், இசையும் பிரமாதமாக வந்திருப்பதாக சந்தோஷத்துடன் கூறுகிறார்.

நிச்சயம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக எனது அறிமுகப் பாடலில் இசை பிரமாதமாக வந்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.

3 மாடல்கள்.. ஒரு கிராமம

தமிழில் 3 மாடல்கள் ஒரே படத்தில் ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். இதில் ஒருவர் மட்டும் ஏற்கனவே மதுரைப் பொண்ணு படத்தில் நடித்தவர்.

இயக்குனர் சந்தர்நாத் இயக்கவுள்ள கண்களும் கவி பாடுதே படத்தில் மிருதுளா, லிகிதா, லக்ஷனா என்ற மூன்று ஜிலேபிகள் அறிமுகமாகின்றனர்.

இதில் லக்ஷனா ஏற்கனவே மதுரைப் பொண்ணு படத்தில் பூஜா என்ற பெயரில் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் தான்.

இவரும் மற்ற இருவருமே ஏராளமான விளம்பரங்களில் போஸ் கொடுத்த மாடல்கள் தான். இவர்களுக்கு ஜோடியாக ஆகாஷ், ரத்தன், ரஞ்சித் ஆகிய மூன்று ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

இதில் ரஞ்சித் கேரளாவைச் சேர்ந்தவர். மலையாளத்தில் கமல் இயக்கத்தில் கோல்மால் என்ற படத்தில் நடித்தவர் தான்.

ஆகாஷ் சென்னையில் பிரபல மாடல். ரத்தன் 15க்கும் மேற்பட்ட படங்களில் சின்னப் பையனாக இருந்தபோது ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்தவர். இப்போது வளர்ந்து ஹீரோவாகிறார்.

இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இசை தான் ஹை-லைட். செம கலக்கலான 5 பாடல்களுக்கு 30 நிமிடத்தில் ட்யூன் போட்டுத் தந்துவிட்டார் என்பதை முன்பே சொல்லியிருக்கிறோம். இப்போது ரெக்கார்டிங்கும் முடிந்துவிட்ட நிலையில் சூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

3 பசங்களும் தோழனின் திருமணத்துக்காக சென்னையிலிருந்து கிராமத்துக்குப் போகின்றனர். அங்கு 3 தேவதைகளைக் கண்டு சொக்கிப் போய் காதலில் விழுகின்றனர். இந்தக் காதலுக்கு கிராமத்தில் எழும் எதிர்ப்பும், காதலர்களின் லொள்ளும், ஜொள்ளுமாக கதை போகிறதாம்.

படத்தைத் தயாரிப்பது ரியல் எஸ்டேட்டில் கோடிகளைப் பார்த்த கங்கமணி, நானாகுமார் மற்றும் ரமேஷ். ஐடிசி என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடல் கொந்தளிப்பில் மாட்டிய நடிகை



சென்னை கடற்கரையில் நடந்த படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் நடிகை ஸ்ருதி ராஜ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை ஸ்பாட்டில் வெடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீனவர்கள் நீந்திச் சென்று மீட்டதால் உயிர் தப்பினார்.

சென்னையில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் எல்லாம் தண்ணீர் புகுந்தது.

அப்போது நீலாங்கரையில் இயக்கம் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதிக்கு இது 7வது படம்.

சஞ்சய் ராம் இயக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் நீலாங்கரையில் நடந்து கொண்டிருந்தபோதே அலைகள் மிக பயங்கரமாக எழுப்பின. ஆனாலும் அதை பொருட்படுத்தாது சூட்டிங்கை நடத்திக் கொண்டிருந்தனர்.

கடலின் மிக அருகே ஸ்ருதி ராஜ் நடப்பது ேபான்ற ஒரு காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது மிகப் பெரிய அலை அவரை தூக்கி வீசியது. அடுத்த அலை அவரை கடலுக்குள் இழுத்தது. நிலை தடுமாறிய ஸ்ருதி உதவி கேட்டு அலற, நிலைமையை உணர்ந்த சில மீனவர்கள் கடலுக்குள் பாய்ந்து ஸ்ருதியை மீட்டு கரைக்கு இழுத்து வந்தனர்.

பயத்தில் மயங்கிவிட்ட ஸ்ருதியை உடனே மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு சூட்டிங்கை பேக்-அப் செய்தார்களாம்.

இப்போது நலமுடன் இருக்கிறாராம் ஸ்ருதி.

Thursday, November 15, 2007

விமானங்களில் 'மது': எம்.பி.க்கள் கோரிக்கை

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் போது குடிக்க மது பானம் தர வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் விமானத்துறையை மேம்படுத்த தனிக்குழு உள்ளது. இந்தக் குழுவில் எம்.பி.க்களும் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழுவினுடைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி உட்பட ஏராளமான எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

அப்போது விமான சேவையில் வருவாயை அதிகரிக்க பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பிக்கள், உள்நாட்டு விமானங்களில் இந்திய தயாரிப்பு மது வகைகளான ஒயின், பிராந்தி போன்றவற்றை கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

பிராந்தி, ஒயின் தயாரிப்பில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதைக் கேட்ட அமைச்சர் பிரபுல் படேல், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் மட்டும் தான் மதுபானங்கள் கொடுக்கப்படுகின்றன. உள்நாட்டு விமான சேவைகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக இந்திய தயாரிப்பு மது வகைகளை உள்நாட்டு விமானங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை பெரும்பாலானோர் ஆதரித்துள்ளனர்.

இதுகுறித்து விரைவில் பரிசீலித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்றார் பிரபுல் படேல்.

உலகின் 'படா' இந்திய கோடீஸ்வரர் மிட்டல்!


லண்டன்: உலகின் மிகப் பெரிய இந்திய கோடீஸ்வரர் என்ற பெருமையை ஸ்டீல் நிறுவன அதிபர் லட்சுமி மிட்டல் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி பெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை முகேஷ் மறுத்தார். மேலும் இதுதொடர்பான பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழும் முகேஷ் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என அறிவிக்கவில்லை.

இந் நிலையில் போர்ப்ஸ் இதழ் உலகின் மிகப் பெறும் பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மிகப் பெரிய இந்திய பணக்காரராக லட்சுமி மிட்டல் இடம் பெற்றுள்ளார்.

மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சியின் காரணமாக மிட்டல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 51 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களில் முதல் நான்கு பேரின் சொத்து மதிப்பு மட்டும் 181 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை இரண்டு மடங்குக்கும் கூடுதலாகும்.

ஆசிய அளவில் இந்தியாவிலிருந்து 40 பேர் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்து புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிட்டல் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 51 பில்லியன் டாலராகும்.

முகேஷ் அம்பானி 49 பில்லியன் டாலர் சொத்துடன் 2வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 30.5 பில்லியன் டாலரிலிருந்து 49 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

3வது இடத்தில் அனில் அம்பானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 45 பில்லியன் டாலராகும். இவரது சொத்து முன்பு 30.2 பில்லியன் டாலராக இருந்தது.

டி.எல்.எப் நிறுவன அதிபர் குஷால் பால் சிங் 35 பில்லியன் டாலர் சொத்துடன் 4வது இடத்தில் உள்ளார். மேலும், உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் அதிபராகவும் இவரது நிறுவனம் உயர்ந்துள்ளது.

உலகின் மிகப் பெறும் பத்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிட்டல் 5வது இடத்தில் உள்ளார்.

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள 29 பேர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகப் பெரும் அளவில் பண மதிப்பை ஈட்டியுள்ளனர். இதில் ராகுல் பஜாஜின் சொத்து மதிப்பு மட்டும் உயராமல் நிலையாக உள்ளது.

கெளதம் அடானி, ஆனந்த் ஜெயின் (இவர் முகேஷ் அம்பானியின் பள்ளித் தோழர்), கெளதம் தாப்பர், நிரஞ்சன் ஹிரனண்டாணி, ராகேஷ் வத்வான், ஆகியோர் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

காதலி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்கும் காதலன

தூத்துக்குடி: தன்னைக் காதலித்த பெண் ஏமாற்றிவிட்டதால், காதலிக்கு செலவழித்த பணத்தைக் கேட்டு காதலன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் தபால்-தந்தி காலனியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென்று ஜெபக்குமாரை ஒதுக்க ஆரம்பித்துள்ளார் டாக்டர் காதலி. காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இதுநாள் வரை மனக்கோட்டை கட்டிய ஜெபக்குமாருக்கு தன் காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தன் காதல் கோட்டை தகர்ந்து விடக்கூடாது என்று விடாப்பிடியாக காதலியை தொடர்ந்து ஏன் என்னை விட்டு விலகுகிறாய் என்று கேட்டுள்ளார். ஆனால் டாக்டர் காதலியோ காதலன் ஜெபக்குமாரை தனக்கு யார் என்றே தெரியாது எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனால் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்த பின்னர், இரண்டு பேரும் பேசவோ, சந்திக்கவோ கூடாது என்று கூறி காதலுக்கு முற்று புள்ளி வைத்தனர்.

இதனால் மனம் உடைந்த ஜெபக்குமார், தன்னை ஏமாற்றிய காதலிக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். அதனையடுத்து அவர் தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் காதலிக்காக தான் செலவழித்த பணத்தை வாங்கி கொடுக்கும்படியும், தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடு தரும்படியும் நவீன புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் ஜெபக்குமார் கூறியிருப்பதாவது,

நான் விளம்பர ஏஜென்டாக தொழில் செய்து வருகிறேன். பிரதிவாதியான என் காதலி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். சுமார் இரண்டு வருடங்களாக எனக்கும், அவருக்கும் நல்ல பழக்கம் இருந்து வந்தது. அதன் மூலம் என்னை அவர் காதலிப்பதாக கூறி நல்ல உறவு வைத்திருந்தார்.

அப்போது நான் அவருக்கு தேவையான பொருட்கள், செல்போன், தங்கநகை, வெள்ளி பொருட்கள், கொலுசு, மோதிரம், சேலை, சுடிதார், செருப்பு மற்றும் கல்வி சம்பந்தமாக பணம், விடுதிக்கு தேவையான பணம் அனைத்தையும் கொடுத்தேன்.
மேலும் வெளியே செல்லும் போது ஆட்டோ, ஹோட்டலில் சாப்பாடு செலவு செய்து வந்தேன். நிலைமை இப்படி இருக்க அவர் என்மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசில் பொய்யான தகவல்களை கூறி புகார் செய்தார்.

அப்போது நான் கொடுத்த பொருட்களை அவர் திருப்பி தரவில்லை. மேலும் இந்த சம்பவத்தின் போது காவல்துறையினர் என்னை வீட்டில் இருந்து அழைத்து வந்தது, உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

என் பெயரை கூறி அவர் வாங்கிய கடனுக்கு பணம் கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் என்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டனர். இதனால் எனக்கு மன வேதனையும் மன உழைச்சலும் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி அவர் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தார். மீண்டும் என் மீது பொய் புகார் கொடுத்தார்.

