Friday, November 30, 2007

கதாசியர்கள் ஸ்டிரைக்-ஸ்தம்பிக்கும் ஹாலிவுட


ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் கடந்த இரு மாதங்களாக வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதால் பல திரைப்படத் தயாரிப்புப் பணிகளும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பல தொலைக்காட்சிகளின் சீரியல்கள் (நம் ஊர் மெகா சீரியல்கள் மாதிரி) நிறுத்தப்பட்டு, பழைய தொடர்களை தூசி தட்டி ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஸ்டிரைக்கு காரணமே இன்டர்நெட் தான். தாங்கள் எழுதும் படங்கள், சீரியல்களை இன்டர்நெட்டில் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் தங்களுக்கும் லாபம் வேண்டும் என கொடி பிடித்துள்ளனர் இந்த எழுத்தாளர்கள். அதே போல டிவிடி விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்திலும் பங்கு கேட்கின்றனர்.

ஆனால், இன்டர்நெட் மூலம் படங்களை விற்று பணம் சம்பாதிப்பதில் பல சிக்கல்களை சந்தித்து வரும் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சி நிர்வாகங்களும் எழுத்தாளர்கள் கேட்கும் தொகையை தர தயாராக இல்லை.

இவர்கள் கேட்கும் ெதாகை இன்டர்நெட் மூலம் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளதாம். இதனால் பேசாமல் நெட்டில் படங்கள், சீரியல்களை விற்பதையே நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

இந்த ஸ்டிரைக்கால் படத் தயாரிப்பு, மெகா சீரியல்கள் தவிர டாக் ஷோக்கள் தயாரிப்பு கூட பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய தொடர்களை போட்டு நேரத்தை ஓட்ட வேண்டிய நிலைக்கு பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

நம் ஊராக இருந்தால் டைட்டிலை மட்டும் மாற்றி பழசையே புதிய தொடராகக் காட்டி விடுவார்கள்.

என் வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் .. குஷ்பு குமுறல


சிலர் என்னையே கண்காணித்துக் கொண்டு, எனது அமைதியான வாழ்க்கையைக் கெடுக்கும் நோக்கில் நடந்து கொள்கிறார்கள். என் மீதான வழக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. சில வேலையில்லாதவர்களின் வேலை இது என்று குஷ்பு கடுப்புடன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது செருப்புக் காலுடன், கால் மேல் கால் போட்டவாறு, முப்பெரும் தேவியர் சிலைகள் முன்பு அமர்ந்திருந்த குஷ்புவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி என்பவர் கும்பகோணம் நீதிமன்றத்தில், குஷ்பு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். முப்பெரும் தேவியரை அவமதித்து விட்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து குஷ்புவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது கேலிக் கூத்தாக உள்ளது. குறிப்பிட்ட சிலர் என்னையே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளனர். எனது அமைதியான வாழ்க்கையைக் கெடுக்க முயலுகிறார்கள்.

இந்து கடவுள்களை நான் அவமதித்து விட்டதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது சில வேலையில்லாதவர்களின் வேலையாகும்.

உண்மையில், நான் சம்பவ நாளன்று சிலைகளுக்கு 4 அல்லது 5 அடி தொலைவில்தான் அமர்ந்திருந்தேன்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அதை சந்திக்க நான் தயார்.

இந்துக்களின் உணர்வுகளை நான் ஒருபோதும் புண்படுத்தியுள்ளது. இந்துக் கடவுள்களையும் நான் அவமதிக்கவில்லை. உண்மையில் நான் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்து மத சம்பிரதாயங்களைத்தான் பின்பற்றி வருகிறேன். இந்துப் பெண்ணாகத்தான் குடும்பம் நடத்தி வருகிறேன். இந்து மதத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றார் குஷ்பு.

இதற்கிடையே, குஷ்புவின் வீட்டுக்கு ஏராளமான பத்திரிக்கையாளர்களும், டிவி நிருபர்களும் சென்று கருத்து கேட்க முயன்றனர். ஆனால் குஷ்பு யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டதால் அவர்கள் திரும்பி விட்டனர்.

கடவுள் வர்ராரு!


ஒரு வழியாக கடவுளை கண்ணில் காட்ட முடிவு செய்து விட்டார் இயக்குநர் பாலா. பல மாதங்களாக அவர் இயக்கி வந்த நான் கடவுள், ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருகிறதாம்.

பிதாமகனுக்குப் பிறகு பெரிய இடைவெளி விட்ட பாலா, அடுத்துத் தொடங்கிய படம் நான் கடவுள். ஆரம்பத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தது. ஆனால் டெர்ம்ஸ் சரிப்பட்டு வராததால் அஜீத்தை தூக்கி விட்டு ஆர்யாவை நாயகனாக்கினார். பின்னர் ஹீரோயின் சரிப்பட்டு வரவில்லை என்று பலமுறை பல நாயகிகளை மாற்றினார். இறுதியில் பூஜா செட்டிலானார்.

இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்ட வேலைகள் நட்து கொண்டுள்ளதாம்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் கடவுள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்ைத ஆரம்பத்தில் தயாரித்து வந்த தேனப்பன் விலகிக் கொண்டார். பிறகு பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், ஸ்ரீவரி சீனிவாசன் இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து வருவதால், பட ரிலீஸ் தேதி குறித்து பாலா பேசத் தொடங்கியுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று படம் திரைக்கு வரும் என்று பாலா கூறியுள்ளார்.

பாலாவின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள நான் கடவுளில் ஆர்யா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். நாயகி பூஜாவுக்கும் படு வித்தியாசமான கேரக்டர்தான்.

கடவுளை தரிசிக்க தயாராவோம்!

Thursday, November 29, 2007

ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் -முதன்முதலாக வாங்கிய சினிமா நிறுவனம்!


தமிழ்சினிமாவில் வேறெந்த நிறுவனத்திற்கும் கிடைக்காத பெருமை இன்சைட் மீடியாவுக்கு கிடைத்திருக்கிறது. ஐ.எஸ்.ஓ 90001-2000 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை சென்னைக்கே வந்து இன்சைட் மீடியாவின் உரிமையாளர் நாக்.ரவியிடம் வழங்கினார் ஐ.எஸ்.ஓ நிறுவன தலைவர் ஃபிரடரிக்.

இதற்கு முன் பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்தும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்த சான்றிதழ் உங்களுக்கு மட்டும் கிடைத்தது எப்படி?. இந்த சான்றிதழ் வாங்குவதற்கு ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. அலுவலக நிர்வாகம் தொடங்கி, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்துதான் இந்த சான்றிதழை கொடுப்பார்கள். சுமார் 8000 பக்கங்களில் தயாரிக்கப்பட்ட எங்கள் நிறுவனத்தை பற்றிய விபரங்களை பக்கம் பக்கமாக ஆராய்ந்து, அதிலிருந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, திருப்தி அடைந்த பிறகுதான் இந்த சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது என்றார் ரவி.

சான்றிதழ் வழங்கிய கையோடு இன்சைட் மீடியாவின் பங்களிப்பில் வெளிவந்திருக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தையும் பார்த்தார் ஃபிரடரிக். நல்ல படத்தைதான் வாங்கியிருக்கிறீர்கள் என்ற பாராட்டுகளையும் வழங்கிவிட்டு ஃபிளைட் ஏறினார் அவர்!

எஸ்.ஜே.சூர்யாவின் வில் பவர்!


ஒருகாலத்தில் இவர் நடித்த படங்களின் சில ஏரியாக்கள் ரஜினி படத்தின் அளவுக்கு விலை போனது. ம்ம்ம்... அதெல்லாம் அந்த காலம் என்றுதான் கவலைப்பட வேண்டியிருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவை நினைத்தால். தொடர் தோல்விகள் சூர்யாவுக்கு எதை எதை கற்றுத்தர வேண்டுமோ, அதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இனிமேல் நான் ஹீரேவாக நடிப்பேன். அதை நானேதான் இயக்குவேன். அப்படி அமையவில்லை என்றால், வேறு ஹீரோக்களை நடிக்க வைத்து அந்த படங்களை இயக்குவதோடு நிறுத்திக் கொள்வேன். இதுதான் என் திருத்தப்பட்ட கொள்கை என்கிறார் விரக்தி ப்ளஸ் நம்பிக்கையுடன்.

தற்போது இவர் நடித்து வரும் வில் படத்தில் ஊனமுற்றவராக நடிக்கிறார். இதுவரை இருந்த டபுள் மீனிங் சூர்யா இந்த படத்தில் இல்லை. அதுமட்டுமல்ல, எனக்கென்று இதுவரை உருவாகியிருந்த இமேஜை இந்த படம் நிச்சயம் அழிக்கும் என்கிறார். இந்த படத்தின் வெற்றி எனக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜை பெற்றுத்தரும். அதன்பின் நான் பெரிய ஹீரோ யாரையாவது வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்திருந்த புலி படத்தில் நானே நடிப்பேன். அதற்கு முன்னோட்டமாக என்னுடைய வில் இருக்கும் என்கிறார்.

வில் பவர் என்பது இதுதானோ?

கண்ணாவுக்கு பிரகாஷ்ராஜ் செக்!


பத்து நிமிடத்தில் கதை சொல்லுங்க என்றார் பிரகாஷ்ராஜ். நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே இந்த படத்திலே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் சம்மதம் கொடுத்த அந்த நேரம், நான் கதை சொல்ல ஆரம்பித்த ஒன்பதாவது நிமிடம்! இப்படி ஹீரோ ஒருவருக்கு கதை சொன்ன விஷயத்தையே ஒரு பில்டப்போடு சொல்ல தெரிந்த கண்ணா படத்தின் இயக்குனர் ஆனந்துக்கு, பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டை வாங்கி படத்தை விரைவில் முடிப்பது மட்டும் அவ்வளவு எளிதாக இல்லை. பயங்கர ஜவ்வ்வ்வ்வு!

கண்ணா படம் துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. இரண்டு நாள், ஒரு நாள் என்று பிரகாஷ்ராஜிடம் கால்ஷீட் வாங்கிதான் படத்தை முடித்திருக்கிறார் ஆனந்த். டப்பிங் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். இங்கேதான் பிரச்சனையே ஆரம்பம் ஆகியிருக்கிறது. அபியும் நானும் என்ற சொந்த படத்தை எடுத்து வருகிறார் பிரகாஷ். அதில் த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். கண்ணாவில் ஷீலாவுக்கு அப்பாவாம். இரண்டு கதைகளின் மையக்கருத்தும் கிட்டதட்ட ஒன்றாகவே இருப்பதால், கண்ணா படத்தின் கதையை மாற்றி சில காட்சிகள் எடுங்கள். அப்படி செய்தால்தான் டப்பிங் பேசுவேன் என்கிறாராம் பிரகாஷ்.

விஷயத்தை இயக்குனர்கள் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் பேசிக் கொண்டிருக்கின்றன. விரைவில் சுமூக முடிவு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ஆனந்த்.

நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல..


நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல, அப்படி ஒரு இமேஜை உருவாக்க இங்கே சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் திவ்யா. அவர் கைகாட்டுகிற திசை கே.எஸ்.அதியமான் நிற்கிற திசையாக இருப்பதுதான் வில்லங்கம்!

தூண்டில் படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது தன்னுடைய லேப்-டாப்பை காணவில்லை என்று குமுறிய திவ்யா, அதற்கான பணத்தை தயாரிப்பாளர் கொடுத்தால்தான் மேக்கப்பே போடுவேன் என்று அறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் திவ்யாவின் அஜாக்கிரதைக்கு தன் பணத்தை அழுதார் தயாரிப்பாளர். ஒருவழியாக படத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியதும் தூண்டில் பட இயக்குனர் அதியமான் செய்த முதல் வேலை, பாடல் காட்சிகளில் எடுக்கப்பட்ட திவ்யாவின் கவர்ச்சி படங்களை நெட்டில் உலவ விட்டதுதான்.