இதனால் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பனேன். அதற்கு அவர் பதில் தரவில்லை. எனவே எனக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு இந்த வழக்கை தாக்கல் செய்வதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

காதலன் ஏமாற்றி மோசடி செய்து விட்டான் என்று காதலி புகார் கூறி வரும் வேளையில், காதலி ஏமாற்றியதற்காக காதலன் நஷ்ட ஈடு கேட்கும் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத

வீரர்களுக்காக கரீனா ஆட்டம்!


இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக பாலிவுட் ஹாட் ஸ்டார் ஷாருக் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலக்கல் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ளன. நான்காவது போட்டி இன்று குவாலியரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த 13ம் தேதி லக்னோவில் இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மகிழ்விப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சஹாரா குரூப் ஏற்பாடு செய்திருந்தது. சஹாரா சிட்டியில் நடந்த இந்த கண்கவர் நிகழ்ச்சியில், இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறப்பான விருந்தோம்பலையும் சஹாரா குரூப் அளித்து கெளரவித்தது.

அன்று இரவு நடந்த கலை நிகழ்ச்சியில் ஷாருக்கான், கரீனா கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று ஆடிப் பாடினர்.

கலை நிகழ்ச்சியைக் கண்டு கழித்த மகிழ்ச்சியுடன் இரு நாட்டு வீரர்களும் தனி விமானம் மூலம் குவாலியருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நிலச் சிக்கலில் ராணி முகர்ஜ


நிலம் வாங்கிய விவகாரத்தில் இந்தி நடிகை ராணி முகர்ஜியிடம் ரூ. 33 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டி அருகே உள்ள ஒரு வீடு கட்ட விரும்பினார் ராணி முகர்ஜி. இதற்காக சம்பத் மோரே என்பவரிடமிருந்து கடந்த 2005ம் ஆண்டு 11 ஆயிரம் சதுர அடி நிலத்தை அவர் வாங்கினார்.

நிலம் வாங்கியபோது பதிவுக்காக தாசில்தார் அலுவலகத்தில் ரூ. 1.32 லட்சம் பணம் கட்டியுள்ளார் ராணி.

ஆனால் இப்போதுதான் அந்த நிலம் அரசால் விவசாயம் செய்வதற்கு தானமாக வழங்கப்பட்ட இடம், வேறு யாருக்கும் விற்கப்பட முடியாது என்பது ராணிக்குத் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியால் ராணி முகர்ஜிக்கு கிட்டத்தட்ட ரூ. 34 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.

இந்த சிக்கலிலிருந்து தன்னை மீட்கக் கோரி மராகாஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கை ராணி முகர்ஜி சந்தித்து முறையிட்டுள்ளார். முதல்வரும், அமகதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் எப்படி இந்த நிலம் விற்கப்பட்டது, வாங்கப்பட்டது என்பது குறித்து விளக்குமாறு கூறி ராணி முகர்ஜிக்கும், நிலத்தை விற்ற நபருக்கும் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விவசாய நிலத்தை வாங்கி ஏமாந்த ராணி முகர்ஜி விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயனதாரா..கார்த்தி


பீமா எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் இயக்குநர் லிங்குச்சாமி அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார். பருத்தி வீரன் கார்த்தி, நயனதாராவை வைத்து புதிய படத்தை, சொந்தப் படமாக எடுக்கப் போகிறார்.

லிங்குச்சாமியின் இயக்கத்தில் சீயான் விக்ரமின் சிலிர்க்க வைக்கும் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீமா. ஆனால் படம் எப்போது பொட்டியை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் பீமா இயக்குநர் லிங்குச்சாமி அடுத்த படத்தை ஆரம்பிக்கவுள்ளார். இதை தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.

பில்லாவில் நயனதாரா பிரமாதமாக நடித்துள்ளார், படு அழகாக காட்சியளிக்கிறார் என்ற தகவல் பரவியதும் நயனதாராவைப் புக் பண்ண கோலிவுட்டில் பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளதாம். அதேபோல தெலுங்கிலும் நயனதாராவுக்கு புது டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில்தான் லிங்குச்சாமி நயனதாராவை அணுக அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்திலும், விஷாலுடன் சத்யம் படத்திலும் நயனதாரா நடித்து வருகிறார். அதேபோல கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் கொலையில் புது திருப்பம்: சங்கீதா தான் கொலையாளி?


சென்னை: சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு புதுமுக இயக்குநர் செல்வா கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பமாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட புதுமுக நடிகை சங்கீதாதான் செல்வாவைக் கொலை செய்தார் என்று சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை வட பழனியில் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தங்கியிருந்த அறையில் பிணமாகக் கிடந்தார் செல்வா. அவரை சிலர் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீஸார், செல்வாவுடன் தங்கியிருந்ததாக கூறப்பட்ட, அவர் இயக்கி வந்த படத்தில் நடித்து வந்த நடிகை சங்கீதாவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார் செல்வா. எப்போது பார்த்தாலும் செக்ஸ் வெறி பிடித்து திரிந்தார். படத்தை இயக்குவதை விட என்னை அனுபவிப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். ஒரு கட்டத்தில் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாததால் அடித்துக் கொன்று விட்டதாக சங்கீதா வாக்குமூலம் தந்ததாக போலீஸ் தரப்பில் செய்திகள் வந்தன.

இதையடுத்து கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சங்கீதா ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக, செல்வாவின் மனைவி மைதிலி, இந்த கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளது. எனவே இதை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றியது.

சிபிசிஐடி போலீஸார் மைதிலி சந்தேகம் தெரிவித்த படத் தயாரிப்பாளர் நடராஜன், செல்வாவின் தங்கை உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து சங்கீதாவை மறுபடியும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர். ஆனால் விசாரணைக்கு வராமல் சங்கீதா தலைமறைவாகி விட்டார்.

ஆனால் சமீபத்தில் விபச்சார வழக்கு ஒன்றில் சங்கீதா பிடிபட்டார். அந்த வழக்கிலும் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் சங்கீதாதான் இந்தக் கொலையை செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சங்கீதாவை விசாரணைக்கு வருமாறு சிபிசிஐடி போலீஸார் மறுபடியும் உத்தரவிட்டனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட் மூலம் பிடிவாரண்ட் பெறப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் சங்கீதா சரணடந்தார். இதனால் பிடிவாரண்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சங்கீதாதான் குற்றவாளி என்று சிபிசிஐடி விசாரணையில் உறுதியாக தெரிய வந்திருப்பதால் விரைவில் புதிய குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்யவுள்ளனர்.

வறுமை-குடி: மேக்கப்மேன் தற்கொலை

வீட்டில் வறுமை தலைவிரித்தாடியதாலும், குடிப்பழக்கத்தாலும் சினிமா மேக்கப்மேன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கே.கே.நகர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் காந்தி நகரில் வசித்து வந்தவர் முருகன் (32). இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

முருகன், உதவி மேக்கப்மேனாக பணியாற்றி வந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் போட்டுள்ளார். கடந்த 10 வருடமாக மேக்கப் மேனாக இருந்த இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது தசாவதாரம், நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றி வந்தார்.

திரை நட்சத்திரங்களை அழகுபடுத்தி ஜொலிக்க வைத்த இவரின் வாழ்க்கை மட்டும் மங்கலாகவே இருந்தது. போதிய வருமானம் இல்லாததால் வீட்டில் எப்போதும் வறுமை தாண்டவமாடியது. இதில் குடிப்பழக்கமும் அவருடன் சேர்ந்து கொண்டது.

தினசரி குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவார். இதனால் முருகனுக்கும், தேன்மொழிக்கும் தினசரி சண்டை நடக்குமாம். வழக்கம் போல நேற்று முன்தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் மனைவிக்கும் சண்டை மூண்டுள்ளது. விரக்தியிலும், கோபத்திலும் கணவரை கடுமையாக திட்டி விட்டார் தேன்மொழி.

பின்னர் டியூஷனுக்குப் போயிருந்த மகனை கூட்டி வருவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்த அவர், தனது கணவர் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறித் துடித்தார்.

முருகனின் தற்கொலையால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியது. கணவரைப் பறிகொடுத்த தேன்மொழி தனது இரு குழந்தைகளையும் கட்டிக் கொண்டு கதறி அழுதது அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

முருகனின் தற்கொலைக்கு வறுமைதான் முக்கிய காரணம் என மேக்கப் மேன் சங்க தலைவர் ராஜு கூறியுள்ளார். சினிமாவில் மேக்கப் ேமனாக இருப்பவர்களுக்கு தினசரி ரூ. 225 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்றார் ராஜு. முருகன் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் ரூ. 45 ஆயிரம் குடும்ப நல நிதியாக தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திருப்திகர இல்லறம் - குஷ்பு


நடிகையாக வலம் வந்த நான் இப்போது இல்லற வாழ்க்கையையும் ரசித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என குஷ்பு கூறியுள்ளார்.

தமிழ் கூறும் நல்லுலகை கொஞ்ச காலத்திற்கு முன்பு அதிர்ச்சி அடைய வைத்தவர் குஷ்பு. அவருக்கு கோவில் கட்டி சில ரசிகர்கள் கும்பாபிஷேகம் செய்ததால் உலகத் தமிழர்கள் எல்லாம் கலங்கிப் போனார்கள். இப்படியெல்லாம் கூட ரசிகர்கள் இருப்பார்களா என்று அதிசயித்துப் போனார்கள்.

கற்பு குறித்து குஷ்பு கருத்து கூறப் போக, சமீபத்தில் அந்தக் கோவிலை ரசிகர்கள் இடித்துத் தள்ளி விட்டது வேறு கதை.

கதாநாயகியாகவும், பின்னர் அக்கா, தங்கை, அம்மா என பலவேடங்களில் நடித்து, தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பை பிழிந்து பல குடும்பப் பெண்களை 'அழ' வைத்துக் கொண்டிருப்பவர் குஷ்பு!

தற்போது ஜெயா டிவியில் நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியை விட குஷ்பு போடும் 'ஜாக்கெட்'தான் படு பிரபலம். ஒற்றை ஜன்னல், இரட்டை ஜன்னல், மேலடுக்கு, கீழடுக்கு என விதம் விதமான டிசைன் ஜாக்கெட்களை அணிந்து வந்து நிற்கும் குஷ்புவின் ஜாக்கெட் அழகைப் பார்க்கத்தான் பெண்கள் டிவி பெட்டி முன்பு அலை மோதுகிறார்கள்.

சின்னத்திரை வெற்றியைத் தொடர்ந்து சினிமாவிலும் தயாரிப்பாளராக வெற்றி பெற்றார் குஷ்பு. ஒரே நேரத்தில் நடிப்பு, தயாரிப்பு, கேம் ஷோ என கலக்கினாலும், இல்லத்தரசியாக இருப்பதுதான் குஷ்புவுக்கு ரொம்பப் பிடித்துள்ளதாம்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வீட்டை பராமரிப்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் கஷ்டமான வேலை. குடும்பத்தை கவனிப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது உட்பட அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்வது பெண்களுக்கு சவாலாக இருக்கிறது.

ஆனால் இந்த சவாலான வேலைகளை நான் அனுபவித்து செய்கிறேன்.

டிவி தொடர்களில் நடித்தாலும், கேம் ஷோ செய்தாலும் அனைத்தையும் நான் முழு மகிழ்ச்சியுடன் செய்வதால் தான் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடம் சென்றடைகிறது. இப்போது சின்ன குழந்தைகள் கூட என்னை பார்த்தால் ஜாக்பாட் ஆண்ட்டி (ஜாக்கெட் ஆண்ட்டி என்று கூப்பிடாமல் விட்டார்களே) என்று சொல்கிறார்கள்.

டைரக்டரை திருமணம் செய்த நான் எப்போதும் அவருடைய வேலைகளில் தலையிடுவது கிடையாது. ஆனால் அவருக்கு துணையாக நான் எப்போதும் இருக்கிறேன்.

எனக்கு போன் செய்து சிலர், உங்கள் கணவருக்கு இன்று எங்கே ஷூட்டிங் என்று கேட்டால் கொஞ்சம் இருங்கள் பார்த்து சொல்கிறேன் என்று சொல்வேன். அந்தளவிற்கு அவருடைய வேலைகளில் தேவையில்லாமல் நான் தலையிடுவது கிடையாது என்றார் குஷ்பு.

பேரரசு இயக்கத்தில் பழனி என்ற படத்தில் பரத்தின் அக்காவாக நடித்து வரும் குஷ்பு அடுத்த வருடம் மோகன்லால் படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்போது கலைஞரின் தாய் காவியம் படத்திலும் குஷ்பு அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

ரீட்யூன் ஆகும் தமிழ்த்தாய் வாழ்த்து!


உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ரீட்யூன் செய்து புதிய வடிவில் மாற்றவுள்ளார்.

நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் 30 வருடங்களுக்கு முன்பு பாடலாக மலர்ந்தது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், டி.எம்.செளந்தரராஜன் குரலில் ஒலிக்கத் தொடங்கி இன்றளவும், பள்ளிகள் தோறும், அரசு விழாக்கள் தோறும் மறவாமல் தமிழ் அன்னையில் புகழ் பாடி வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் ஒப்புதலுடன் இந்தப் பாடலின் மெட்டை மாற்றியமைக்க இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விரும்புகிறாராம். தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தால் ஏப்ரல் மாதம் இந்தப் பணியில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாராம்.

ரஹ்மானுக்கு இந்த யோசனையக் கொடுத்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா. சமீபத்தில் சென்னையில் நடந்த கல்லூரிப் பாடல் வெளியீட்டு விழாவின்போது இந்த கோரிக்கையை வைத்தார் பாலு. அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய மற்றவர்களும் இதை வழிமொழிந்தனராம்.

பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரத்திற்குப் புது இசை வடிவம் கொடுத்தவர் ரஹ்மான். இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் ரஹ்மானின் வந்தே மாதரம் தொட்டுத் தாலாட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு முன்பு மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு புது இசை உருவம் கொடுக்க ரஹ்மான் முனைந்துள்ளார்.

பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான்!

வீடு முழுக்க விஜய் படம்! -சிபிராஜ் மீது சத்யராஜ் பாய்ச்சல்!


மைக்கை பிடித்தால் துக்க வீட்டை கூட, கலகலப்பாக்கி விடுவார் சத்யராஜ். ஒவ்வொரு முறை மேடையேறும்போதும் பேசிய விஷயத்தையே பேசி கழுத்தறுக்காமல் புதுசு புதுசாக பேசி, ஆடியன்சை மகிழ வைப்பதில் அவருக்கு நிகர் அவரே! விஜய் கலந்து கொண்ட விழா ஒன்றில் மைக் பிடித்த சத்யராஜ், 'விஜய் மேல எனக்கு ரொம்ப கோவங்க' என்று ஆரம்பித்தார் கொங்கு தமிழில்.

'எஸ் பாஸ்'னு டயலாக் சொல்ல ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து நிறைய சம்பளம் வாங்கி ஒரு அழகான வீட்டை கட்டி வச்சிருக்கேன். அதிலே யாரு படத்தைங்க மாட்டணும்? எங்கே திரும்பினாலும் விஜய் படத்தையே மாட்டி வச்சிருக்கான் என் பையன் சிபி. அப்படி ஒரு வெறிபிடிச்ச விஜய் ரசிகனா இருக்கான். என் படத்தை நாலே நாலு மாட்டி வச்சு, விஜய் படத்தை பத்து மாட்டினாலும் பரவாயில்லை. எல்லா படமும் அவருதான்னா எனக்கு எப்படியிருக்கும்? கொஞ்சம் அவனை பார்க்கும் போது சொல்லி வைங்க' என்று சத்யராஜ் பேச, பேச முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிபியை பார்த்து சிரித்துக் கொண்டேயிருந்தார் விஜய்.

கேரவேனுக்குள் சிகரெட்! -புகைத்த நடிகைகள்! புகைந்த தயாரிப்பாளர்!



கால்ஷீட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட நாளில் இருந்து தின்பது, மெல்லுவது, குடிப்பது, கொப்பளிப்பது எல்லாமே தயாரிப்பாளர் பணத்தில்தான்! ஹீரோ, ஹீரோயின்களின் இந்த உற்சாகம் சில நேரங்களில் கரை மீறி போகும்போதுதான் கணக்கு கேட்பார்கள் தயாரிப்பாளர்கள். அப்படி ஒரு படத்தில் கணக்கு பார்த்தபோது இரண்டு ஹீரோயின்கள் குடித்த சிகரெட் கணக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

ஒவ்வொரு படத்திற்கும் 'புரடக்ஷன்' என்று ஒரு தனி ஆளை போடுவார்கள். இவர்களின் வேலை, வேளாவேளைக்கு ஹீரோ ஹீரோயின்களுக்கு ஜுஸ், கடலைமிட்டாய், சிகரெட், பழம், சிக்லெட், இளநீர் என்று கேட்கும்போதெல்லாம் கொடுத்துக் கொண்டேயிருப்பது. இதற்காக தினமும் சில ஆயிரங்கள் ஒதுக்கப்படும். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகர், நடிகைகளுக்கு ஊசிப்போன வடை கூட கிடைக்காது. அதை விடுங்கள்...

இப்படி ஒரு படப்பிடிப்பில் புரடக்ஷனை கூப்பிட்டு பில்லை பார்த்த தயாரிப்பாளர் தரப்பு பகீர் ஆகியிருக்கிறது. ஆன்ட்ரிய நடிகை ஒரு நாளைக்கு ஐந்து பாக்கெட் சிகரெட் பிடித்திருக்கிறார். அதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.சி என்ற சிகரெட். கூடவே நடிக்கும் இன்னொரு நடிகையான ரீமா...ன் வில்ஸ் சிகரெட்டாக பற்ற வைத்திருக்கிறார். தினமும் நான்கு பாக்கெட்டுகள். இவர்கள் நிஜமாகவே குடிக்கிறார்களா? அல்லது புரடக்ஷனின் கைங்கர்யமா? நைசாக கேரவேனுக்குள் எட்டிப்பார்த்த தயாரிப்பாளரின் முகத்தில் அடித்தது சுகமான புகை வாசனை! அட சரிதாம்ப்பா என்றாராம் வேதனையோடு!

சிலம்பாட்டம் படத்தில் சினேகாவா? -குழம்பிய கோலிவுட்!

சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார் என்று முதலில் வந்த தகவல்கள் சினேகாவுக்கே ஆச்சர்யத்தை கொடுத்திருக்கும். ஏனென்றால், காளை படத்தில் தனக்கு அத்தையாக நடிக்க சிம்பு அழைத்தபோது 'ஆளைவிடுப்பா' என்று மறுத்தவர் சினேகா.

சொத்தையான கதாபாத்திரங்களையே எக்குதப்பாக காட்டும் சிம்பு, அத்தையாக நடித்தால் என்னென்ன செய்வார்? இதுதான் சினேகா 'ஸ்கிப்' ஆனதற்கு காரணம். மறுத்தவரை மீண்டும் அழைக்க, சிம்பு என்ன சின்னப் பையனா? அப்படியென்றால் சிலம்பாட்டம் படத்தில் சினேகா எப்படி?

வேறொன்றுமில்லை... சிலம்பாட்டம் படத்தில் நடிப்பவர் சினேகா உல்லால்! யார் யாரையோ தேடி கடைசியில் இவரை பிடித்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு அல்வா துண்டு மாதிரி இருக்கும் உல்லால், சிலம்பாட்டம் வரட்டும்... அப்புறம் பாருங்கள், தமிழ்நாட்டில் பாதி பேர் மனசு காலி என்கிறார் சவலாக! சிம்பு படத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டா சவால் விட்டுதானே ஆகணும்!

இனி சித்தர்களின் ஆட்சிதான்! -ரஜினிகாந்த் ஆருடம்!


இனி தமிழகமெங்கும் சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது!' இருக்கிற கட்சிகள் போதாதென்று இதென்னடா புதுக்கட்சி? என்றுதானே புலம்புகிறீர்கள்! வேறொன்றுமில்லை, அருள்மிகு ரஜினிகாந்த் சுவாமிகளின் அருள்வாக்குதான் மேலே சொல்லப்பட்ட விஷயம்!

நடிகர் சரத்குமார் புதுக்கட்சி துவங்கிய பிறகு அவரை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை வாழ்த்தியதோடு, இனி சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது என்றாராம். அப்போது ரஜினியிடம், இமயமலையில் இருக்கும் பாபாவை தரிசிக்க தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக் கொள்ள, உடனடி நிவாரணமாக சென்னையில் உள்ள பாபா கோவிலுக்கு சென்று வணங்கும்படி கேட்டுக் கொண்டாராம் ரஜினி.

ரஜினியின் உற்ற நண்பர் ஹரி என்பவர்தான் சென்னையில் இந்த பாபா கோவிலை கட்டியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்கு செல்லும் ரஜினி அங்கேயே அமர்ந்து தியானமும் செய்வாராம். இது சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பதால் என்பதால்தான் ரஜினியின் இந்த வாரா வார விசிட். தான் ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன் என்று ரஜினி சொல்ல, அடுத்த நாளே மேற்படி கோவிலுக்கு சென்றுவிட்டார் சரத். சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து தியானமும் செய்தாராம். மிகவும் அமைதியான கோவில் என்று தன் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சரத். விரைவில் ரஜினியோடு இமயமலைக்கு சென்று வரவும் திட்டமிட்டிருக்கிறார்.

அடுத்த படத்தில் ஆக்ஷன் இல்லை! -தனுஷ் முடிவ


ரிசல்ட் சுமாராக இருந்தாலும் ரெவின்யூ பிரமாதமாக இருக்கிறது பொல்லாதவனுக்கு. இதையடுத்து மீண்டும் பொல்லாதவன் இயக்குனர் வெற்றி மாறனுக்கு கால்ஷீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் தனுஷ். இதற்கிடையில் இப்படத்தை தன் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. தனுஷின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டியும் இருக்கிறார்.