இதனால்தான் தனக்கு கவர்ச்சி இமேஜ் வந்துவிட்டதென்று கருதுகிறார் திவ்யா. பொல்லாதவன் படத்தில் கூட, கூடுதல் கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டாராம். தீபாவளிக்கு வந்த படங்களில் வெற்றிப்பட லிஸ்டில் பொல்லாதவனுக்கும் இடம் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார் திவ்ஸ். அடுத்தடுத்த படங்களில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். வெறும் கவர்ச்சி காட்டுவார் என்று யாராவது வந்தால், இப்பவே சொல்லிட்டேன்... வராதீங்க! கட் அண் ரைட்டாக பேசுகிற திவ்யா, தானே டப்பிங் பேசுகிற அளவுக்கு தமிழ் பேசுகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!

ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.

ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,

வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.

சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.

ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.

ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,

வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.

சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.

கருணாநிதி தலையிடக் கூடாது-மலேசிய அமைச்சர


கோலாலம்பூர் & சென்னை: மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தலையிடக்கூடாது என்று மலேசிய நாட்டு நீதித்துறை அமைச்சர் நஸ்ரி அஜீஸ் கூறியுள்ளார்.

மலேசிய தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந் நிலையில் மலேசிய அமைச்சர் அஜீஸ் கூறுகையில்,

மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கருணாநிதி எதுவும் பேசாமல் கண்டிப்பாக விலகி இருப்பது தான் நல்லது. இந்த விவகாரத்தில் தலையிட இது ஒன்றும் தமிழ்நாடு கிடையாது, இது மலேசியா என்பதை அவர் முதலில் தெரிந்து கொள்ளட்டும்.

மலேசியாவில் நடந்த விவகாரம் குறித்து கூச்சல் போட்டுக் கொண்டு நாடாளுமன்றத்தில் திமுக கேபினட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார்கள்.

மலேசியாவின் நடவடிக்கை எப்போதும் கடுமையாகத் தான் இருக்கும். அதற்காக எங்கள் நாட்டைப் பற்றி யார் கடுமையாக பேசினாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நாங்கள் எங்களுடைய பணியை தான் செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை முதலில் அவர் கவனிக்கட்டும், மலேசியா பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்றார்.

பதிலளிக்க கருணாநிதி மறுப்பு:

மலேசிய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்க முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், இதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. மலேசிய தமிழர்களின் இன்னல்களை பிரதமரின் கவனத்துக்கு ெகாண்டு போவது என் கடமை. அதை இந்த மாநில மக்களின் சார்பில் நான் செய்தேன். மற்றபடி அந்த நாட்டு அமைச்சருக்கு பதில் சொல்லி பிரச்சனையாக்க விரும்பவில்லை.

மலேசிய அரசுக்கு எதிராகக் கூட நான் ஏதும் சொல்லவில்லை. அந் நாட்டு தமிழர் நலனைக் காக்க வேண்டும் என்று தான் சொன்னேன் என்றார்.

'முக்யமந்திரி'க்கு திவ்யா நோ


கன்னப் படம் ஒன்றில் முதல் மந்திரியின் காதலியாக நடிக்கும் வாய்ப்பை குத்து ரம்யா என்கிற திவ்யா மறுத்து விட்டாராம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ரவி பெலகரே. இவர் இப்போது இயக்குநராகி விட்டார். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் படம் 'முக்யமந்திரி ஐ லவ் யூ' (அதாகப்பட்டது, முதல்வரே நான் உங்களை லவ் பண்றேன்).

கர்நாடக அரசியல் சூழ்நிலைகள், கோமாளித்தனங்கள், சித்து விளையாட்டுக்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை பின்னியுள்ளாராம் ரவி. இவர்தான் முதல்வர் கேரக்டரில் நடிக்கப் போகிறார்.

சமீபத்தில் பூஜை போடப்பட்ட இந்தப் படத்தில் முதல்வரின் காதலி அனிதா என்ற கேரக்டர் ஒன்று உள்ளது. அதில் நடிக்குமாறு குத்து ரம்யாவை அணுகியுள்ளார் பெலகரே. ஆனால் கதையைக் கேட்டதுமே 'பேடா சாமீ, பேடா' (வேண்டாம்) என்று மறுத்து விட்டாராம், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான ரம்யா.

இந்தப் படம் குறித்து ரம்யா கூறுகையில், அரசியல் சப்ஜெக்ட்டில் நடித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

படங்களைத் தேர்வு செய்வதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். பொல்லாதவன் போன்ற நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட (அய் ஐஸ்.. ஐஸ்..) படங்களில்தான் நடிப்பேன்.

முக்யமந்திரி ஐ லவ் யூ படத்தில் நடிக்க மறுத்ததால், நான் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன், கன்னடத்தைப் புறக்கணிக்கிறேன் என்று சிலர் கதை கட்டி விட ஆரம்பித்துள்ளனர்.

அது தவறு. கன்னடத்தில் நான் இப்போது 2 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்குப் படங்களில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை., இனிமேல் தெலுங்கில் நான் நடிக்கவே மாட்டேன் என்றார் ரம்யா.

வருகிறது சிவாஜி வெள்ளி விழா


சிவாஜி 175வது நாளை எட்டிக் கொண்டிருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சிவாஜி படக் குழுவினரும் வெள்ளி விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம் சிவாஜி. உலகெங்கும் 135 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 100 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டிய முதல் படம் சிவாஜி. தற்போது 175 நாட்களை சிவாஜி தொடவுள்ளது.

இப்படத்தின் 100வது நாள் விழாவை ஏவி.எம். நிறுவனம் பெரிய அளவில் கொண்டாடவில்லை. மிகப் பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தின் நூறாவது நாள் விழாவை ஏன் கொண்டாடவில்லை என்று ஏவி.எம். நிறுவனத்திடம் மீடியாக்கள் கேட்டபோது, 175 வது நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக தங்களது படங்களின் வெள்ளி விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடுவது ஏவி.எம். நிறுவனத்தின் வழக்கம். அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான சிவாஜியின் வெள்ளி விழாவையும் தற்போது பெரிய அளவில் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வார இறுதியில் சிவாஜி 175 நாட்களைத் தொடுகிறது. இதையடுத்து சிறப்பான விழா எடுத்து சிவாஜி படக் குழுவினரை கெளரவிக்கவும், பரிசளிக்கவும் ஏவி.எம். திட்டமிட்டுள்ளாம். இந்த விழாவை சிவாஜி படக் குழுவினர் தவிர ரஜினியும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளாராம்.

கடவுளை அவமதித்தேனா-குஷ்பு மறுப்பு


பார்த்திபன், சாயா சிங் ஜோடியாக நடிக்கும் வல்லமை தாராயோ படத்தின் தொடக்க விழா கடந்த 22ம் தேதி சென்னை தி.நகரில் நடந்தது. படத்தை இயக்கப் ேபாவது மதுமிதா.

இதில் எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் அம்மனின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தயின் சிலை அருக போடப்பட்ட நாற்காலி குஷ்புவுக்கு ஒதுக்கப்பட்டது. செருப்பு அணிந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து விழாவை ரசித்தார் குஷ்பு.

இந் நிலையில் கடவுள் சிலையை அவமதிக்கும் வகையிலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் குஷ்பு நடந்து கொண்டதாகக் கூறி கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்து முன்னணியின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்கவுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை குஷ்பு மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,

கடவுளை நான் அவமதித்து விட்டதாக சொல்கிறார்கள். வல்லமை தாராயோ பட விழாவில் கடவுள்களை அவமதிக்கும் வகையிலோ யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ நான் நடந்து கொள்ளவில்லை என்று சுருக்கமாக கூறியுள்ளார்.

படத்தை இயக்கப் போகும் டைரக்டர் மதுமிதா கூறுகையில்,

பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பவர் குஷ்பு. அவர் இதுவரை எந்த கடவுளையும் அவமதித்ததில்லை. விழா மேடையில் நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கில் விழாவை நாங்கள் நடத்தவில்லை என்ற

மாதுரி படம் - ஹூசேனின் 'பல்க்' புக்கிங்!


முன்னாள் பாலிவுட் கனவு தேவதை மாதுரி தீக்ஷித் நீண்ட காலத்திற்குப் பிறகு நடித்து இன்று வெளியாகும் ஆஜா நாச்லே படத்தின் முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் புக் செய்து விட்டாராம் மாதுரியின் தீவிர ரசிகரான பிரபல ஓவியர் எம்.எப். ஹூசேன்.

சில காலத்திற்கு முன்பு வரை பாலிவுட் ரசிகர்களை பைத்தியமாக்கிக் கொண்டிருந்தவர் மாதுரி தீக்ஷித். இவரது ஆட்டத்திற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உலகெங்கும் இருந்தனர். மாதுரியின் ஹம் ஆப் கே ஹெய்ன் கோன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகும்.

சில வருடங்களுக்கு முன்பு மாதுரி கல்யாணம் செய்து கொண்டு கணவருடன், அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவருக்கு அழகான ஒரு பையனும் இருக்கிறான்.

இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மாதுரி. ஆஜா நாச்லே என்ற படத்தில் மாதுரி திறமை காட்டியுள்ளார். இப்படத்திற்கு மாதுரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சற்றும் தனது ஸ்டைல் குறையாமல் இப்படத்தில் நடித்துள்ளாராம் மாதுரி.

ஆஜா நாச்லே இந்தியா மற்றும் உலகெங்கிலும் இன்று ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் மாதுரியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆஜா நாச்லேயை மற்ற ரசிகர்களை விட ஒரு படி மேலே போய் படு ஆரவாரமாக வரவேற்கக் காத்துள்ளார்.

மாதுரியின் தீவிர ரசிகரான ஹூசேன், ஹம் ஆப்கே .. படத்தை 50க்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசித்தவர். வெறித்தனமான ரசிகரான ஹூசேன், மாதுரியை வைத்து ஏகப்பட்ட ஓவியங்களையும் தீட்டியுள்ளார். அவரை வைத்து கஜ காமினி என்ற படத்தையும் தயாரித்தார்.

இந்த நிலையில் ஆஜா நாச்லே படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள ஹூசேன், துபாயில் இன்று வெளியாகும் இப்படத்தை, தானும், தனது முக்கிய நண்பர்களும் மட்டும் பார்ப்பதற்காக முதல் காட்சிக்கா அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி விட்டாராம்.

தானும் மாதுரியும் இருக்கும் படத்தை வைத்து அழைப்பிதழையும் அடித்துள்ள ஹூசேன், அதை தனக்கு நெருக்கமான 193 பேருக்க மட்டும் கொடுத்து படம் பார்க்க வருமாறு அழைத்துள்ளாராம்.

இதைக் கேள்விப்பட்ட மாதுரி சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறாராம். எவ்வளவு பெரிய மனிதர் ஹூசேன், அவர் எனது படத்தின் டிக்கெட்டுக்களை வாங்கியிருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறாராம் மாதுரி.

தாமதமாகும் தசாவதாரம்


படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், திட்டமிட்டபடி பொங்கலுக்கு வராது என்று கூறப்படுகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ள தசாவதாரத்தில் கலைஞானி கமல்ஹாசன் கலக்கலான 10 வேடங்களில் அசத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் திறமை காட்டியுள்ளனர்.