இவரைப்போலவே பொல்லாதவனை பாராட்டிய இன்னொரு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இரண்டாவது மகள் வீட்டை விட்டு காதலனுடன் சென்று திருமணம் செய்து கொண்டதிலிருந்து அப்செட் ஆகியிருந்த அவருக்கு சென்னையில் இந்த படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. தனது மூத்த மகள், மற்றும் மகனுடன் இந்த படத்தை பார்த்த சிரஞ்சீவி, தனுஷை மனம் குளிர பாராட்டினாராம். இதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவும் முடிவெடுத்திருக்கிறாராம்.

இப்படியெல்லாம் முன்னணி ஹீரோக்களால் கொண்டாடப்படும் பொல்லாதவனுக்கு பிறகு தனுஷ் இதே மாதிரி ஆக்ஷன் ஸ்டோரியில் நடிப்பதுதானே முறை? அதுதான் இல்லை. தனது அடுத்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

நானா? வினய்யா? -லேகாவிடம் சிம்பு எரிச்சல்!


ஏற்கனவே எகத்தாளம், இனி எதுக்கு புதுத்தாளம்? தன்மீது எரிச்சலில் இருக்கும் சிம்புவின் மீது மேலும் ஒரு அம்பை தொடுத்திருக்கிறார் லேகா. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஜெயங்கொண்டான் படத்தில் வினய்க்கு தங்கச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

தமிழ்சினிமாவில் தங்கச்சிகளுக்கு ஹீரோயின் புரமோஷன் கொடுக்கவே மாட்டார்கள். கொஞ்சம் வயாசானாலும் நேரடியாக அக்கா, அம்மா வேடம்தான்! நிலைமை அப்படியிருக்க வினய்க்கு தங்கச்சி என்றால், கெட்டவனுக்கு மேலும் கெட்ட கோபம் வராதா? அப்படித்தான் வந்துவிட்டது சிம்புவுக்கும்.

போனை எடுத்து பொறிந்துவிட்டாராம் லேகாவிடம். என்னுடைய கெட்டவனா? வினயுடைய ஜெயங்கொண்டானா? நீயே முடிவு செய்து கொள் என்று கட் பண்ணிவிட்டாராம் தொலைபேசியை. இந்த படத்தில் எனக்கு தங்கச்சி வேஷம் இல்லை. பாவனாவுக்கும் எனக்கும் ஈக்குவல் ரோல் என்றெல்லாம் சொல்ல நினைத்த லேகா, கண்கலங்கி நிற்கிறார்.

தங்கச்சிகளுக்கெல்லாம் தாலாட்டு பாடுகிறார் அப்பா. தங்கச்சிகளை காய்ச்சி எடுக்கிறார் பிள்ளை! என்ன்ன்ன்ன கொடுமை சரவணன் இது?

ரீமிக்சுக்கு ரிட்டையர்மெண்ட்! -காதில் தேன் பாய்ச்சும் இசையமைப்பாளர்!


கொசுக்கடி, கரப்பான் கடிக்கெல்லாம் பொதுநல வழக்கு போடும் புண்ணியவான்கள் இதுக்கும் ஒரு வழக்கு போட்டால் தேவலாம். எதுக்கு? ரீமிக்ஸ் என்ற பெயரில் நல்ல நல்ல பாடல்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு!

இதுக்கு பேர் போன நம்ப ஊர் இசையமைப்பாளர்கள் இனிமேலாவது நிறுத்திக் கொள்வார்களா தெரியாது. ஆனால், நிறுத்தியே விட்டார் ஒரு முன்னணி இசையமைப்பாளர். தெலுங்கில் இசை கட்டி பறக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துதான் அவர். தமிழில் கந்தசாமி, சந்தோஷ் சுப்ரமணியம், இனிமேல் எடுக்கப்படவிருக்கும் விஜயின் புதிய படம் என்று தமிழிலும் சவுண்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரசாத், காதில் தேன் பாயும் செய்தியன்றை சொல்லியிருக்கிறார்.

நான் தற்போது இயக்கி வரும் எந்த படத்திலும் ரீமிக்ஸ் இல்லை! தேவி ஸ்ரீ பிரசாத்தின் இந்த அறிவிப்பு, பழைய பாடல்களுக்குள் மூழ்கி கிடக்கும் நம்ப ஊர் இசையமைப்பாளர்களின் காதில் விழுந்தால் நன்றாக இருக்கும்

விக்ரம், விஷால், சூர்யா, வரிசையில் பரத்! -ஹரியின் அடுத்த படம

தென் மாவட்டங்களில் அரிவாளுக்கு ஹரிவாள் என்றே பெயர் வச்சிட்டாங்களாம்! தெரியுமா? என்றால் லேசான வெட்கத்தோடு சிரிக்கிறார் ஹரி. மற்ற படத்தை விட இந்த படத்தில் கொஞ்சம் கம்மியாத்தான் அருவா சுத்தியிருக்கேன். என்னை போயி கலாய்கிறீங்களே? என்கிற ஹரிக்கு இந்த வருட தீபாவளி கொஞ்சம் விசேஷமானது. ரேசில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான் வேல்.

போட்ட பணத்தை எப்படியாவது தயாரிப்பாளருக்கு எடுத்து கொடுத்திடணும். பெரிய ஹிட் ஆகாவிட்டாலும் மினிமம் கியாரண்டியாவது இருக்கணும். ஹரியின் இந்த கொள்கைதான் தயாரிப்பாளர்களுக்கு ஆக்ஸிஜன். இப்படிப்பட்ட இயக்குனரை ஒப்பந்தம் செய்ய க்யூவில் நிற்கிற தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், புதிய தயாரிப்பாளருடன் கை கோர்த்திருக்கிறார் ஹரி. ஜின்னா என்ற விநியோகஸ்தர்தான் ஹரியின் அடுத்த பட தயாரிப்பாளர். பரத் ஹீரோ.

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்ட ஹரி புது புது ஹீரோக்களை அறிமுகப்படுத்தலாமே? '...லாம்தான்! ஆனா, நான் ஒன்றும் புதுசா கதை சொல்லி ஜனங்களை இம்ப்ரஸ் செய்யற டைரக்டர் இல்லை. ஏற்கனவே ஜெயிச்சவங்களோடு சேர்ந்து, நானும் சில ஜிமிக்ஸ் பண்ணிதான் வெற்றிகளை கொடுக்க முடியும். அதனால ரிஸ்க் எடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை' என்கிறார் ஹரி வெளிப்படையாக.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு ஸ்கேல் இருக்கு. அதுக்கேற்ற மாதிரிதான் ஆக்ஷனின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்வேன். விக்ரம், விஷால், சூர்யா இவங்களுக்கு கொடுத்த அளவுக்கு வெயிட்டான ஆக்ஷனை பரத்திற்கு கொடுக்க முடியாது. அவர் மூளையை யூஸ் பண்ணி எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் என் அடுத்த படத்தின் கதை. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். மார்ச்ல ஷ§ட்டிங் ஆரம்பிச்சுடுவோம். இடையில் சந்திக்கதானே போறோம்... நிறைய பேசுவோம் என்கிறார் ஹரி வெற்றிப்புன்னகையோடு! ஹ(ச)ரிங்க....!

Tuesday, November 13, 2007

ஆக்ரா - விமர்சனம்

புதுமுகங்கள் விகாஷ், எமி மோகன், அஞ்சலி, காயத்ரி, எண்ணூர் முரளி, ரவிதேவன் இவர்களுடன் நாசர், ஒய்.ஜி. மகேந்திரன், அபிநயஸ்ரீ நடிப்பில் பி. செல்வகுமார் ஒளிப்பதிவில் சி.எஸ். பாலு இசையில் சித்திரைச் செல்வன் டி.எஃப்.டி. இயக்கியுள்ள படம். தயாரிப்பு அமிர்தா ஆர்ட் கம்பைன்ஸ்.

உலகத்துக்கே காதலை பறைசாற்றும் சின்னமாக இருப்பது தாஜ்மஹால். அந்த காதல் சின்னம் உள்ள ஆக்ரா மண்ணில் அந்த தாஜ்மஹாலை பொம்மையாக விற்று பிழைப்பு நடத்தும் ஒரு பெண்ணின் காதல் தடுக்கப்படுகிறது. மறுக்கப்படுகிறது. வானளாவிய காதல் சின்னமாய் தாஜ்மஹால் ஒரு கம்பீர மலைபோல் உயர்ந்து நிற்கிறது. ஆனால் அதன் அடிவாரத்தில் காதலுணர்வு குழி தோண்டி புதைக்கப்படுகிறது. முடிவு என்ன என்பதே 'ஆக்ரா'வின் கதைப்போக்கு.

இந்தக் கதையை படமாக்க வந்தவர்கள் நல்ல கதையை கெளரவப்படுத்தாமல் வணிகச் சேற்றில் சிக்கி களங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

கண்ணன் இளைஞன். துடிப்பானவன். இசையின் மீது நாட்டம். வயலினிஸ்ட். ஒரு நாள் ஆக்ரா செல்பவன், ஒருத்தியைப் பார்க்கிறான். அவள் பூஜா. பார்த்தவுடன் மனசுக்குள் பல்பு எரிகிறது. காதல் வளர்க்கிறான். அவளும் சம்மதிக்கிறாள். பிறகென்ன...? அந்த ஊரில் யாரும் காதலிக்கக்கூடாது. மீறிக் காதல் கொள்ளும் ஆண்களை காதலியை விட்டே கொளுத்திக் கொன்று விடுவது ஊர் மரபு. கட்டுப்பாடு. எனவே தாஜமஹால் விற்கும் பூஜா காதலன் கண்ணணின் உயிர் பற்றி பயப்படுகிறாள்.

அப்போது தன்னால் வர முடியாது என்றும் தன் மீது நிஜமாகவே காதல் இருந்தால் இப்போதே விலகி ஓடி விட வேண்டும். நிலைமை சரியாகும் போது தானே ஒரு வாழ்த்துமடல் அனுப்பி தெரிவிப்பதாகவும் கூறுகிறாள். ஓடிப் போன கண்ணன் காத்திருக்கிறான். நாற்பது ஆண்டுகள் காத்திருந்து... ஒரு நாள் அந்த வாழ்த்து அட்டை வருகிறது... ஓடிப் போய் பார்த்தால் வரவேற்று அழைத்துக் கொண்டு போகிறார் ஒருவர். அவர் பூஜாவின் கணவர். உணர்ச்சிகரமான... அந்தக் காட்சிதான் க்ளைமாக்ஸ்.