உலகத் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என இந்தியாவின் அனைத்துத் திரையுலகினரும் கூட தசாவதாரத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

முதலில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட வேலைகள் முடியாததால் தீபாவளிக்குத் தள்ளிப் போடப்பட்டது. இருப்பினும் அதுவும் நடக்கவில்லை.

ஒவ்வொரு கேரக்டருக்கும் கமல் போட்ட மேக்கப் சில மணி நேரங்களே நீடிக்கும் என்பதால் ஒரு நாளைக்கு ஓரிரு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிந்ததால் இந்தத் தாமதம்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தசாவதாரம் ரிலீஸாகும் என கமல்ஹாசனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் உறுதியாக அறிவித்தனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், பட வேலைகள் அனைத்தும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கின்றன. பொங்கலுக்குப் படம் வந்து விடும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்போது படம் மேலும் தாமதமாகும் என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியஉள்ளார். அனேகமாக பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று படம் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, படத்ைத பொங்கலுக்கு கொண்டு வரும் நோக்கில் படு தீவிரமாக அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படம் முழுக்க வரும் கிராபிக்ஸ் வேலைகள்தான் நீண்டு கொண்டிருக்கின்றன.

படத்ைத பக்காவாக கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார், தீவிரமாகவும் இருக்கிறார். கலைநயத்துடனும், அதி நவீன தொழில்நுட்பத்தின் முழுப் பிரதிபலிப்பும் படத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை இந்தியாவிலேயே இதுவரை எந்தப் படத்திற்கும் செய்யாத வகையில் 12 பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களிடம் பிரித்துக் கொடுத்துள்ளோம். ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக வர வேண்டும் என்பற்காக, இதற்கு மட்டுமே இதுவரை ரூ. 12 கோடியை செலவழித்துள்ளோம்.

கிராபிக்ஸ் வேலைகள் முடிந்து விட்டால் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுவேன். பிப்ரவரி மாதம்தான் படத்தை ரிலீஸ் செய்ய சரியாக இருக்கும் என கருதுகிறேன். இதுகுறித்து கமல் சாருடனும் பேசி விட்டேன். அவருக்கும் அதில் சம்மதம்தான்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000 பிரிண்டுகள் போட தீர்மானித்துள்ளோம். மேலும் ஆங்கில சப் டைட்டிலுடன், உலகெங்கும் தசாவதாரம் திரையிடப்படும் என்றார் ரவிச்சந்திரன்.

பசிக்குது, சீக்கிரம் தாங்க!

மோகன்லாலும், குஷ்பு, சீதாவும்!



மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன், தமிழில் நாயகி அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட முன்னாள் நாயகிகளான குஷ்பு, சீதா, மோஹினி ஆகியோர் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இளம் தலைமுறை நாயகி மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்கிறார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு பல நாயகிகள் வந்து போவதைப் போல அவ்வப்போது தமிழிலிருந்தும் நாயகிகள், நடிகர், நடிகைகள் மலையாளத்தில் நடிப்பது வழக்கம்.

சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டியுடன் இணைந்து குஷ்பு கையொப்பு என்ற படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திரை நடிகைக்கான விருதும் கிடைத்தது. அதன் பின்னர் மோகன்லாலுடன் அங்கிள் பன் என்ற படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்குப் போகிறார் குஷ்பு. இம்முறையும் மோகன்லாலுடன்தான் அவர் ஜோடி போடுகிறார்.

இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். சத்யன் அந்திக்காடு இயக்கும் இப்படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர தமிழில் ஏற்கனவே ரிட்டயர்ட் ஆகி விட்ட சீதா, மோகினி ஆகியோரும் உள்ளனர்.

புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் கதை. அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்தில் முகேஷும் இருக்கிறார்.

ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி மலையாளப் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்கின்றனர்

விஜய்க்கு அன்புமணி பாராட்டு


திரைப்படங்களில், புகை பிடிப்பதை விட வேண்டும் என்று விஜய்க்கு தான் விடுத்த வேண்டுகோளை விஜய் ஏற்றுக் கொண்டதால், அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ரஜினியைப் போலவே விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சில தினங்ளுக்கு முன்பு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்று உறுதியளித்தார்.

இதை வரவேற்றுள்ள அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்திலும் விஜய் தீவிரமாக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அன்புமணி, விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புத் தம்பி விஜய்க்கு வணக்கம். எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தாங்கள் இனிமேல் புகை பிடிப்பது போல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்திருந்த செய்தியினை செய்தித்தாள் வழியாக அறிந்தேன்.

இதற்காக தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தினாலும், புகையிலையை உபயோகிப்பதாலும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.

மேலும் இருதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் நோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ், பெண் சிசுக் கலைப்பு ாகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது அமைச்சகம் எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தாங்களும் இணைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார் அன்புமணி.

'கலவரப்படுத்திய' பிரிட்னி


லண்டனில் உள்ள ஹாலிவுட் செக்ஸ் ஸ்டோருக்கு வந்த கவர்ச்சிப் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பிற கஸ்டமர்கள் முன்பாக தனது பேண்டீஸைக் கழற்றிவிட்டு புதிய உடையை அணிந்து பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரபலமான அந்த ஹாலிவுட் செக்ஸ் ஸ்டோருக்கு வந்த பிரிட்னி, சில உடைகளை வாங்க வந்திருந்தார். ஒவ்வொரு உடையாகப் பார்த்துக் கொண்டே வந்த அவர், ஒரு பேண்டீஸைப் பார்த்தார்.

அது பிடித்துப் போகவே அதை அணிந்து பார்த்து பின்னர் வாங்க விரும்புவதாக கடை ஊழியரிடம் கூறினார். ஆனால் அதை கடை ஊழியர் ஏற்கவில்லை. அப்படியெல்லாம் அணிந்து பார்த்து வாங்க அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

இதனால் கடுப்பான பிரிட்னி, சடாரென அந்த ஊழியர் எதிர்பார்க்காத வகையில், தான் அணிந்திருந்த பேண்டீஸை கழற்றினார். பின்னர் சாவகாசமாக அங்கிருந்த ஆண்கள் அணியும் பெர்முடாஸை எடுத்து கடை ஊழியர்கள், மற்றும் கஸ்டமர்கள் முன்பாகவே போட்டுப் பார்த்தார்.

பிரிட்னியின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பின்னர் பிரிட்னி, தான் செலக்ட் செய்த பேண்டீஸை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை தனது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி விட்டு மின்னலென சென்று விட்டார்.

பிரிட்னியின் செயலால் அந்தக் கடையே சில நிமிடங்கள் பரபரப்பாகி விட்டது.

Wednesday, November 28, 2007

என்ன கொடுமை சார் இது!!!

கமலுடன் மோதும் விக்ரம்


பொங்கல் திருநாளன்று வெளியாகும் கலைஞானி கமல்ஹாசனின் தசாவதாரத்துடன், சீயான் விக்ரமின் பீமா களம் காணவுள்ளது.

உலக நடிகர்களிலேயே முதல் முறையாக 10 வேடங்களில் கமல்ஹாசன் அசத்தும் தசாவதாரம் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்குப் பிந்தைய நகாசு வேலைகளில் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படப்பிடிப்பின்போதே, ரஜினிகாந்த், கமல்ஹாசனை சந்தித்து அவர் போட்டுள்ள கெட்டப்கள் குறித்து பார்த்து, கேட்டு அசந்து போய் கமலை பாராட்டியுள்ளார். முதல்வர் கருணாநிதியும் கமல்ஹாசனின் கெட்டப்களை கேட்டறிந்து கமலை பாராட்டியுள்ளார். விஜய்யும் கூட கமல்ஹாசைனை நேரில் சந்தித்து கெட்டப் குறித்து கேட்டு அதிசயித்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரத்துடன் விக்ரமின் பீமா மோத வருகிறது.

பீமா ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கி தொக்கி நிற்கும் படம். லிங்குச்சாமி இயக்க, ஏ.எம். ரத்னம் தயாரிக்க உருவாகியுள்ள பீமா, கடந்த ஆண்டு மே மாதம் தயாரிப்புக்கு வந்தது. ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக படம் தட்டுத் தடுமாறி வளர்ந்து வந்தது. படம் வருமா, வராதா என்ற கேள்விக்குறியும் ஒரு கட்டத்தில் எழுந்தது.

இதனால் விரக்தியாகிப் போன விக்ரம், பீமாவை கிட்டத்தட்ட மறந்து விட்டு கந்தசாமிக்குப் போய் விட்டார்.

இந்த நிலையில், பீமா ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம். பொங்கல் பண்டிகையின்போது படத்தை திரைக்குக் கொண்டு வரவுள்ளனர்.

இதன் மூலம் கமலுடன் முதல் முறையாக மோத களத்தில் குதிக்கிறார் விக்ரம். பொங்கல் பண்டிகைக்கு வேறு யாருடைய படமும் வரவில்லை. இதனால் தசாவதாரமும், பீமாவும்தான் ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் பெரிய படங்கள்.

லிங்குச்சாமி, தனது பணிகளை முழுமையாக முடித்து விட்டார். படத்தின் முதல் பிரதியை திரையுலகப் பிரமுகர்களும் பார்த்துள்ளனர். அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாகவும், சிறப்பாக வந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.

இதையடுத்து படத்தைத் திரைக்குக் கொண்டு வரவும், ஏ.எம்.ரத்னத்திற்கு உதவிக் கரம் நீட்டவும் பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் முன்வந்துள்ளனர். இதனால் ரத்னம் தெம்பாகியுள்ளார்.

இதே தெம்போடு அடுத்து விஜய்யை வைத்து, செல்வராகவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறாராம் ரத்னம்.

அடுத்தபடியாக விக்ரம், அஜீத், சிம்பு!


,ரஜின,விஜய்யைத் தொடர்ந்து, விக்ரம், சிம்பு, அஜீத் ஆகிய நடிகர்களும் தம் அடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று பாகமவின் கிளை அமைப்புகளில் ஒன்றான பசுமைத் தாயகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முன்பு ரஜினிகாந்த்தை பாமக நெருக்கியது. இதையடுத்து சந்திரமுகி, சிவாஜி ஆகிய இரு படங்களிலும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் ரஜினி நடிக்கவில்லை. இதை தொடரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த புகையிலை எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நாங்கள் சொன்னதைக் கேட்டு சிகரெட் பிடிப்பது போல நடிப்பதை ரஜினி விட்டு விட்டார். அதேபோல, தம்பி விஜய்யும் இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்ற விஜய்யும், இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார். இதை பாமக வரவேற்றுள்ளது. அன்புமணியும் பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் அன்புமணியைத் தலைவராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பு மற்ற முன்னணி நடிகர்களான விக்ரம், அஜீத், சிம்பு ஆகியோரும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளது.

பாமகவின் கிளை அமைப்பு பசுமைத் தாயகம். இது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாகும். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளம் நடிகர்களான அஜீத், சிம்பு போன்றோர் தங்களது படங்களில் தொடர்ந்து புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார்கள். இதை அவர்கள் எதிர் வரும் படங்களில் இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மணிரத்தினத்தின் அட்வைஸ்


நல்ல கதையும், சிறந்த திரைக் கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல சினிமாவைக் கொடுக்க முடியும். தொழில்நுட்பம் எல்லாம் அடுத்தபட்சம்தான் என்று இளம் படைப்பாளிகளுக்கு இயக்குநர் மணிரத்னம் அறிவுரை கூறியுள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் 38வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் அங்கு பேசுகையில், கதையை நன்றாக சொல்ல வேண்டும். திறமையான கலைஞர்களை அதற்குத் தேர்வு செய்வது அவசியம். நல்ல கதையும், சிறந்த கலைஞர்களும், நல்ல திரைக்கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல படமாக கொடுக்க முடியும்.

சரியான கலைஞர்கள் இல்லாமல், நல்ல கதையைக் கொடுத்தால் அது நிச்சயம் வெற்றி பெற முடியாது. கலைஞர்களை விட கதைதான் முக்கியம்.

திரைப்படம் தொடர்பாக இன்னும் கூட நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். எனது படங்களின் முடிவுகள் மென்மையானதாகவே இருக்கும்.

கீதாஞ்சலி, தில்சே ஆகிய படங்களில் நல்ல கதை இருந்தும், முடிவு மென்மையானதாக இல்லாததால், அவை வெற்றி பெற முடியவில்லை.

ஒரு படத்தின் முடிவுதான் மக்கள் மனதில் கடைசியாக நிற்கும். எனவே இரண்டு மணி நேரம் கதையைச் சொல்லிய பிறகு அதை லாஜிக்குடன் முடிக்கவும் வேண்டும் என்றார் மணி.

நாலு வார்த்தை சொன்னாலும் நச்சென்று சொல்லியுள்ளார் மணி.

கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு


கும்பகோணம்: வல்லமை தாராயோ பட துவக்க விழாவில் மேடையில் அமர்ந்திருந்த குஷ்பு கடவுளை அவமதித்து விட்டதாக இந்து முன்னணி அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

சர்ச்சைகளுக்கும் குஷ்புவுக்கு நெருங்கிய தொடர்புண்டு. தற்போது கும்பகோணம் நகர இந்து முன்னணியினர் கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது,

நடிகர் பார்த்திபன் நடிக்கும் வல்லமை தாராயோ என்ற புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர் சிவசங்கரி, ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட பூஜையின்போது விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முப்பெரும் தேவியரின் சிலை அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் குஷ்பு அமர்ந்திருந்தார். அப்போது அவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு செருப்பு காலுடன் சாமி சிலையை நோக்கி ஆட்டியபடி இருந்தார்.

இதன் மூலம் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களை புண்படுத்தும் விதத்திலும் நடிகை குஷ்பு நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதுகுறித்து ராம்நகர் குருமூர்த்தி கூறுகையில்,

பெண்களின் கற்பு பற்றி பேசிய குஷ்பு தற்போது இந்துக்கள் வழிபடும் முப்பெருந்தேவியர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இது இந்துக்களை மிகவும் புண்படுத்திவிட்டது.

வல்லமை தாராயோ பட பூஜை நிகழ்ச்சியை பல தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் குஷ்பு இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த காட்சியை தொலைக்காட்சியில் கண்ட போது எனது மனம் மிகவும் வேதனை அடைந்தது. மேலும் இந்த பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.

குஷ்புவின் இந்த கடவுள் அவமதிப்பு காட்சியை தொலைக்காட்சியிலும், இன்டர் நெட்டிலும் ஏராளமானோர் பார்த்துள்ளனர். இது குறித்து குஷ்புவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.

'பறக்க'ப் போகும் சிவாஜி

ரஜினி 'பர்ந்து பர்ந்து' சண்டை போடுவதை ரசித்த அவரது ரசிகர்கள் இனிமேல் பறந்து கொண்டே அவரது படத்தைப் பார்க்கலாம். அதாவது சிவாஜி படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் திரையிட தீர்மானித்துள்ளதாம்.

உலகிலேயே ஒரு விமான நிறுவனம், ஒரு இந்தியப் படத்தை, அதிலும் தமிழ்ப் படத்தை தனது விமானங்களில் திரையிடுவது இதுவே முதல் முறையாகும்.

டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் சிவாஜி திரைப்படத்தை பார்க்கலாம். இதற்காக இருக்கைகளின் பின்புறம் படத்தைப் பார்ப்பதற்கேற்ற வசதி செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் பரத் மகாதேவன் கூறுகையில், சிவாஜி படத்ைத தனது விமானங்களில் காட்ட மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிவாஜியை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, 3 மாதத்திற்குப் பிறகு உரிமையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம். உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் பிற விமான நிறுவனங்கள் சிவாஜியை திரையிட முடியும். ஆனால் டிசம்பர் 1ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு எங்களது விமானங்களில் மட்டுமே சிவாஜி திரையிடப்படும்.

இதேபோல அடுத்த ஆண்டு மத்தியில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் ஆகியோரின் படங்களைத் திரையிடும் திரை விழாவுக்கும் திட்டமிட்டு வருகிறோம். இந்த மூன்று பேரின் படங்களும் எங்களது விமானங்களில் காட்டப்படும் என்றார் அவர்.

உடன் இருந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.சி.பாபு கூறுகையில், சிவாஜி படத்தின் விமான நிறுவனங்களுக்கான உரிமையை அய்ங்கரண் இன்டர்நேஷனல் பெற்றுள்ளது.

சிவாஜி திரைப்படம் இப்போது உலகம் முழுவதிலும் 135 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. வரும் ஜனவரி இறுதியில் இந்தியில் சிவாஜி ரிலீஸாகிறது என்றார்.

பத்மப்ரியாவுக்குப் புதுப் படம்


மிருகத்துடன்' நடந்த மோதலுக்குப் பின்னர் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார் பத்மப்ரியா.

சர்ச்சை நாயகியாக அவதாரம் எடுத்துள்ள பத்மப்ரியா, லேட்டஸ்டாக மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது பஞ்சாயத்தைக் கூட்டினார். இயக்குநர் சாமி அடித்து விட்டதாக கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய அவர் சாமி மீது பாலியல் புகார்களையும் கூறினார்.

ஆனால் அது உண்மையல்ல என்று தயாரிப்பாளர் கவுன்சில் விசாரணையின்போது தெரிய வந்தது. இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

மிருகம் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் நன்றாக வந்திருப்பதாகவும் கோலிவுட்டில் படு சூடாக டாக் நிலவுகிறது.

இந்த நிலையில் மிருகம் சர்ச்சைக்குப் பின்னர் பத்மப்ரியாவுக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. அதிரடி நாயகன் அர்ஜூனுடன் இணைந்து நடிக்கப் போகிறார் பத்மா.

துரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மசாலாப் பட மன்னன் என்று கூறும் அளவுக்கு கமர்ஷியல் ரீதியிலான படங்களை இயக்குவதில் கில்லாடி வெங்கடேஷ்.

தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பத்மப்ரியா நடிக்கவுள்ள முதலாவது மிகப் பெரிய கமர்ஷியல் படமாகும்.

வடிவேலுவின் அதிரடி காமெடி படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். அதேபோல அர்ஜூனுக்கு பிடித்தமான இசையமைப்பாளர் இமான்தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கப் போகிறார்.

இப்படத்தில், இசைஞானி இளையராஜாவின் துள்ளல் பாடலான ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற அக்னி நட்சத்திரப் பாடலை ரீமிக்ஸ் செய்யவுள்ளாராம் இமான்.

வழக்கமான அர்ஜூன் பட அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தில் பத்மப்ரியா நடிக்கவுள்ளதுதான் திரையுலகில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜூன் படத்தில் ஆக்ஷன் மட்டும் அதிரடியாக இருக்காது, கூடவே கிளாமரும் சேர்ந்து கும்மியடிப்பது வழக்கம். ஆனால் பத்மப்ரியா இதுவரை பெரிய அளவில் கிளாமர் காட்டி நடித்ததில்லை. அப்படி நடிக்க முயற்சித்தும் அதில் வெல்ல முடியவில்லை. பட்டியல் படத்தில் கூட அவர் கிளாமர் என்ற பெயரில் ஏனோதானோவென்று வந்தும் கூட அது ரசிக்கப்படவில்லை.

இதுவரை பத்மப்ரியாவை கவர்ச்சி நடிகையாக இதுவரை யாரும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இந்த நிலையில் பத்மப்ரியா எப்படி, அர்ஜூன் படத்தில் என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், இந்த கதைக்கு பத்மப்ரியாதான் பொருத்தானவர். தனது ரோலுக்கு அவர் பொருத்தமாக இருப்பார், சிறப்பாக நடிப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார். உளுந்தூர்ப்பேட்டையில் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

சண்டை, கிண்டை போடாமல் நல்லபடியா முடிச்சு விடுங்க பத்மா!

நச்சென்று 4 படங்கள்!




தீபாவளி படங்கள் ரிலீஸாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ள நிலையில் இந்த வார இறுதியில் மேலும் நான்கு புதுப் படங்கள் ரிலீஸாகப் போகின்றன.

தீபாவளிக்கு வெளியான வேல், பொல்லாதவன், அழகிய தமிழ் மகன், மச்சக்காரன் ஆகிய நான்கு படங்களும் நான்கு விதமான ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

சூர்யாவின் வேல் ரேஸில் முந்தியுள்ளது. விஜய்யின் அழகிய தமிழ் மகனும் திருப்திகரமாகவே ஓடிக் கொண்டுள்ளது. தனுஷின் பொல்லாதவனுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மச்சக்காரனும் சைடில் ஓடிக் கொண்டிருக்கிறான்.

இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஆர்யா, ஜீவா ஆகியோர் நடித்த படங்களும், சத்யராஜின் முத்திரைப் படங்களில் ஒன்றாக இடம் பிடிக்கப் போகும் ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் புதுமுக இயக்குநர் பிளஸ் ஹீரோ ஜெய்லானியின் கேள்விக்குறி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.

ஓரம்போ: புஷ்கார் காயத்ரி இயக்கத்தில் ஆர்யா-பூஜா ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் வெகு நாட்களுக்கு முன்னரே ரெடியாகிவிட்டது. முதலில் ஆட்டோ என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம் தமிழக அரசின் கேளிக்கைவரி விலக்கிற்காக ஓரம்போ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வந்த வட்டாரம் படத்திற்கு பின்னர் தற்போது ரிலீசாகவுள்ள வெளிவரும் ஓரம்போ வெளிவந்தால் ஆர்யா இன்னும் கோலிவுட்டில் நீடிக்கிறார் என்பது உறுதியாகிவிடும்.

ராமேஸ்வரம்: ஜீவா-பாவனா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். நீரு என்பவர் இசை அமைத்துள்ளார். இலங்கை தமிழ் அகதிகள் படும் துயரத்தை அகதிகள் முகாமிற்கு சென்று அவர்களுடன் பழகி அதை தத்ரூபமாக நடித்துள்ளார் ஜீவா.

கற்றது தமிழ் படத்தில் ஜீவாவின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. அதனால் ஜீவா இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

ஒன்பது ரூபாய் நோட்டு: தங்கர் பச்சான் இயக்கத்தில் வரவுள்ள இந்த படத்தில் சத்யராஜ் மிகவும் வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். அர்ச்சனா ரோகினி, நாசர் ஆகியோர் இதில் நடித்துள்ளார்கள்.

தங்கர் பச்சானின் இயக்கத்தில் ஏற்கனவே வந்துள்ள பள்ளிக்கூடம் பெரிய ஹிட் படமாக அமைந்ததால் இதனை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

கேள்விக்குறி: புதுமுக இயக்குனர் ஜெய்லானியின் கேள்விக்குறி படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்திவர்மா ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் அளவிற்கு கவர்ச்சி இருக்கிறதாம். படம் 2 வாரம் ஓடினால் போதும்பா, எனக்கு போட்ட காசு வந்துடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் இருக்கிறாராம்.

அர்ஜூனின் புது 'வக்கீல்'!


ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது தாய் பாஷையான கன்னடத்தில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறார். இதில் இவரது உறவினர் சிரஞ்சீவி நாயகனாக அறிமுகமாகிறார். மும்பை இளமைப் புயல் தன்யா வக்கீல் நாயகியாக அட்டகாசம் செய்யவுள்ளார்.

தமிழ்நாட்டில் அர்ஜூனாகவும், கன்னட தேசத்தில் அர்ஜூன் சர்ஜாவாகவும் அறியப்படும் அர்ஜூன், தமிழில் சில படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது கன்னடப் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.

தனது உறவினரான சிரஞ்சீவிக்காக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் அர்ஜூன். வாயுபுத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையையும் அர்ஜூனே பார்த்துக் கொள்கிறார். முன்னாள் நாயகன் அம்பரீஷுக்குப் படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

படத்தின் முக்கியமான மேட்டர் என்னவென்றால் நாயகி தன்யா வக்கீல்தான். படு க்யூட்டாக இருக்கும் தன்யா பார்ப்பவர்களை அசரடிக்க வைக்கும் அழகுடன் செம கெட்டப்பில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர். மும்பையிலிருந்து வந்திறங்கியுள்ள அசத்தல் தேவதை.

மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இவர், மிஸ் டூரிசம் இன்டர்நேஷனல் போட்டியில் முதல் ரன்னராக தேறியவர்.

மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் தன்யாவை, நடிக்க கூப்பிட்டு வந்திருக்கிறார் அர்ஜூன். கன்னடத்தில் அறிமுகமானாலும் கூட விரைவிலேயே தமிழையும் இந்தப் புயல் மையம் கொண்டு ரசிகர்களை மயங்கடிக்கும் என்று நம்பலாம்.

வாயுபுத்ரா படம் குறித்த அறிவிப்பை பெங்களூரில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அர்ஜூன், அப்படியே இன்னொரு நல்ல செய்தியையும் சொன்னார்.

சென்னையில் அனுமன் கோவில் ஒன்றைக் கட்டி வருகிறாராம் அர்ஜூன். அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறிய அர்ஜூன் அது நனவாகப் போவதாக தெரிவித்தார்.

அர்ஜூன், தீவிர அனுமன் பக்தர். அனுமனுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்த அவர் சென்னையில் உள்ள தனது பெரு பண்ணை வளாகத்தில் இந்தக் கோவிலை நிர்மானிக்க தீர்மானித்தார்.

கடந்த ஆண்டு கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார். இப்போது அது முடியும் தருவாயை நெருங்கியுள்ளதாம்.

இந்தக் கோவிலில் 28 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லினால் ஆன அனுமன் சிலை வைக்கப்படவுள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். பெங்களூரைச் சேர்ந்த அசோக் குடிகர் என்ற சிற்பிதான் இந்த சிலையையும், கோவிலையும் வடிவமைத்துள்ளார்.

அமர்ந்த நிலையில் இந்த அனுமன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிலை வைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாம்.

அனுமன் கோவில் குறித்து அர்ஜூன் கூறுகையில், அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும். இதுதான் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய, உண்மையான சாதனையாகும். இந்த கோவிலின் பின்னணியில் வேறு எந்தக் காரணமும் இல்லை.

ரூ. 75 லட்சம் செலவில் கோவிலும், அனுமன் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லினால் ஆன இந்த சிலையின் உயரம் 28 அடியாகும். அகலம் 12 அடியாகும். சிலையின் அடர்த்தி 7 அடியாகும்.

எனது பண்ணை வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை கோவிலுக்காக ஒதுக்கியுள்ளேன்.

எனது கனவுக் கோவில் இது. இந்தக் கோவிலை எந்தவித ஆடம்பரமும், விளம்பரமும் இன்றி திறக்கத் தீர்மானித்துள்ளேன் என்றார் அர்ஜூன்.

Tuesday, November 27, 2007

பிரதமருக்கு விஜயகாந்த் தந்தி

மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் தந்தி அனுப்பியுள்ளார். இதே செய்தியைப் பிரதமருக்குக் கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:

மலேசியாவில் உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்கள் மீது மலேசிய அரசு தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் கட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளது. இது கண்டிக்கதக்கது மட்டுமல்ல, சிறிதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும்.

மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவும், கைது செய்துள்ளவர்களை விடுவிக்கவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறு பொறியாகத் தோன்றியது, எவ்வாறு இன்று இலங்கையில் காட்டுத் தீயாக மாறி உள்ளதோ அதைப் போல மலேசியாவும் ஆகாமல் இருக்க மத்திய அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டுவது அவசியம், குறிப்பாக இந்தியப் பிரதமர், இது சம்பந்தமாக நான் அனுப்பி உள்ள தந்தியையும் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

இயற்கையை திருடியவர்கள் -இந்திபட இயக்குனர் மீது ஜனநாதன் குற்றச்சாட்ட


எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் இயற்கை. ஷாம், அருண், குட்டி ராதிகா நடித்த இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது யாவருக்கும் நினைவிருக்கலாம். அதன்பின் ஈ, என்ற படத்தை இயக்கி தன்னை வித்யாசமான இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார் ஜனநாதன்.

தற்போது இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சாவரியா படம் இயற்கை படத்தின் திரைக்கதையை அப்படியே பிரதி எடுத்தது போல் வந்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஜனா. 'இந்த படத்தை பார்த்த இந்தி சினிமா தயாரிப்பாளர் கே.சி.பொக்கார்டியா பெரிதும் பாராட்டினார். இந்தியில் சல்மான்கானை வைத்து எடுக்கப்போவதாகவும், அதற்காக இப்படத்தை சல்மானின் அப்பா சலீம்கானிடம் காட்டப்போவதாகவும் தெரிவித்தார். ஒரு பிரின்டையும் அவர் மும்பைக்கு கொண்டு சென்றார்.

இதற்கிடையில் சோனி பிக்சர்ஸ் தயாரித்த சாவரியா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் இயற்கை படக்கதைதான் என பலரும் கூறினர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வைட் நைட்ஸ் என்ற ஆங்கில நாடகத்தின் தழுவல்தான் இயற்கை. ஆனால், அதை அப்படியே எடுக்கவில்லை. என் திரைக்கதையே வேறு. எனது படத்தை அப்படியே சாவரியாவில் சஞ்சய் லீலா பன்சாலி காப்பி அடித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது' என்று குமுறியிருக்கும் ஜனநாதன், தென்னிந்திய கலைஞர்களின் உழைப்பை திருடும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கறிவேப்பிலை ஆக்கிட்டீங்களே...! -நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ


நடிப்பழகி இல்லை நமீதா. ஆனாலும், ரசிகர்களை துடியாய் துடிக்க வைக்கிற விஷயத்தில் அவர் ஒரு சின்ன சிலுக்கு! அவருடைய பரந்த மனசையும் பாடாய் படுத்திவிட்டது சமீபத்தில் வந்த அழகிய தமிழ் மகன். விஜயுடன் ஜோடி சேர அழைக்கிறார்கள் என்றதும், பல படங்களை தவிர்த்துவிட்டு கால்ஷீட்டை வாரி வாரி வழங்கினாராம். அந்தோ பரிதாபம்! படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவரை காண்பித்திருக்கிறார்கள். ஆசை ஆசையாக தியேட்டருக்கு போன நமீக்கு எடுக்கப்பட்ட பல காட்சிகள் இல்லாமல் போனதில் வருத்தமோ வருத்தம்.

வருத்தத்தையெல்லாம் வார்த்தைகளாக்கி அப்படத்தின் இயக்குனர் பரதனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டாராம். 'கடைசியில் நீங்களும் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தியதற்கு நன்றி' என்று முடிகிறதாம் அந்த எஸ்.எம்.எஸ்.

நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில் நாலு சொட்டு கண்ணீர் இருந்தால் எப்படியிருக்கும்? துடித்துப்போன பரதன், அவரை சமாதானப்படுத்தி பதிலுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில், அடுத்த படத்தில் இந்த குறைகள் சரி செய்யப்படும் என்று உறுதியளித்திருக்கிறாராம். ஊர்வசி விருது வாங்கி தருவது மாதிரி ஒரு கனமான(?) பாத்திரம் இருப்பவர்கள் நமீயை அணுகலாம்!

ஈழப்பிரச்சனையை பேசிய படத்திற்கு கனடாவில் விருது

2001-ம் ஆண்டு வெளிவந்த காற்றுக்கென்ன வேலி படத்திற்கு கனடா நாட்டை சேர்ந்த இன்டிபெண்டன்ட் ஆர்ட் பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு விருது வழங்குகிறது.

உள்ளக்கடத்தல், ரசிகர்மன்றம் போன்ற படங்களை இயக்கிய புகழேந்தி தங்கராஜின் முதல் படைப்பு காற்றுக்கென்ன வேலி. ஈழத்திலிருந்து இந்தியா வரும் பெண் போராளிக்கும், இங்கே அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாக சொல்லியிருந்தார் புகழேந்தி.

'காற்றுக்கென்ன வேலி' படத்தை வெளியிட அப்போது தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையும், மேல் முறையீட்டுக்கு அனுப்பிதான் சென்சார் சர்டிபிகேட் வாங்கப்பட்டது என்பதையும் ரசிகர்கள் எளிதில் மறந்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் தணிக்கை குழுவினரின் கெடுபிடியை கண்டித்து பிலிம்சேம்பரின் முன் அப்போது உண்ணாவிரதமும் இருந்தார் புகழேந்தி. இந்நிலையில் இந்த படத்திற்கு கனடாவை சேர்ந்த அமைப்பு விருது கொடுத்து கௌரவிப்பது வெந்த புண்ணில் மருந்து தடவுவதுபோல் அமைந்திருக்கிறது. விரைவில் கனடா சென்று மேற்படி விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார் அவர்

டைட்டிலை மாத்துங்க... -கரணுக்கு ஒரு 'பயங்கர' அட்வைஸ்!


பழைய டைட்டில் மோகத்தில் இருக்கும் தமிழ்சினிமாவுக்கு மற்றுமொரு டைட்டில் சிக்கியிருக்கிறது. காளி. ரஜினி நடித்த இந்த படத்தின் தலைப்பை கரண் நடிக்கும் படம் ஒன்றிற்கு வைத்திருக்கிறார்கள். ஆனால், சென்ட்டிமென்ட் காரணமாக இந்த டைட்டிலை தவிர்த்துவிடலாம் என்று கரணுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் சில அனுபவஸ்தர்கள்.

மகாகவி காளிதாஸ் என்ற படத்திற்கு செட் வொர்க் நடந்து கொண்டிருக்கும்போதே பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீ விபத்தில் எரிந்து போனார்களாம். பத்ரகாளி படத்தின் நாயகி ராணிச்சந்திரா விமான விபத்தில் பலியானார். காளி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த ஸ்டண்ட் நடிகர்களும், சில குதிரைகளும் தீக்கிரையானார்கள். இப்படியெல்லாம் பட்டியல் போட்டு பயங்கரங்களை விவரித்தாலும், டைட்டில் விஷயத்தில் பிடிவாதமாகவே இருக்கிறார்கள் காளி தரப்பினர்.

காளியில் கரணோடு காதல் ஆட்டம் போடவிருக்கிறார் சினேகா. இதுபோன்ற சென்ட்டிமென்ட் விஷயத்தை கொஞ்சம் அதிகமாகவே நம்பும் அவரே இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதுதான் ஆச்சர்யம்!