காத்திருக்கும் கண்ணனாக வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நாசர். நல்ல பொருத்தம். இளைய வயது கண்ணனாக வருபவர் விகாஷ். அவரது நடிப்பில் யதார்த்தம் இல்லை. விளையாட்டுத்தனமாக உள்ளது. காதலிப்பது பற்றிப் பேசுவது அழுத்தமாக இல்லை. பூஜாவாக வரும் எமிமோகன் களையான முகம். ஆனால் காட்சிக்குக் காட்சியில் வெவ்வேறான மேக்கப்பில் தெரிகிறார். சில க்ளோஸ்-அப் கள் பயமுறுத்துகின்றன. பூஜாவின் கணவராக சில நிமிடங்கள் மட்டும் வரும் ஒய்.ஜி. மகேந்திரன் கூட நினைவில் நிற்கிறார்.
காதலின் ஆழத்தை காத்திருப்பின் வலியை எதிர்பார்ப்பின் ஏக்கத்தை அழகாக அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்புள்ள இக்கதையில் படத்தின் இரண்டாவது பாதியிலே தான் அந்த வேலையைச் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர்.

ஆனால்... முதல் பாதியில் நல்ல காதலைச் சொல்ல கெட்ட காதலையும் சொல்கிறேன் பேர்வழி என்று சில காமக் கொடூரங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பது பூக்கடைக்குள் நுழைந்த சாக்கடை போல குமட்டுகிறது. சம்பந்தப்பட்ட சில பாத்திரங்கள் பேசுவது செய்வது... சே... ரொம்ப மோசம்.

ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கும் விதம் நீலப் படத்தையே மிஞ்சிவிட்டது. ஆறேழு முத்தக் காட்சிகளை ஆங்காங்கே ஆபாச வசனங்கள் முகம் சுழிக்க வைக்கும் விஷயங்கள் ஏராளம். அபிநயஸ்ரீயின் குத்தாட்டம் ஆபாச அசைவுகளின் தொகுப்பு.

இவ்வளவையும் செய்துவிட்டு இரண்டாவது பாதியில் கதையைக் கண்ணியப்படுத்த முயன்று இருப்பதுதான் சோகம்.

ஆலப்புழா படகு வீடு, டில்லி, குலுமனாலி, தாஜ்மஹாலின் அழகு, ஆக்ராவைக் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கும் பாங்கு, நாசரின் நடிப்பு, இனிய இசை எல்லாமே இயக்குனரின் கமர்ஷியல் சமரசமாக்கல் முன் வீணாகி இருக்கின்றன.

காவியமாக்கியிருக்க வேண்டிய காதல் கதை களங்கப்பட்டு இருக்கிறது. இதனால் நயாகரா மாதிரி இருக்க வேண்டிய "ஆக்ரா" வயாகரா மாதிரி ஆகிவிட்டது.
தமிழ்மணத்தில் பதிவுகளை ஏவ்வாறு இனைப்பது என்று யராவது எனக்கு விளக்குங்க்கள  MY MAIL ID IS   khemkarpaka@yahoo.co.in்

கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்

சத்யராஜ், பிருத்விராஜ், ராதிகா, சந்தியா, ராதாரவி, மனோபாலா, ஸ்ரீப்ரியா, மயில்சாமி நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ப்ரிதா ஒளிப்பதிவில் ப்ரியா.வி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா (லிட்) - யுடிவி - பிரமிட் சாய்மீரா.

சத்யராஜ் போலீஸ் கமிஷனர். அன்பான மனைவி ராதிகா. இரு மகள்கள். சத்யராஜின் அப்பா வியட்னாம் வீடு சுந்தரம்.

பாசமும் கண்டிப்பும் உள்ள சத்யராஜின் மகள் சந்தியா மலேஷியாவுக்கு படிக்கச் செல்கிறார். அங்கு தானுண்டு தன் படிப்புண்டு என்றிருக்கும் சந்தியா, பிருத்விராஜை சந்திக்க நேர்கிறது தற்செயலாக. நிஜமாகவே சந்தியாவைக் கவர்கிறார் பிருத்வி. பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. சந்தியாவுக்குள் காதல் ஜுரம்.

சத்யராஜ் - ராதிகா தம்பதியினரின் திருமண வெள்ளி விழாவுக்கு போக விரும்பாத அளவுக்கு மாறிவிடுகிறார் சந்தியா. சமாதானப்படுத்திய பிருத்வி இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்.

தன் காதல் விவகாரத்தையும் பிருத்வி பற்றியும் வீட்டுக்கு கூறியிருந்த சந்தியா, காதலனை எப்படி வரவேற்பார்களோ என்று குழம்புகிறார். அம்மா ஏற்றுக் கொண்டு விட அப்பா சத்யராஜோ போலீஸ் கண்ணுடன் பார்க்க... கதை சிக்கலாகிறது.

அப்பா அம்மா இல்லாத பிருத்வியை மாமா ராதாரவி எடுத்து வளர்த்தது. ராதாரவிக்குப் பக்கபலமாக இருந்து அவரது கம்பெனியை உயர்த்தியது. ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாட்டால் ராதாரவியிடமிருந்து வெளியேறியது எல்லாம் ராதிகாவுக்குத் தெரியும். ஆனால் இதுபற்றி சத்யராஜிடம் ராதாரவி பலமாக போட்டுக் கொடுத்துவிட, சத்யராஜ் பிருத்விராஜை அவமானப்படுத்தி துரத்திவிடுகிறார்.

சந்தியா மனமுடைகிறார். இது பிடிக்காமல் ராதிகா தன் மகள் சந்தியாவுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. தன்னால்தானே சத்யராஜ் - ராதிகா பிரிய நேர்ந்தது என்று பிருத்வி அவர்களை சேர்த்து வைக்க பாடுபடுகிறார். பிருத்விராஜின் நல்ல மனசறிந்து கடைசியில் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார் சத்யராஜ். சுபம்.

போலீஸ் அதிகாரி ஆறுமுகம், பாசமுள்ள அப்பா, அன்பான கணவன் என்று மூன்றுமுகம் காட்டுகிறார் சத்யராஜ். கலகலப்பிலும் சரி கண்டிப்பிலும் சரி சத்யராஜ் அசத்தியராஜாக பளிச்சிடுகிறார். அந்தப் பாத்திரம் அவருக்கேற்ற அளவான சட்டையாகப் பொருந்துகிறது.

ராதிகா... பொறுமையின் சிகரம். அடக்கமான மனைவியாய் இருப்பவர், அதிர்ந்து பேசும்போது அதிர வைக்கிறார். குறிப்பாக சத்யராஜுடன் உரிமை கேட்டு வாதாடும் கட்டம் பளீர் காட்சி.

பிராமண இளைஞனாக வரும் பிருத்விராஜ் துறுதுறு வாலிபர். எப்போதும் ப்ராக்டிகலாக பேசி யதார்த்த நடிப்பில் கவர்கிறார். அந்த அப்பாவி முகம் அப்படியே பொருந்துகிறது.

படபடப்பு துறுதுறுப்பு என்றிருக்கும் இளமைத்துடுக்கு சந்தியா, காதலில் விழும்போதும் பிரிந்து அழும்போதும் மூக்கு விடைக்க முகபாவம் காட்டுவது ரசிக்க வைக்கும்படி இருக்கிறது.

பிருத்வியின் மாமாவாக வரும் ராதாரவி அடிதடி செய்யாமலேயே வில்லத்தனம் செய்திருக்கிறார்.
கதையின் பின்பாதியில் வரும் ஸ்ரீப்ரியா சரியான கலகலப்பு. ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக இருந்தவரா இப்படி... உருவத்தால் அதிர வைக்கிறார்.

வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் சூழல்கள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் சுவையானது. எதிர்பாராதது. அப்படி சில சூழல் மாற்றங்கள் ஏற்படுத்தும் சிக்கல்கள் முடிச்சுகள் அவிழ்ப்புகள்தான் கதை.

வழக்கமான சினிமாத்தனம் இல்லாத கதையை இயல்பான சம்பவங்களைக் கொண்டு நகர்த்தியிருக்கும் அழகு பாராட்டத்தக்கது. பிருத்வி மீது சந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு காதல் வரும் கட்டம் ஒரு பூ மலர்வதைப் போல அழகான காட்சி.

சத்யராஜ் உள்ளுக்குள் ஈகோவை வைத்துக் கொண்டு பிடிவாதம் பிடிக்கும் காட்சிகள் யதார்த்தம். 'ஊசி குத்தி' உண்மை வரவழைக்கும் காட்சியில் எல்லாருமே மனதில் உள்ளதை வெளியிடும் காமடி ரசமான கற்பனை.

சத்யராஜுடன் இரட்டையாகப் பிறந்து காதலால் வீட்டைவிட்டு விலகிப் போன ஸ்ரீப்ரியா நடத்தும் காமடி ஜாலி ஜுகல் பந்தி.

திடீர் திருப்பங்கள், இட்டுக்கட்டிய சம்பவங்கள் என்று திணிப்புகளோ மிகைப்படுத்தல்களோ இல்லை. உயிரோட்டத்துடன் கதையின் போக்கிற்கு ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ப்ரியா. இயல்பான தன்மையை படம் முழுக்க முடிந்தவரை பராமரித்து இருக்கிறார். இதனால் கூட சில காட்சிகள் நீளமாகத் தெரிகின்றன. உதாரணம் க்ளைமாக்ஸ் துரத்தல்.

யுவனின் இசையும் ப்ரிதாவின் ஒளிப்பதிவும் ப்ரியாவுடன் சம வேகத்தில் பயணம் செய்துள்ளன.

தைரியமாக குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும்படி கண்ணியமான கலகலப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ரியா. அதற்காகவே அவருக்குக் கைகுலுக்கலாம்.

Monday, November 12, 2007

பூமிக்குள் சித்து வித்தை நாடகம் : சாமியாரிடம் போலீஸ் விசாரணை


திருக்கோவிலூர்: பூமிக்குள் பள்ளம் தோண்டி சித்து வித்தை செய்யப் போவதாக கூறிய சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருக்கோவிலூ ரை அடுத்த வடகரைத்தாழனுர், கடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(37). தமிழ் ஞானசித்தர் என்ற புனைப் பெயருடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நீண்ட ஆயுள் பெறவும் சித்து வித்தைகள் தெரிந்து வைத்திருப்பதாக கூறி வருகிறார். இவர் அஸ்டமா சித்து என்ற எட்டு வித்தையில் ஒரு சித்து வித்தையான பூமிக்கடியில் மூச்சை அடக்கிக் கொண்டிருக்கும் கலையை செய்து காண்பிக்கப் போவதாக கூறினார்.

இதற்காக நேற்று காலை பூமியில் பள்ளம் தோண்டி அதனுள் சென்று மூச்சை அடக்கிக் கொண்டு இருக்கப் போவதாக கூறினார். கிராமத்தில் மாரியம்மன் கோவில் எதிரே பொதுமக்கள் காலை திரண்டனர். ஜிப்பாவுடன் இடுப்பில் துண்டு கட்டி, கழுத்தில் மணியுடன் கோவில் முன் வந்தார் சாமியார், பூமி கடினமாக இருப்பதால், வேறு இடத்தில் பள்ளம் தோண்டி சித்து வித்தை காட்டப் போவதாக கூறி நேரத்தை கடத்தினார்.

காத்திருந்த நிருபர்களிடம் போட்டோக்களை கொடுத்து சுய புராணம் பாடிக் கொண்டிருந்தார். அரகண்ட நல்லூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து!?