கொசுறு தகவல்- உக்கிர தெய்வங்களின் பெயரில் டைட்டில் வைக்கும்போது மாமிச படையல் போடுவது நல்லது என்ற அட்வைஸ் காரணமாகதான் முனி படத்தின் படப்பிடிப்பை முனீஸ்வரன் கோவிலிலேயே வைத்து கிடா விருந்து வைத்தாராம் சரண

பாரதி திருத்திய கவிதை! -'வல்லமை தாராயோ' விழாவில் பாலுமகேந்திரா!



எல்லா மதமும் நல்லதுக்குதான், தா'மதம்' உட்பட! -இப்படி \பேசிய நபர் இயக்குனரல்ல... ஒரு தயாரிப்பாளர். பெயர் சுந்தரராமன். இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கம் வைத்திருக்கிறாராம். 'தீபாவளி சமயத்தில் நிறைய பட்டாசுகள் வெடிப்பேன். எங்கப்பா கேப்பாரு, ஏண்டா இப்படி காசை கரியாக்குறே என்று! இப்போ இந்தோனேஷியாவுல கரியை காசாக்கிட்டு இருக்கேன்!' சரமாரியாக வந்து விழுகிறது சிலேடைகள். இனம் இனத்தோடு சேரும் என்பது மாதிரி இவருடைய தயாரிப்பில் நடிக்கவிருப்பவர் பார்த்திபன். 'வல்லமை தாராயோ' என்ற பாரதியின் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா. இவர் சுந்தரராமனின் மகள்.

பாட்டிமார்கள் பக்கத்தில் இருந்தால் சுற்றிப்போட சொல்வார்கள். அப்படியொரு அழகான குடும்பம். அசத்தலான விழா. வல்லமை தாராயோ படத்தின் துவக்கவிழாவே படம் பார்ப்பது மாதிரி இருந்தது. அத்தனை சுவாரஸ்யம்! சாதனைப் பெண்களில் சிலரை மேடையில் ஏற்றி பேச வைத்தார்கள். எழுத்தாளர் சிவசங்கரி, டி.ஜி.பி.திலகவதி, டாக்டர் கமலா செல்வராஜ், வழக்கறிஞர் சுமதி, நடிகை குஷ்பு, இயக்குனர் ப்ரியா என்று சக்திகளின் சங்கமமாக இருந்தது அந்த மேடை!

ஒரு கோவிலை போல அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக மேடையேறினார்கள் ஆண் சாதனையாளர்கள்! தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசும்போது, 'நான் மாதத்திற்கு ஒரு முறை திருநாகேஸ்வரம் போய் இறைவனை வணங்கி வருகிற வழக்கம் உள்ளவன். கடந்த சில மாதங்களாக போக முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த திருநாகேஸ்வரத்தையே இங்கு வரவழைத்துவிட்டார் தயாரிப்பாளர். அவருக்கு என் நன்றி' என்றார் மனப்பூர்வமாக!

'பாரதி வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று தோன்றியது. பாண்டிச்சேரிக்கு போயிருந்தேன். அங்கே அவர் கைப்பட எழுதிய கவிதைகளில் சிலவற்றை வைத்திருந்தார்கள். 'வல்லமை தாராயோ', இந்த மானுடம் புகழுற வாழ்வதற்கே' என்றுதான் அவர் முதலில் எழுதியிருக்கிறார். அதை அடித்துவிட்டுதான் அதன் மேலேயே 'இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே' என்று திருத்தியிருக்கிறார்' என்று பாரதியின் கவிதை பற்றி புது தகவல் ஒன்றை கூறினார் பாலுமகேந்திரா.

சிவசங்கரியின் பேச்சு அர்த்தம் நிரம்பியதாக இருந்தது. பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-மஹாலட்சுமி, சிவன்-பார்வதி ஜோடிகளுக்கான காரணம் குறித்து அவர் விவரித்தபோது, இத்தனை விஷயம் இருக்கிறதா இதற்குள் என்ற பிரமிப்பே எழுந்தது.

குஷ்பு பேசும்போது, 'பெண் டைரக்டர்கள் படம் எடுத்தால், பெண்கள் பிரச்சனையை மையமாக வைத்துதான் எடுப்பார்கள் என்ற கருத்தை பானுமதி போன்றவர்கள் அந்த காலத்திலேயே மாற்றிக் காட்டினார்கள். பொழுதுபோக்கு அம்சத்துடன் பெண் டைரக்டர்களால் படம் கொடுக்க முடியும் என்பதற்கு ப்ரியா இயக்கிய கண்ணாமூச்சி ஏனடா ஒரு உதாரணம்' என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் பிறந்து, இந்தோனேஷியாவில் வளர்ந்து, சிங்கப்பூரில் படித்து, ஹாலிவுட்டில் குறும்படங்களை இயக்கி, கோடம்பாக்கத்தில் சங்கமம் ஆகியிருக்கிறார் மதுமிதா. இவர் இயக்கிய ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது. 'வல்லமை தாராயோ' கலைப்படைப்பாக மட்டுமே உருவாகாமல் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகவேண்டும். இதுவரை வருமானம் கொடுத்த இந்தோனேஷிய நிலக்கரி, எங்க ஊரு தியேட்டரில் கலர் கலராக ஜொலித்து காசுமழை பொழியணும்!

மனித வணக்கம் -கமல் எழுதிய கவிதை


டந்த சில தினங்களுக்கு முன் கவிஞர் புவியரசுக்கு பாராட்டு விழா நடத்தினார் கமல். அப்போது, தான் எழுதிய கவிதை ஒன்றை மேடையில் வாசித்தார். பலரையும் பரவசப்படுத்திய கமலின் அந்த கவிதை இதுதான்!

மனித வணக்கம்

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்

சினேகா ரசிச்சாங்க... -புல்லரிக்கும் இளம் இசையமைப்பாளர்!


ஹார்மோன்களை இசைக்க வேண்டிய இளம் வயசு. ஹார்மோனியத்தை இசைத்துக் கொண்டிருக்கிறார் பி.எஸ்.பாலாஜி. ஷாம், சினேகா நடிக்கும் 'இன்பா' படத்திற்கு இவர்தான் மியூசிக் டைரக்டர்.

இப்படத்தின் இயக்குனருக்கும் எனக்கும் அருகருகில்தான் வீடு. அவ்வப்போது வீட்டிற்கு வருவார். என்னுடைய டியூன்களை ரசிப்பார். அவர் படம் இயக்குகிறார் என்றதும் வேறு யாரோதான் இசையமைப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், 'நீதான் இந்த படத்திற்கு மியூசிக்' என்று அவர் சொன்னபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

ஒவ்வொரு ட்யூனையும் கேட்டுவிட்டு ஷாம் சார் ரொம்ப பாராட்டுவார். அவருடைய காரில் எப்போதும் என் பாடல்தான் ஓடிக்கொண்டிருக்கும். 12 பி மாதிரி மியூசிக்கல் ஹிட் படங்களில் நடிச்சவர் அவர். என் பாடலை ரசிக்கிறார் என்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மாதிரியேதான் சினேகாவும். முழுசா ரெக்கார்டிங் ஆவதற்கு முன்பாகவே அவருக்கு காப்பி பண்ணி கொடுத்திருந்தார்கள். பாடல் காட்சியின்போது வாயசைக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட காப்பி அது. ஆனால், எப்போதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்பாராம். 'எனக்கு எல்லா பாடல்களும் ரொம்ப பிடிச்சிருக்கு என்று அவர் சொன்னதாக சொன்னார்கள்' சொல்லும்போதே கண்ணில் மின்னலடிக்கிறது பாலாஜிக்கு. ஸ்ரேயாகோஷ், சங்கர் மஹாதேவன் போன்ற முன்னணி பாடகர்களை பாட வைத்திருக்கிறார். அவர்களோடு பணியாற்றிய அனுபவம் ரொம்ப வித்யாசமானது என்று சிலிர்க்கும் இவர், பிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்பு பயிற்சியை முடித்தவராம். பார்ப்பதற்கும் இளம் ஹீரோ போலவே இருக்கிறார்.

இசையில் 'டிராக்' பிரிக்கிற பாலாஜி, தன் டிராக்கை மாற்றிக்கொண்டு நடிகரானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு! -சம்பளம் வாங்காமல் நடிக்க சத்யராஜ் தயார்!


நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணியை பார்த்தோம் திரையில். அதே நக்கல், அதே அலட்சியம், கவுண்டருக்கு உடல்தான் கொஞ்சம் இளைத்திருக்கிறது. மற்றபடி, மில்லி மீட்டர் அளவுகூட குறையவில்லை அவரது நையாண்டி!

கவுண்டரண்ணன் கூட சேர்ந்தா கரைச்சல்தான்! ஜாலியா, பொழுதுபோக்கா இந்த படத்தை கொடுக்கணும்னு முடிவு பண்ணியவுடனே நானும், டைரக்டர் கிச்சாவும் நினைச்சது கவுண்டரண்ணனைதான்! தன்னுடைய அடுத்த படமான 'தங்கம்' பற்றி பேசும்போது கவுண்டரை பற்றிதான் அதிகம் பேசுகிறார் சத்யராஜ். பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்கள் சத்யராஜின் லொள்ளு இமேஜை மறக்கடிக்கிற நேரத்தில், 'தங்கம்' வந்து அந்த இமேஜுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கும் போலிருக்கிறது.

'பெரியார்' வெளியான நேரத்தில் இனிமேல் பழைய சத்யராஜை பார்க்க எனக்கே கூச்சமாக இருக்கிறது என்றார் சத்யராஜ். ஆனால், பெரியார் படப் புகழ் மறையவே இல்லை. அதற்குள் தங்கம் மாதிரி படங்கள்! ஏன் சார்? என்றால், 'என்னங்க... கவுக்கிறீங்களே' என்று பேச ஆரம்பிக்கிறார் சத்யராஜ். 'ஒரு நடிகன்ங்கிறவன் எந்த மாதிரி ரோல் கொடுத்தாலும் நடிக்கணும். அது மட்டுமில்லாம, சிவாஜி, கமல் போன்ற ஹீரோக்கள் கூட, சீரியசா ஒரு படம் பண்ணிட்டு, பொழுதுபோக்கா அடுத்த படம் பண்ணியிருக்காங்க. கமல் சார் 16 வயதினிலே நடிச்ச நேரத்திலேதான் குரு என்ற கமர்ஷியல் படம் வந்தது. அப்படியிருக்க, ஒரேமாதிரி நான் நடிச்சிட்டு இருந்தா போரடிச்சிடுமே? இரண்டும் கலந்துதான் பண்ணுவேன்!'

தங்கம் படத்தில் ஒரு காட்சியில் 'பூமழை தூவி' என்ற எம்.ஜி.ஆர் பாடலுக்கு அவரை போலவே நடித்திருக்கிறார் சத்யராஜ். இதற்காக எம்.ஜி.ஆரின் மேக்கப்மேனிடம் கேட்டு, அவர் யூஸ் பண்ணிய முகப்பவுடரையே பயன்படுத்தினார்களாம். அச்சு அசலாக எம்.ஜி.ஆர் மாதிரியே தோற்றமளித்தார் சத்யராஜ். 'பெரியார் படத்தை பார்த்துவிட்டு அப்படியே அவர் மாதிரியே இருக்கீங்க என்று பாராட்டினார்கள். இந்த பாடலை பார்த்த நீங்களும் எம்.ஜி.ஆர் மாதிரியே இருக்கறதா சொல்றீங்க. இந்த பெருமை யாருக்கு சார் கிடைக்கும்?' நெகிழ்கிற சத்யராஜிடம், 'எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை படமா எடுத்தா சம்பளம் வாங்காம நடிப்பீங்களா?' என்று கேட்டதுதான் தாமதம். 'அவர் மாதிரி நடிக்கிற வாய்ப்பு கிடைக்கறதே மிகப்பெரிய சம்பளம். யார் எடுக்க முன் வந்தாலும் என் கால்ஷீட் ரெடி' என்கிறார் முகமெல்லாம் பூரிப்பாக!

சத்யராஜை, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தாராளமாக கொண்டாடலாம், 'எங்கள் தங்கம்' என்று!

மாதவனுக்கு ஜோடியாக மகள் ஸ்ருதி! -கமல் காட்டிய பச்சைக்கொடி!


கமல்ஹாசனின் மகள் ஹீரோயினாக போகிறார் என்ற ஹேஷ்யம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல... சுமார் நான்காண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கிவிட்டது. பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதுபற்றி கமலிடம் கேள்வி எழுப்பியபோது, நான் என் மகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவர் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதற்கு முழு சுதந்திரம் உண்டு என்று கூறியிருந்தார். ஆனால், வெளிநாட்டில் இசைபயின்று வரும் ஸ்ருதி, உலகத்தையே அதிரவைக்கும் இசையமைப்பாளராக வருவார் என்று நினைத்திருந்த பலருக்கு இந்த செய்தி அதிர்ச்சியையே அளித்திருக்கும்.

மாதவன் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடி சேர சம்மதித்திருக்கிறாராம் ஸ்ருதி. நிஷிகாந்த் காமத் என்பவர் இயக்கும் இப்படம் ஜனவரியில் துவங்க இருக்கிறது. சேரன், சினேகா நடிக்கும் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்து வரும் ஞானம் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் பிரமாண்ட துவக்கவிழா சென்னையில் நடைபெறலாம். அதில் கமல் கலந்து கொள்ளலாம் என்கிறது கோலிவுட் பட்சி

நான் ஒரு தனிமை விரும்பி! -அஜீத்தின் அல்டிமேட் பேட்ட


பல வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அதே பழைய அஜீத்தை பார்க்க முடிந்தது. தோற்றத்தில்தான் இந்த பொலிவே தவிர, பேச்சில் அளவுக்கதிகமான நிதானம்! வார்த்தைக்கு வார்த்தை நான் ஒரு தனிமை விரும்பி என்கிறார். பில்லா படத்தையொட்டி அவர் ஏற்பாடு செய்திருந்த பிரஸ்மீட்டில், நிருபர்கள் எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு அளவுக்கு மீறிய பொறுமையோடு பதில் சொன்னார் அஜீத். இதுவரைக்கும் நான் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கு. சுமாரா ஓடியிருக்கு. பிளாப் கூட ஆகியிருக்கு. ஆனா எப்பவுமே என்னுடைய படத்திற்கு நானே 100-வது நாள் போஸ்டர் அடிச்சுக்கிட்டதில்லை. மக்களை ஏமாத்த முடியாது. என்னை பொறுத்தவரை நேர்மையா, பொய் சொல்லாம நடந்திட்டு இருக்கேன்! விட்டால், அஜீத்தானந்தாவாக மாறி, போதிக்கிற அளவுக்கு பேசுவார் போலிருக்கிறது.

நானும் விஜயும் எதிரிகள் இல்லையே என்று தன் வாயலாலேயே சொல்கிற அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார் அஜீத். விஜய் சாரும் நானும் ஏற்கனவே ராஜாவின் பார்வையிலே படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் எதிரிகள் கிடையாது. எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிச்சயம் இருக்கிறது. இருவருக்குமே தனித்தனி மார்க்கெட் இருக்கிறது. நாங்கள் தனித்தனியாக நடிக்கும்போது அதிகம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து நடித்தால் பலருக்கு வேலை குறைந்து போகும். அதனால் இப்போதைக்கு சேர்ந்து நடிக்கிற எண்ணமில்லை. மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும்போது என்னால் சவுகரியமாக உணரவும் முடியாது. ஒருவேளை ஷோலே போல் கதைகள் அமைந்தால் நடிக்கலாம்! விஜய் பற்றிய தனது பகிர்தலை அதோடு நிறுத்திக் கொள்கிறார் அஜீத்.

எந்த ஹீரோவும் சொல்ல துணியாத இன்னொரு கருத்தையும் சொன்னார். ரசிகர்கள் தங்கள் நேரத்தை வேஸ்ட் பண்ண கூடாது. இளமை இருக்கும்போதே உழைத்து முன்னேற வேண்டும் அஜீத்தின் இந்த பிராக்டிகலான பேச்சு சிலருக்கு பிடிக்கிறதோ, இல்லையோ? அஜீத்தை உணர்ந்த அவரது உண்மையான ரசிகர்களுக்கு பிடிக்கும்!

தற்போது ரிலீஸ் ஆகவிருக்கும் பில்லா பற்றியே அதிகம் பேச விரும்பினார் அஜீத். கல்யாண வீட்டில் சங்கு ஊதிய கதையாக அங்கே ஒரு நிருபர் செக்ஸ் எஜுக்கேஷன் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்று கேட்க, ஸாரி...நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு அடுத்த கேள்விகளை எதிர்கொண்டார் அஜீத்.

ஹீரோவாகிவிட்ட செந்தில்! -கவுண்டர் ஆசிர்வாதம


எந்த ஹீரோவிடம் போனாலும் இரண்டு வருடத்திற்கு கால்ஷீட் இல்லை என்று கையை விரிக்கிற நிலைமை. விஜயிடம் போனாலும் இதேதான். விக்ராந்திடம் போனாலும் இதேதான். பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர்கள், வடிவேலு, சந்தானம், கஞ்சா கருப்பு, போன்ற காமெடியர்களை ஹீரோவாக்கி கலெக்ஷனுக்கு வழி செய்துவிட்டார்கள். அந்த வரிசையில் செந்திலும் பல வருடங்கள் கழித்து மேக்கப் பாக்சை திறந்திருக்கிறார்.

ஆதிவாசியும், அதிசய பேசியும் என்பதுதான் செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதுப்படத்தின் பெயர். தென் ஆப்பிரிக்கா, மலேசியா காடுகளில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக இருந்த மாலன் என்பவர் இயக்குகிறார். என் சிஷ்யர்கள் எல்லாரும் இயக்குனர்கள் ஆகிவிட்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சு.கி!

என்னை பார்த்தா ஆதிவாசி மாதிரியே இருக்கறதால இந்த படத்திலே என்னை ஹீரோவாக்கிட்டாங்க போல இருக்கு. இந்த படத்தின் கதையை டைரக்டர் எங்கிட்ட சொன்னப்பவே தெரிஞ்சு போச்சு இது ஒரு வெற்றிப்படம் என்று! செந்திலின் முகத்தில் தாண்டவமாடுகிறது வெற்றி பெருமிதம். கவுண்டர்கிட்ட ஆசி வாங்கிட்டீங்களா என்று கேட்க தோன்றியது. சில நல்ல நேரங்களில் நமது கேள்வியே பூஜை நேரத்து கரடியாகும் அபாயம் இருப்பதால், கப்சிப்! ஆனாலும், விசாரித்து பார்த்த வகையில், இவனுக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று கவுண்டர் ஆசிர்வதித்து விட்டதாக கேள்வி. கவுண்....டர்

தண்டனையும், வெகுமதியும்! -மிருகம் படத்தை வாங்கிய தலைவர


மிருகம் பட விவகாரத்தில் டைரக்டர் சாமிக்கு ஓராண்டு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். நடிகை பத்மபிரியாவிடம் மன்னிப்பும் கேட்க சொல்லி சாமிக்கு கடும் தண்டனை கொடுத்தது. ஆனால், பதவி வேறு, தொழில் வேறு என்பதை பெருந்தன்மையோடு நிருபித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன். விநியோகஸ்தராகவும் இருக்கிற இவர், மிருகம் படத்தின் என்.எஸ்.சி ஏரியாவை வாங்கியிருக்கிறார்.

படத்தின் டிரெய்லர் வெளியான நாளில் இருந்தே மிருகத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். என்.எஸ்.சி ஏரியாவை வாங்க பல விநியோகஸ்தர்கள் முயன்று வந்தபோதிலும், இராம.நாராயணன் கேட்கிறார் என்றதும், சில லட்சங்கள் குறைவாகவே கொடுக்க முன் வந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர்.

பாடல் காட்சிகளை பார்த்துவிட்டு டைரக்டர் சாமியை அழைத்து பாராட்டியும் இருக்கிறார் இராம.நாராயணன்.

50 லட்சம் நஷ்ட ஈடு கொடு -தனுஷ் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு


ஊசி நுழையாத இடத்திலும் பிரச்சனையை நுழைத்து, சினிமாக்காரர்களை சின்னாபின்னமாக்குவதில் சிலருக்கு அலாதி இன்பம். கால் மேல் கால் போட்டிருக்கும் குஷ்புவை கண்டிப்பதில் துவங்கி, பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவது வரை, கடந்தவார கோலிவுட் ஏரியாவில் ஒரே கல்லெறி படலம்!

நீ என்னை டாக்டருக்கா படிக்க வச்சே? தியாகராயா கல்லூரியில் பி.ஏ தானே படிக்க வச்சே! என்பார் பொல்லாதவன் படத்தில் தனுஷ். போதாதா... பிடித்துக் கொண்டார்கள் வசமாக! தியாகராயா கல்லூரின்னா சும்மாவா? பின் தங்கிய மக்களுக்கு கல்விப்பணி செய்து வருகிற இந்த கல்லூரியிலிருந்து நீதிபதிகளும், ஐ.ஏ.எஸ் களும் உருவாகி இருக்கிறார்கள். இந்த வசனம் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போலிருக்கிறது என்று பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்பதுடன், 50 லட்சம் நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

குஷ்பு விவகாரம் இன்னும் கொடுமையானது. வல்லமை தாராயோ படத்துவக்க விழாவில் கலந்து கொண்ட குஷ்பு செருப்பு காலோடு அமர்ந்திருந்தாராம். அதுவும், கால் மேல் கால் போட்டுக் கொண்டு! மேடையில் அமைக்கப்பட்டிருந்த முப்பெரும் தேவியர் சிலைகளுக்கு முன் அவர் இவ்வாறு அமர்ந்திருந்தது இந்து மதத்தையே அவமானப்படுத்தும் செயல் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் வெடியை கொளுத்தி போட்டிருக்கிறார்.

போற போக்கை பார்த்தா இனிமே ஊமை படம்தான் எடுக்கணும் போலிருக்கு!

கொள்கையை தளர்த்திக் கொண்ட அஜீத்! -சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாட்டம


சின்னத்திரைக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன் என்று பல வருடங்களாக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், அரசியல் கட்சி துவங்கியபின் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டார். இப்போது அவருடைய அரசியல் பேட்டிகளில் தவறாமல் முன்னணி சேனல்களின் மைக்குகளுக்கும் இடம் உண்டு. விஜயகாந்த்தை போலவே பிடிவாதம் பிடித்த இன்னோரு நடிகரான அஜீத்தும் தன் கொள்கையை தளர்த்தியிருக்கிறார்.

கமல், விஜய், போன்ற முன்னணி நடிகர்களை நிலையத்திற்கே வரவழைத்த சில முன்னணி சேனல்கள், அஜீத் விஷயத்தில் பலமுறை முயன்று தோற்றுப் போனது. இதெல்லாம் நேற்றைய சங்கதி. இன்று நிலைமையே வேறு...

கலைஞர் டி.வி க்கு மிக நீண்ட பேட்டியளித்தார் அஜீத். இதை தொடர்ந்து சன் டி.வி நிலையத்திற்கே சென்று வித்தியாசமான பேட்டி ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் பில்லாவின் ரிலீசுக்காகவா? அதுதான் இல்லை.