ஏற்கனவே நமது தேசிய கீதத்தை தனது இசையால் உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.


 


உலகம் முழுக்க இசையமைப்பு ஆல்பம் என்று பறந்து கொண்டிருக்கும் ரஹ்மானை அழைத்து வந்து ஒரே இடத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உட்காரவைத்து சாதனை செய்தார் இயக்குனர் தயாரிப்பாளர் ஷங்கர்.

கல்லூரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த அதிசயம் நடந்தது. படத்தின் பாடலை ஷங்கரே தனது எஸ் மியூசிக் மூலம் வெளியிட்டார். விழாவுக்கு வந்த அத்தனை பேரும் படத்தைப் பற்றியும் ஷங்கர் பற்றியும் பாராட்டிவிட்டுப்போக...

பாரட்டிப்பேச வந்த இயக்குனர் பாலுமகே‌ந்திரா தனது பேச்சுக்கு நடுவே ரஹ்மானுக்கு ஒரு கோரிக்கை வைத்து விட்டுப்போனார்.

அ‌ந்த கோ‌ரி‌க்கை என்ன? தமிழ்த்தாய் வாழ்த்தை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னோட இசையி‌ன் மூலம் புதுவடிவம் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

ஏற்கனவே அதுபோல் வந்துவிட்டது என்று யாரோ சொல்ல...அதனால் என்ன...ரஹ்மான் இசையில் வருவது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும் என்று சொல்லிவிட்டுப்போனார். உண்மைதானே!

ஒழிவார்களா பெருந்தீனி ஆசாமிகள்? -புதிய முறையில் ஒரு பூஜை

கோடம்பாக்கத்தில் டெக்னீஷியன்கள் லிஸ்ட் எழுதும்போதே பூஜைக்கு மந்திரம் ஓதுகிற ஐயர்களின் பெயரையும் அந்த லிஸ்டில் சேர்க்கும் கோஷ்டிகள் நிறைய பேர் உண்டு. வேறெந்த புரோகித வேலைக்கும் போகாமல், 'நான் முழுக்க முழுக்க சினிமா ஸ்பெஷலிஸ்டாக்கும் ' என்று ஜம்பம் அடித்துக் கொள்கிற ஐயர்வாள்களும் பெருகி விட்டார்கள்! இதில் கொடுமை என்னவென்றால், மேற்படி ஆசாமிகள் போடுகிற பூஜையோடு நின்று போன படங்கள் ஆயிரக்கணக்கில் தேறும். ஆனாலும் இந்த ஆசாமிகளின் ராஜ்ஜியத்தில் எப்போதும் உய்யலாலாதான்!

மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. கண்ணும் காதும் வைத்தாற்போல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடும் அவர்கள் மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுப்பவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

அந்த வரிசையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கவிருக்கும் 'மாஸ்கோவில் காவேரி ' படத்தின் துவக்கவிழாவும் நடந்திருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து திருக்குறள் கூற, ரவிவர்மன் கவிதை பாட புதுமையான முறையில் நடந்தேறியிருக்கிறது இப்படத்தின் துவக்க நாள்!

இதே ஸ்டைல் இனிமேல் துவக்கப்படும் படங்களிலும் பின்பற்றப்பட்டால், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் குறையும். பெருந்தீனி ஆசாமிகளும் ஒழிவார்கள்! நடக்குமா?

இப்படிக்கு ரோஸ் -அல்டிமேட்டாக ஒரு அரவாணி ஷோ!


பொழுதோட கோழி கூவுற வேளை... என்று சினிமாவில் மட்டுமே பாடிக்கொண்டிருக்கிற திருநங்கைகளின் (அரவாணிகள்) வாழ்வில், விடியலை சொல்ல ஒரு கோழியும் கூவுவதில்லை என்பதுதான் வேதனை!

இந்த வேதனைக்கு மருந்து போடுகிற விதத்தில், பொழுதுபோக்கு மீடியாவிற்கு கம்பீரமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார் ரோஸ்! தான் அரவாணி என்பதே அவரே வாய் திறந்து சொன்னால்தான் அறிய முடிகிறது. நேரில் பார்த்தால் மாடல் மங்கைகளுக்கே மூச்சிரைக்கும்! அப்படி ஒரு அழகு!

சின்னத்திரை உலகில் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் டி.வி, ரோஸ் மூலமாக அரவாணிகளின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ரோஸ்? வாழ்க்கையை ஒட்டிய அத்தனை விஷயங்களையும் அலசப் போகிறார். 'லேட் நைட் ஷோ' என்ற சப் டைட்டிலுடன் உலாவரப்போகும் இந்த நிகழ்ச்சியில் எதை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் ரோஸிடம். குறிப்பாக செக்ஸ்!

அதிரி புதிரியான கேள்விகளுக்கு, அசர வைக்கும் பதில்களை சொல்ல தயாராகிக் கொண்டிருக்கும் ரோசின் பின்னணி என்ன? சென்னை சத்யபாமா என்ஜினியரிங் கல்லூரியில் என்ஜினியரிங் முடித்தவர். பிறகு வெளிநாட்டிற்கு சென்று படிப்பை தொடர்ந்திருக்கிறார். பிறவியில் ஆணாக பிறந்து அடிமனசில் பெண்ணாக சிலிர்த்த ரோஸ், வீட்டிலிருந்து ஒரு கட்டத்தில் விரட்டப்பட்டு தன் உழைப்பே தனக்குதவி என்று போராடி இன்று முன்னணிக்கு வந்திருக்கிறார். யு.எஸ், யு.கே என்று தன் எல்லைகளை விரித்துக் கொண்ட ரோசின் உதடுகளில் ஆங்கிலம் கொஞ்சுகிறது.

வெளிநாடுகளில் போற்றப்படும் அரவாணிகள், இந்தியாவில் மட்டும்தான் இழிவு படுத்தப் படுகிறார்கள். அவர்கள் எல்லா துறைகளிலும் ஈடுபட்டு வெற்றியை ஈட்டவேண்டும். குறிப்பாக அரசியலில் கூட! என்கிறார் ரோஸ்.

சொல்ல முடியாது... இந்த நிகழ்ச்சி கொடுக்கிற வெற்றி, நாளைய அரசியல் வானில் முக்கிய பதவிகளை கூட பெற்றுத்தரலாம் ரோசுக்கு! நாளை நடப்பதை யாரறிவார்?

மணிரத்தினம் படம்: மறைமுக தூண்டில் போட்ட ஸ்ரேயா!


"நடிகை ஸ்ரேயாவுக்கு நடிப்பு வரவில்லை" -தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சினிமா விமர்சனம் செய்துவரும் நடிகை சுஹாசினி, சிவாஜி படத்தை விமர்சனம் செய்யும்போதுதான் இப்படி குறிப்பிட்டிருந்தார்.நீரு பூத்த நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்த இந்த நெருடலை ஒரே பதிலில் குளிர வைத்துவிட்டார் ஸ்ரேயா!

என் நடிப்பை பற்றி விமர்சிக்கவும், எனக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லவும் அவருக்கு நிறைய தகுதி இருக்கிறது. டைரக்டர் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நன்றாக நடித்து சுஹாசினியிடம் நல்ல நடிகை என்று பெயர் வாங்குவேன். மாறாத புன்னகையோடு ஸ்ரேயா வீசிய இந்த கல்லில் இரண்டு மாங்காய்கள் விழ வாய்ப்புள்ளதே, அதுதான் சுவாரஸ்யம்.

முதல் மாங்காய், மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டாச்சு. இரண்டாவது மாங்காய், சுஹாசினிக்கும் விளக்கம் சொல்லியாச்சு! யார் சொன்னது ஸ்ரேயா சின்ன பொண்ணு என்று!

ஒரேமாதிரி உப்புமா...! -நார்வே தமிழர்கள் அதிரடி!

சில விதிகள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் போலிருக்கிறது. நார்வே நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர் ஒருவர் இயக்கும் படத்தின் கதையை கேட்டால் இக்கட்டுரையில் முதல் வரியைதான் முடிவாக ஏற்றுக் கொள்வீர்கள். தாதாவாக வாழும் ஒருவன் அந்த வாழ்க்கையை விட்டு திருந்தி வாழ நினைத்தாலும் அவனை அந்த சமுதாயம் வாழ விடாது. இதுதான் அந்த நார்வே தமிழர் இயக்கப்போகும் படத்தின் ஒரு வரி கதை! (நம்ம ஊரிலும் இதே கதைதானே மச்சி)

தொப்புள் கொடி, முற்றத்து மண், நிஜங்கள் உள்ளிட்ட 9 குறும்படங்களை தயாரித்தவர் நார்வே தமிழரான துரூபன். தமிழ்சினிமா மீது ஏற்பட்ட காதலின் காரணமாக தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார் துரூ. இவர் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மீண்டும் என்ற படத்திற்கு ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கூட துரூபனேதான்!

முக்கிய பாத்திரங்களில் எல்லாம் நார்வே தமிழர்களே நடிக்க, ஹீரோயின் ஸ்வேதா பாரதி மட்டும் நம்ம ஊரு ஸ்வீட் சிக்ஸ்டீன்! ஆதி படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருக்கிறாராம். இவரைப்போலவே படத்தின் வேலையில் பாதியை சுமக்கும் இன்னொரு தமிழ்நாட்டுக்காரர் வி.எஸ்.உதயா. கண்டேன் சீதையை, பீஷ்மர், காசு போன்ற படங்களின் இசையமைப்பாளர். விரைவில் வெளிவர இருக்கும் காதல் கடிதம் படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். இந்த படத்திற்காக 'மீண்டும' ஒரு முறை நார்வே சென்று 30 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார். இதற்கு முன் இவர் நார்வே போனதற்கு காரணம், இவர் இசையமைப்பில் உருவான இரண்டு மியூசிக் ஆல்பங்கள் வெளியீட்டு விழா!

கால காலமாக தமிழ்நாட்டிலிருந்து வருகிற படங்களையே பார்த்து பார்த்து சலித்துப்போயிருக்கிறோம். ஏன் நாங்களே தயாரிக்க கூடாது? இதுதான் நார்வே தமிழர்களின் புதிய முயற்சிக்கு காரணமாம்!

இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டு உப்புமாவையே திரும்ப திரும்ப ருசித்துக் கொண்டிருந்த (வேறு வழியில்லாமல்) இவர்கள், இப்போது கையில் உபகரணங்களோடு களத்தில் இறங்கிவிட்டார்கள். கோலிவுட் சமையல்காரர்கள் கைப்பக்குவத்தை காப்பாற்றிக் கொண்டால்தான் பிழைக்கலாம் போலிருக்கிறத

க்ளைமாக்ஸ் ஜுரம்! -ரயில்வே கொடுத்த கசப்பு மருந்து!

'ரயில் நிலையத்தில் க்ளைமாக்ஸ் வைத்தால் அந்த படம் பெரிய வெற்றி பெரும்' இப்படி போகிற போக்கில் ஊதிவிட்டு போகிற சில புண்ணியவான்களின் கருணையால் ரயில்வே துறைக்கு அமோக விளைச்சல்!