தன்னுடைய பேச்சில் வெளிப்படும் நிதானத்திற்கு காரணம், வயது கொடுத்த பக்குவம்தான் என்று தெரிவித்த அஜீத், அதே பக்குவத்தோடுதான் சேனல் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறார். கலைநிகழ்ச்சிகள், நடிகர் சங்க விழாக்கள் எதிலும் தலைகாட்டும் வழக்கம் இல்லாத அஜீத், மதுரை அன்பு தன்னை மிரட்டிய விவகாரத்தின்போது கூட நடிகர் சங்கத்தின் உதவியை நாடியதில்லை.

தனக்கென்று தனி கூண்டை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளேயே உலா வந்த இந்த சிங்கம், முதன் முதலாக கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறது. இந்த நிலை தொடரவே விரும்புகிறார்கள் ரசிகர்களும்!

போதையில் மீண்டும் நடிகை சங்கீதா ரகளை


குடிபோதையில் நடுரோட்டில் ஆபாசமாக ஆடி சர்ச்சையை ஏற்படுத்தி போலீஸாரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நடிகை சங்கீதா, போதை மாத்திரை சாப்பிட்டு ஆட்டோ டிரைவருடன் ரகளை செய்து மீண்டும் பிடிபட்டுள்ளார்.

புதுமுக இயக்குநர் செல்வா கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர் புதுமுக நடிகை சங்கீதா. அதன் பின்னர் விபசாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள தமிழ்நாடு தியேட்டர் அருகே கடந்த 22ம் தேதியன்று நள்ளிரவில் குடிபோதையில் ஆடைகளை அவிழ்த்து விட்டு ஆபாச நடனம் ஆடினார். இதனால் அந்த நேரத்திலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போதை தெளிந்த நிலையில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பினார் சங்கீதா. இதனால் போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் 23ம் தேதி காலை வியாசர்பாடியில் உள்ள பிளாட்பாரத்தில் அவர் படுத்திருந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அவரை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். தகவல் அறிந்ததும் சங்கீதாவின் வக்கீல் வந்து அவரை அழைத்துச் சென்றார்.

இந்த சூழ்நிலையில் மறுபடியும் வண்ணாரப்பேட்டை பகுதியில் சங்கீதா தகராறில் ஈடுபட்டார். குடிபோதையில், சாலையில் வந்தவர்கள், போனவர்களிடம் அவர் தகராறு செய்தார். ஆட்டோ டிரைவர்களுடனும் தகராறு செய்தார்.

பிறகு ஒரு ஆட்டோவில் ஏறிய அவர் மணிக்கூண்டு பகுதிக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அவரைப் பார்த்த போலீஸார், மீண்டும் அவரைப் பிடித்து ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அகத்தியனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே


மீண்டும் அகத்தியன் திரைக்களம் இறங்கியுள்ளார். நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற பெயரில் அவர் இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விடுகதை, காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அகத்தியன். தேசிய அளவில் சிறந்த இயக்குருக்கான விருதைப் பெற்ற ஒரே தமிழ் இயக்குநரும் இவர்தான். நீண்ட காலமாக இயக்காமல் அமைதி காத்து வந்தார் அகத்தியன். இந்த நிலையில் மீண்டும் திரும்பி வந்துள்ளார்.

80களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத் தலைப்பையே தனது மறு வருகைப் படத்திற்கும் சூட்டியுள்ளார் அகத்தியன்.

விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்தான் இப்படத்தின் நாயகன். அம்முவாகிய நான் படப் புகழ் பாரதி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். விக்ரமாதித்யாவும் இருக்கிறார்.

மூன்று பேருமே சினிமாவில் நுழைந்து பெரிய பிரேக்குக்காக காத்திருப்பவர்கள். இவர்களை வைத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தைக் கிள்ள வருகிறார் அகத்தியன்.

தனது மறு வருகை குறித்து அகத்தியன் கூறுகையில், இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம். எனவே இளமையாக இருக்கும், ரொமான்ஸை வித்தியாசமான கோணத்தில் இதில் காட்டியுள்ளேன்.

இளம் காதலர்களின் உணர்வுகளையும், காதலையும் சொல்லும் நல்ல படமாக இது இருக்கும். ஷட்டிங் முழு வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஒரு பகுதியை கொச்சி, தேக்கடி, கொடைக்கானலில் படமாக்க உள்ளோம் என்றார்.

ப்ளூ வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறாராம்.

இனி 'தம் அடிக்க' மாட்டேன் - விஜய


இனி எனது படங்களில் நான் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்று விஜய் கூறியுள்ளார்.

சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முன்பு ரஜினிகாந்த்தை நெருக்கிய பாமக இப்போது விஜய்யைக் குறி வைத்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ், ரஜினி காந்த் படங்களில் புகை பிடிப்பது போல நடிக்கக் கூடாது என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல, தம்பி விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு விஜய் தற்போது பதிலளித்துள்ளார். இதுகுறித்து விஜய் கூறுகையில், அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் எனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது.

அழகிய தமிழ் மகன் படத்தில் நான் ஏற்று நடித்த வில்லன் வேடத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் புகை பிடிப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டது. பின்னர் அந்த வில்லன் திருந்தும்போது, சிகரெட்டை தூக்கி வீசி விடுவது போலவும் காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இனிமேல் எனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்று கூறியுள்ளார் விஜய்.

விஜய்யின் இந்த மின்னல் வேக அறிவிப்பை அன்புமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வேண்டுகோளை விஜய் ஏற்றுக் கொண்டதை வரவேற்கிறேன். இதன் மூலம் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் நல்ல பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

விஜய் தற்போது சென்னையில் குருவி பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். குருவி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர் இயக்குநர் தரணியிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

தெலுங்கில் ஒளிரும் ஜோதிர



மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஜோதிர்மயி இப்போது சத்தம் போடாமல் தெலுங்கில் இரண்டு படங்களில் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார். மலையாளத்திலும், தமிழிலும் தலா ஒரு படத்தில் தலை காட்டி வருகிறாராம்.

திருமணமானதையே வெகு காலமாக மறைத்து நடித்துக் கலக்கியவர் ஜோதிர்மயி. தலைநகரம் இவருக்கு பிரேக் கொடுத்தது. முதல் படமே ஹிட் ஆனதால், தலைநகரம் படத்திற்குப் பிறகு ஜோதிரைத் தேடி சில பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் கல்யாணமான பெண் என்ற தகவல் லேசு பாசாக கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியதால் பலரும் இவருடன் ஜோடி போட தயங்கினர். இதை அறிந்த ஜோதிர், தான் எப்படிப்பட்ட கேர்கடரிலும் நடிக்கத் தயார், கிளாமராகவும் நடிக்கத் தயார் என்று போஸ்டர் ஒட்டாத குறையாக அறிவித்தார்.

இதன் விளைவாக ஓரிரு படங்கள் வந்தன. அதில் நான் அவனில்லை படத்தில் முண்டு கட்டிய கேரளத்துப் பெண்ணாக கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்தார்.

பெரியார் படத்தில் நாகம்மை கேரக்டரில் நடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து வந்த நான் அவனில்லை பெரிதாக போனாலும் கூட ஜோதிரைத் தேடி சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார். அவருக்கு தெலுங்கு அடைக்கலம் கொடுத்தது.

தெலுங்கில் தற்போது இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஜோதிர். இரண்டிலுமே கவர்ச்சிக்கு நிறைய வேலைகள் இருக்கிறதாம். வருத்தப்படாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜோதிர்.

மலையாளத்திலும் ஒரு படம் வந்திருக்கிறதாம். அதேபோல தமிழில் அறை எண் 305ல் கடவுள் படத்தில் ஜோதிர் நடிக்கிறார். இதில் அவருக்கு அம்மாவாக முன்னாள் கவர்ச்சி நாயகி குயிலி நடிக்கிறார். இந்த வேடம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஜோதிர்மயி.

என்னைப் போல தமிழை நம்பி வந்த பல மலையாள நடிகைகளுக்கு தமிழ் நல்ல வரவேற்பு கொடுத்து தூக்கி விட்டது. ஆனால் என்னைத்தான் ஏனோ கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது என்ற வருத்தம் ஜோதிருக்கு உள்ளதாம்.

விஜய்க்கு அன்புமணி அறிவுரை


திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு, மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.

அரசியலும், சினிமாவும் தமிழ்நாட்டின் இரு கண்கள் என்பார்கள். ஆனால் இந்த இரு துறைகளும் அவ்வப்போது உரசிக் கொள்வது வழக்கம்.

சில காலத்திற்கு முன்பு தமிழில்தான் படப் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என்று கூறி சில கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

பிறகு திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக கொடி பிடித்தது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குறி வைத்து பாமக களம் இறங்கியது.

ரஜினி இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அதேபோல, ஷாருக்கானுக்கும் அட்வைஸ் செய்தார்.

அன்புமணியின் அட்வைஸை ஷாருக்கான் ஏற்றாரோ, இல்லையோ, ரஜினி சட்டென்று ஏற்றுக் கொண்டார். சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களில் ஒரு சீனில் கூட அவர் புகைப் பிடிப்பது போல காட்சி வரவில்லை. அதேசமயம், தனது ஸ்டைலையும் விடாமல் சாக்லேட்டை தூக்கிப் பிடித்து சாப்பிடுவது போல மாற்றி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது விஜய்யை குறி வைத்து பேச ஆரம்பித்துள்ளார் அமைச்சர் அன்புமணி.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இளைய தலைமுறையினர் இன்றைய நடிகர்களை அப்படியே பின்பற்றுகின்றனர். எனவே புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதை நடிகர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை முன்பு நான் ரஜினிகாந்த்துக்கு வைத்தபோது அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அவர் கடைசியாக நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய இரு படங்களிலும் அதுபோன்ற காட்சி இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார்.

அதேபோல தற்போது முன்னணியில் உள்ள நடிகர் விஜய்யும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது. அதுபோன்ற காட்சிகள் இனிமேல் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றால் அந்தக் காட்சிகளுக்கு தணிக்கை வாரியமும் அனுமதி தரக் கூடாது என்று கூறியுள்ளார் அன்புமணி.

ஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக




ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஓம் சாந்தி ஓம் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து, பாரா கான் இயக்கியுள்ள படம் ஓம் சாந்தி ஓம். ஷாருக்கான் நடிகராக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடி போட்டுள்ளார் தீபிகா.
படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கூட ஓம் சாந்தி ஓம் அலை படு பயங்கரமாக வீசி வருகிறது. திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே 19 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது ஓம் சாந்தி ஓம
இந்திய சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓம் சாந்தி ஓம் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சில மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகாலையிலேயே இப்படத்தை திரையிட்டுள்ளனர். ரஜினியின் சிவாஜி படமும் இதுபோலத்தான் அதிகாலையிலேயே, சில ஊர்களில் நள்ளிரவிலேயே கூட திரையிடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இங்கிலாந்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்களையும் இப்படம் வசூலித்துள்ளது.
2வது வாரத்தில் பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தினசரி 14 முதல் 16 காட்சிகள் வரை திரையிடப்பட்டன.
இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.
ஷாருக்கானின் திரையுலக வரலாற்றில் இப் படம் மிகப் பெரிய சாதனைப் படம் என்று பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் சல்மான் கான், ராணி முகர்ஜி, கஜோல், சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, சைப் அலி கான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்தப் படத்தை உலகளாவிய அளவில் ஈராஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் திரையிட்டுள்ளது. ஏற்கனவே மெய்ன் ஹூன் நா மற்றும் பஹேலி ஆகிய படங்களையும் இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் திரையிட்டுள்ளது