பதினாறு வயதினிலே தொடங்கி, இதயம் உள்ளிட்ட பல்வேறு படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாக காட்டியதால், ஹீரோவோ, ஹீரோயினோ வலுக்கட்டாயமாக ரயில்வே ஸ்டேஷனில் பிரிந்து, பின் அபாயசங்கலியின் உதவியுடன் ரயிலை நிறுத்தி, ஒன்று சேர்வார்கள்! ஊருக்கு போகிற ஹீரோயின் பஸ்சில் ஏறி போனால் என்ன என்று எந்த ரசிகனும் இயக்குனர்களை கேட்டதாக வரலாறே இல்லை. அதுமட்டுமல்ல... இந்த ரயில் போய்விட்டால் அவ்வளவுதான். வாழ்க்கையே போச்சு என்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு போகிற ஹீரோக்கள், அடுத்த ரயில் பிடித்து ஹீரோயின் வீட்டுக்கு போனால் என்ன என்றும் யோசித்தது இல்லை. போகட்டும் விடுங்கள்...

ரயில் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளில் எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இனிமேல் ரயிலின் கூரை மேல் சண்டை போடுவது, படியில் அமர்ந்து கொண்டு பயணம் செய்வது போலவோ, படிகளில் தொங்கிக் கொண்டு செல்வது போலவோ காட்சிகள் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போதே படத்தின் கதை சுருக்கத்தையும் காட்சி விளக்கத்தையும் கொடுக்க வேண்டுமாம். (கதை சுருக்கமா? அதை தயாரிப்பாளர்களுக்கே காட்டுவதில்லையே பல இயக்குனர்கள்?) இப்படி பல கெடுபிடிகளை விதித்திருக்கும் ரயில்வே துறை, சென்னை போன்ற பெரு நகர ரயில்வே நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது.

பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் ஓ.கே! சின்ன தயாரிப்பாளர்கள் இனிமேல் நல்ல பஸ் நிறுத்தமாக பார்த்து க்ளைமாக்சை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!

இளையராஜா-ரஜினி சந்திப்பு!

ரஜினியும், இளையராஜாவும் சந்தித்து மணிக்கணக்காக பேசியதுதான் இப்போதைக்கு சுட சுட உலவும் கோலிவுட் செய்தி. மாதத்திற்கு இரண்டு முறையாவது சந்தித்து பேசுவது இருவருக்கும் வழக்கம் என்றாலும், இந்த சந்திப்பிற்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து விவாதிக்கிறது கோடம்பாக்கம்!

ஏன்? ரஜினியிடம் எப்படியாவது கால்ஷீட் வாங்கிவிடுவது என்று மல்லுகட்டும் பழைய தயாரிப்பாளர்களின் ஓட்டப்பந்தயத்தில் சத்தம்போடாமல் உள்ளே புகுந்திருக்கிறார் இளையராஜா. கடந்த ஒரு வருடமாகவே சொந்தப்படம் எடுக்க திட்டமிட்டு வருகிறார் ராஜா. இதற்கிடையில், அப்பாவின் ஆசையோ, சொந்த விருப்பமோ, படத்தயாரிப்பில் இறங்கிவிட்டார் யுவன்சங்கர்ராஜா. முற்றிலும் புது முகங்களை வைத்து இவர் தயாரிக்கும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில்தான் ரஜினியும், ராஜாவும் சந்தித்துக் கொண்ட விஷயத்திற்கு இப்படியும் சில முடிச்சுகளை போடுகிறார்கள் கோலிவுட்டில். ஆன்மீகத்தில் இருவருமே ஒருதுருவ சிந்தனையாளர்கள் என்பதால் யார் கனவில், எந்த சாமி வந்து இந்த கட்டளையை இட்டதோ? செய்தி உண்மையாக இருக்கிற பட்சத்தில், பக்தி பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது!

கூடவே இன்னொரு செய்தியையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.. அஜய்தேவ்கான் நடித்த இந்தி படமான 'ஹல்லா போல்' கதையை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம். இதற்காக ரஜினியிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம். இதை முன்னிட்டு ரஜினி மேற்படி படத்தை பார்த்துவிட்டார் என்றும், இல்லையில்லை இன்னும் பார்க்கவில்லை என்றும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிமிடம் வரைக்கும் ரஜினியின் அடுத்த பட லிஸ்டில் இந்த படத்தையும் சேர்த்துக் கொள்வோமே! காசா? பணமா? ச்சும்மா பேச்சுக்குதானே?

கல்லூரி வந்த பிறகுதான் காதல் வரும் காதல் வந்த பிறகு கல்லூரி வருது!

மூன்று தலைமுறை இயக்குனர்களையும் மேடையேற்றி தன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையே, வெற்றி விழாவை போல நடத்தினார் ஷங்கர். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'கல்லூரி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இத்தனை பரபரப்பும்!

பாரதிராஜா துவங்கி... வெங்கட்பிரபு வரை, மேடை கொள்ளாத இயக்குனர்கள்! அபூர்வமாக கலந்து கொண்டார்கள் மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும்! 'வழக்கமா சிறையிலிருந்து கைதிகளைதான் விடுதலை செய்வாங்க. ஆனா சமீபத்தில், ஒரு சிறையையே கைதிகளிடமிருந்து விடுதலை செஞ்சுருக்காங்க...' பார்த்திபனின் தொகுப்புரைக்கு வரிக்கு வரி கிளாப்ஸ் அடித்தது கூட்டம். படத்தின் பெயர் கல்லூரி என்பதால், விழாவுக்கு வந்திருந்த வி.ஐ.பி களின் கல்லூரி வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை சொல்லி, குறிப்பிட்ட அந்த வி.ஐ.பி களையே திணறடித்தார் பார்த்திபன்.

கிராமிய பண்பாட்டுத்துறை 'ஹெச் ஓ டி' என்று தங்கர்பச்சானை பார்த்திபன் மேடைக்கு அழைக்க, தனக்கேயுரிய தடாலடி பேச்சால் மிரள வைத்தார் தங்கர். தயாரிப்பாளர்களின் நிலைமை இன்னிக்கு ரொம்ப மோசமா இருக்கு. ஒரு படம் எடுப்பதோடு சரி, பல தயாரிப்பாளர்கள் காணாமல் போயிடுறாங்க. கருப்பு பணம் இருக்கறதாலதான் இத்தனை படங்கள் தமிழில் வருது. அப்படியில்லைன்னா வருடத்திற்கு இரண்டு படம் கூட வராது என்று அவர் சொல்ல, மேடையிலிருந்த முக்கால்வாசி இயக்குனர்கள் முகத்தில் அதிர்ச்சி. அந்த மேடையிலேயே, ஷங்கரின் தயாரிப்பில் தனக்கும் ஒரு படம் இயக்குகிற வாய்ப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்றுவரும் எல்லா திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்கிறார் பாலுமகேந்திரா. தமிழ்த்தாய் வாழ்த்தை ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசையில் மறுபதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்ள, அதை ஆமோதித்து ஆரவாரம் செய்தது கூட்டம்!

எல்லாருக்கும் கல்லூரி வந்த பிறகுதான் காதல் வரும். ஆனால் பாலாஜிக்கு காதல் வந்தபிறகு கல்லூரி வருகிறது என்று ராதாமோகன் பேச, பார்த்திபனே 'ஜெர்க்' ஆனார்.

கல்லூரி வாசலையே மிதிக்கவில்லை என்று வருந்திய பாரதிராஜா, தன்னுடைய சிறு வயது காதலையும் அசைபோட்டார். காதல் படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு போன பிறகும், பேச வராமல் அதிர்ந்து போயிருந்ததை குறிப்பிட்டவர், பருத்திவீரன், வெயில் இயக்குனர்களையும் பாராட்டினார். இவங்கள்ளாம் என்னை தூங்கவிடாம செஞ்சுட்டாங்க என்று அவர் சொல்ல சொல்ல, சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் முகத்தில் வழிந்தோடியது பெருமிதம்.

ராம் படத்தின் ஆடியோவை விற்பதற்கு நான் படாதபாடு பட்டேன். சினிமா வியாபாரத்தில் இன்னமும் புரியாமலிருப்பது இரண்டு ஏரியாதான். ஒன்று இந்த ஆடியோ, மற்றொன்று வெளிநாட்டு உரிமை. என்னுடைய யோகி படத்தின் ஆடியோவை நீங்களே இலவசமாக வெளியிடணும் என்றார் அமீர். (ஷங்கர் தன் 'கல்லூரி' படத்தின் ஆடியோவை புதிதாக தொடங்கியிருக்கும் 'எஸ் மியூசிக்' என்ற நிறுவனத்தின் மூலமாகதான் வெளியிடுகிறார்)

இத்தனைபேர் இங்கே மேடையில் ஒன்றாக இருப்பது ஆச்சர்யம். மும்பையிலே இருந்து அவங்களை கொண்டு வந்து இந்த மேடையை காட்டணும் என்றார் மணிரத்னம். 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட, சில நிமிடங்கள் தன் உரையை நீட்டித்தது ஆச்சர்யம். காதல் படத்தை நான் இன்னும் பார்க்கலை. இன்னும் இரண்டு நாட்களில் எப்படியாவது பார்த்திடறேன் என்றார்.

எல்லாருடைய பெயரையும் எழுதி வைத்துக் கொண்டு தனித்தனியாக நன்றி சொன்னார் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். முடிவாக பேசிய கல்லூரி படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் ஷங்கருக்கு எல்லாரும் எழுந்து நின்று கைதட்டணும் என்று கேட்டுக் கொண்டார்.

நல்லவேளை... பெஞ்ச் மேல எழுந்து நின்று கை தட்டணும் என்று சொல்லாமல் விட்டாரே...!

உளி கொடுத்த வலி! -வினித்திற்கு நேர்ந்த விபரீதம்!

கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'உளியின் ஓசை' படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிற்பி வேடத்தில் வினித்தும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஆர்ட் டைரக்டர் மகி பிரமாண்டமான செட் ஒன்றையும் போட்டிருக்கிறார். சிற்பங்களை செதுக்கும் காட்சி எடுக்கப்பட்டு வருவதால் பாறாங்கற்களை கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் வினித் சிற்பம் செதுக்கிக் கொண்டிருப்பது போலவும், அவருக்கு மாடலாக கீர்த்தி சாவ்லா போஸ் கொடுப்பது போலவும் எடுத்தார்கள். காட்சிப்படி, உளியை வேகமாக அடிக்கும்போது கல்லிலிருந்து ஒரு துகள் பறந்து வந்து வினித் கண்களில் விழ வேண்டும். கீர்த்தி சாவ்லா ஓடிவந்து அவரது கண்களை தன் இதழ்களால் ஊத வேண்டும்.

உளியை பாறாங்கல்லில் வைத்து வேகமாக அடித்த வினித்தின் கண்களில் பெரிய துகள் ஒன்று நிஜமாகவே பறந்து வந்து பதம் பார்க்க, துடித்துப் போய்விட்டாராம் வினித். பதைபதைத்து போய்விட்டது யூனிட் முழுவதும். உடனடியாக வினித்திற்கு முதலுதவி செய்யப்பட்டிருக்கிறது. சில மணி நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. காட்சி சிறப்பாக வந்ததில் கண்ணில் பட்ட வலியை மறந்தாராம் வினித். உதடுகளால் ஊதி உஷ்ணத்தை குறைக்க வேண்டிய கீர்த்தி, செய்வதறியாது திகைத்து நின்றதுதான் பரிதாபம் என்கிறார்கள்.

இதுவே வேறு ஹீரோக்களுக்கு நடந்திருந்தால், விஷயத்தை 'ஊதி' பெரிதாக்கி இருக்கமாட்டார்களா?

நல்ல படம் பார்க்கலைன்னா உதைப்போம்! -சினிமா ரசிகர்களுக்கு தங்கர்ப்பச்சான் எச்சரிக்கை

தி.நகரில் அமைந்திருக்கும் கர்நாடக சபாவில் தன்னுடைய ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினார் தங்கர்பச்சான். பாரதிராஜா, மணிரத்னம், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் விஜய் உள்ளிட்ட பலர் மேடையில் அமர்ந்திருக்க, ஞாயிற்றுக்கிழமையின் அந்த காலைப்பொழுது தமிழ்சினிமாவின் கம்பீரத்திற்கு பொலிவு சேர்த்தது.

தங்கர் பற்றி பேசிய எல்லாரும், அவர் வெளிப்படையான மனிதர். கொஞ்சம் வாய் ஜாஸ்தி என்றே விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு தகுதியானவர்தான் என்பது போல் அமைந்திருந்தன திரையிடப்பட்ட ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் மூன்று பாடல்கள். 'மார்கழியில் குளிச்சுப்பாரு, குளிரு பழகி போகும்... மாதவரா இருந்து பாரு, வறுமை பழகி போகும்' என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளும், அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருந்த தங்கரின் ஆற்றலும் பிரமிக்க வைத்தது அனைவரையும்.

கலகலப்புக்கும் பஞ்சமில்லை, சலசலப்புக்கும் குறைச்சலில்லை இந்த விழாவில்! பிரபுதேவா பேசியதுதான் கலகலப்பு. நாங்கள்ளலாம் அவரை டக்கர்ன்னுதான் கூப்புடுவோம். எங்காவது லொகேஷன் பார்க்க காரில் ஒண்ணா கிளம்புவோம். திடீர்னு ஒரு மாட்டை பார்த்துட்டு அந்த மாடு பாருங்க. எவ்வளவு அழகா நடந்து போவுதும்பாரு. புல்லை பார்த்துட்டு இந்த புல் எப்படி வளர்ந்திருக்கு பாருங்கம்பாரு. அரைமணிநேரம் ஆளை காணுமேன்னு பார்த்தா எங்காவது சாணி பக்கமா உட்கார்ந்திருப்பாரு. இங்க பாருங்க... மாடு எவ்வளவு அழகா சாணி போட்டிருக்கும்பாரு. இரண்டு நாளுக்கு முன்னாடி இந்த விழாவுக்கு வரச்சொல்லி போன் பண்ணினாரு. நான் உடனே சரின்னு சொல்லிட்டேன். இல்லைன்னா, ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ பிரபு ஏன் விழாவுக்கு வரலை தெரியமான்னு ஒரு பேட்டி கொடுப்பாரு என்று சொல்ல, கைதட்டல் அரங்கத்தை அதிர வைத்தது.

வழக்கம்போல் சலசலப்பு தங்கரின் பேச்சுக்குதான்! படத்தை பற்றி பேசிக்கொண்டேயிருந்தவர், நல்ல படங்கள் எடுக்கறதே கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வருது. நம்ப மண்ணை பற்றி படம் எடுக்காம எதை எதையோ எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. பாரதிராஜா படத்தை கூட நான் ஒரு கட்டத்திலே பார்க்கறதை நிறுத்திட்டேன். காரணம், அவரு மண்வாசனையை விட்டு விலகி போயிட்டாரு. (இத்தனைக்கும் மேடையில் பாரதிராஜாவும் உட்கார்ந்திருந்தார்) இனிமே மக்கள் நல்ல படத்தைதான் பார்க்கணும். இல்லைன்னா நானும் சீமானும் நல்ல படங்களை பார்க்க சொல்லி அடிப்போம் என்று ஆவேசப்பட்டார். திடீரென்று சீமான் பக்கம் திரும்பி, இதெல்லாம் வேணாம்டா சீமான். நாம கிளம்பி போயிடலாம்டா. நமக்கு வேற வேலை இருக்கு என்று சீறினார். 'இப்போ ஒரு தியேட்டரில் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம்னு ஒரு வசதியை கொண்டு வந்திருக்காங்களாம். நல்லவேளை அதோடு விட்டாங்களே...' என்று ஆரம்பித்து, 'அதை என் வாயாலே எப்படி சொல்றது?' என்று அபிராமி தியேட்டரையும் ஒரு பிடி பிடித்தார்.

விஜயின் பேச்சுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். தங்கர்பச்சான் இயக்கத்தில் நான் ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். அவருடைய கிராமத்து ஸ்டைலில், என்னுடைய பாணியும் இணைந்து இருந்தால் நிச்சயம் நான் நடிப்பேன் என்று அவர் சொல்ல, தங்கரின் முகத்தில் ஓராயிரம் மின்னல்கள்! தன்னுடைய ஏற்புரையில் இதை குறிப்பிட்ட தங்கர், நிச்சயம் விஜய்க்கு ஏற்றது மாதிரி ஒரு கதையை தயார் செய்து கொண்டுதான் அவரிடம் கதை சொல்லப்போவேன். அப்படி ஒரு கதை அமையாவிட்டால் அந்த திசைக்கே போக மாட்டேன் என்று உறுதியளித்தார்.

தமிழ்சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள். ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் போன்றவர்களை சொல்லலாம். ஆனால் இப்போது அப்படியல்ல, ஒரு படையே இருக்கிறது. அதில் தங்கர்பச்சான் முன்னணியில் இருக்கிறார் என்று மணிரத்னம் வாழ்த்தி அமர்ந்தார்.

நான் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் என்னை கவர்ந்த பாடல் இது என்று மூன்று பாடல்களை பட்டியலிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து. ஆயிரம் தாமரை மொட்டுகளே, உயிரே உயிரே, என்ன சத்தம் இந்த நேரம்... இவற்றோடு நான்காவது பாடலாக நான் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் பாடலையும் சேர்த்துக் கொள்கிறேன். நான் எழுதிய வரிகளை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் தங்கர்பச்சான் என்றார். 'பிரபுதேவா பேசும்போது தங்கரை மண் என்றும் சாணி பக்கத்தில் அமர்ந்திருந்தார் என்றும் சொன்னார். மண்ணுக்கு சாணிதான் உரம்' என்று வைரமுத்து சொல்ல, கைதட்டல்களால் அதிர்ந்தது அரங்கம்!

மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய அர்ச்சனா, உள்ளாடைகள் தெரிய புடவை கட்டி வந்திருந்ததுதான் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது ரசிகர்களை!

விநியோக உரிமையை வாங்கத் துடிக்கும் வடிவேலு

இந்திரலோகத்தின் ந.அழகப்பன் படத்தில் ஸ்ரேயா வடிவேலுவுடன் நடனமாடுவதால் இப்படத்திற்கான
எதிர்பார்ப்பு கூடிவிட்டது.

 


செவன்த் சேனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு பாட்டும், இரண்டு காட்சிகள் மட்டுமே படமாக்கபட வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் மதிப்பு கூடிவிட்டதால் படத்தின் மதுரை மற்றும் சென்னை ‌வி‌நியோக உ‌ரிமையை தனக்கு விலைக்கு கொடுக்குமாறு கேட்டிருக்கிறாராம் வடிவேலு.
இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாக் ஸ்ரேயாவும், நயன்தாராவும்தான்.
 


சூப்பர் ஸ்டாரோடு ஜோடி சேர்ந்தவர் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறாரே என்று அதிசயப்பட, அதனால் என்ன? பாட்டு நன்றாக வந்திருக்கிறது என்று கூலாகச் சொல்கிறார் ஸ்ரேயா.

 


ஆரம்பத்தில் பூசியது மாதிரி உடல்வாகு கொண்ட நயன்தாரா இப்போது படு ஸ்லீமாகி வனப்பை கூட்டியிருக்கிறார். அத்தோடு பில்லா படத்தில் டூ பிஸ் உடையில் நடித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

அதைப்பற்றி அவரிடம் கேட்டால் கதைக்கு தேவைபடுகிறது அதனால் நடிக்கிறேன் என்கிறாராம் பந்தாவாக.

வில்லனாக கலக்கியிருக்கும் விஜய்

கமர்ஷியலாக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய்க்கு ஆண்டி ஹீரோவாக நடிப்பது மிகவும் பிடித்த ஒன்று.

முன்பு ப்ரியமுடன் படத்தில் அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தார். மீண்டும் இப்போது ஆசை துளிர்விட அழகிய தமிழ்மகன் படத்தில் அதை வெளிபடுத்தியிருக்கிறார்.

இதில் இரண்டு கெட்டப்புகளில் விஜய் வருகிறார் என்பது தெரிந்த விசயம். அதில் ஒரு விஜய் முழுக்க முழுக்க ஆண்டி ஹீரோவாக வில்லத்தனம் காட்டி நடித்திருக்கிறாராம்.

படம் பார்த்த சிலர் அந்த கதாபாத்திரத்தில் விஜய் பிரமாதபடுத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.

இரண்டு துருவங்களாக இருந்த அஜித்-விஜய் சமரசம்!

அரசியல்வாதிகளுக்கு இணையாக படங்க‌ளில் வார்த்தை விளையாட்டு நடத்திக்கொண்டிருந்த இளைய தளபதி விஜயும், தல அஜித்தும் இப்போது சமாதானமாகிவிட்டார்கள்.

விஜ‌ய்யின் அழைப்பை ஏற்று அவரது நீலாங்கரை வீட்டுக்கு தனது மனைவி ஷாலினி சகிதமாக போய்விட்டு திரும்பியிருக்கிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாப்பிக்.

 


எப்படி நடந்தது இந்த அதிசயம்? தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் இருவரும் அருகருகே அமர்ந்து விழாவை சிறப்பித்த போட்டோக்கள் அடுத்தநாள் தினசரிகளில் வெளிவந்ததைப் பார்த்து சீனியர் ஸ்டார் ஒருவர் போன் போட்டு பாரட்டியிருக்கிறார்.

இதேபோல் எப்பவும் இருப்பதுதான் உங்களுக்கும் சினிமாவுக்கும் ஆரோக்கியமான விஷயம் என்று சொன்னாராம். அதை தொடர்ந்து விஜய் போனில் அஜித்துக்கு அழைப்பு விடுக்க...நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள் இருவரும் குடு‌ம்பத்தோடு சந்தித்து மனம் விட்டு பேசியிருக்கிறார்கள்.